[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1123

சில நாட்கள் தங்கியருளினர் என்பதாம்; தொண்டர்க்கு எல்லாம் பாண்டிமாதேவியார் - குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல என்ற குறிப்புமிது.
கோதில் புகழ் - என்பது பற்றி முன் உரைக்கப்பட்டது; கடைப்பிடிக்க.
குறைவறுத்தல் - உலகியலில் வேண்டிய உணவு உறையுள் முதலியன எல்லாம் குறைவின்றிப் பெறுவித்து இனிதிருக்கச் செய்தல். பாண்டிமாதேவியார் - மாதேவியாராதலின் இல்லறநெறியில் மன்னனைச் சார்ந்தோர்க்குக் குறைவறுத்தல் அம்மையார் கடனாயிற்று; குலச்சிறையார் மந்திரியாராதலின் மன்னவன் பணி செய்தல் அவர் கடனாயிற்று.
திருத்தொண்டரானார்க் கெல்லாம் - என்றது இங்குக் குறைவறுத்துப் போற்றப்பட்டவர் சிவபெருமான் தொண்டர்கள் என்ற நிலை குறிக்கப்பட்டது. இதுவே பதிபுண்ணியமாயும், இங்குப் பிள்ளையாருடன் நின்ற தன்மைக்கு ஏற்றதாயும் உள்ளமையின் என்க. அரசன் கடமையாகிய ஏனைய உலகரைப் பாதுகாக்கும் பசுபுண்ணியம் வேறாதலின் இவ்வாறு தொண்டரானார்க்கு என்று பிரித்துக் கூறினார். ஆனார் - பிள்ளையாரது திருவருளால் அந்நாட்டிற் சைவம் பெருக நீறிட்டுத் தொண்டராயினாரும் அடங்க என்ற குறிப்பும் தருவது. "பரமனடியா ரானார்க ளெல்லா மெய்தி யுண்கவென"(1524) என்றவிடத்துரைத்தவை பார்க்க.
நளிர்வேலைக்கரை - கடற்காற்றுக் குளிர்வீசும் கரை.
நயந்திருந்தார் - மன்னவன் பொருட்டந்நகரின் விரும்பி எழுந்தருளிய தன்றியும், ஈழநாட்டுத் தலங்களைப்பாடி அந்நாட்டினரையும் வழிப்படுத்தி உய்யச்செய்யும் கருணை நோக்கமும் காரணமாம் என்பது மேல்வரும் பாட்டின் குறிப்பாதல் காண்க. ஈழநாடும் பாண்டிநாடு போலவே புறச்சமயிகளாகிய புத்தர் சார்பினால் அலைப்புண்டு வருந்தியமை திருவாதவூரடிகள் வரலாற்றினாலும் அந்நாட்டுச் சரிதங்களாலும் அறியக்கிடத்தல் கருதுக.

889

II திருவிராமேச்சுரம் (சேது)
திருச்சிற்றம்பலம் பண் - பழம்பஞ்சுரம்
திரிதரு மாமணி நாக மாடத் திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக் கவெரி யேந்தி யாடு நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்த மிலங்கு கான லிராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை சூடு சென்னி விமலர் செயுஞ்செயலே.

(1)

தேவியை வவ்விய தென்னி லங்கை யரையன் றிறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ண னன்ணு மிராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்த னல்ல மொழியா னவின்றேத்தும்
பாவியன் மாலைவல் லாரவர் தம்வினை யாயின பற்றறுமே.

(11)

திருச்சிற்றம்பலம்.

பதிகக் குறிப்பு:- இறைவர் எல்லியில் எரியேந்தியாடும் நலமே தெரிந்துணர்வார்கள், அஃது இராமேச்சுரமேயாரது அருட்செயல் என்று வழிபடுவர்.
பதிகப் பாட்டுக் குறிப்பு: -(1) கதிக்க - ஓசைசெய்ய; ஆடும் நலமே - உயிர்களது உடற்பிணி நீங்கும் அருட்கூத்தின் நன்மையினையே; எரிகதிர் முத்தம் இலங்கு கானல் - முத்துக்கள் ஒளிவீசிக் கரை சாரும் நெய்தலங் கானல்; திருமறைக்காட்டினின்றும் தொடரும் இக்கடற்கரையில் முத்துக் குளிக்கும் துறைகளுள்ளமை