| குறிப்பு; 1529-ம் பாட்டும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. "துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை" (திருத்தொண்டத்தொகை - 8) என்று தொண்டைநாட்டுக் கடற்கானலைத் தமிழ்நாவலர் பெருமான் காட்டியருளும் கருத்தும் இங்குவைத்துக் காண்க. விரிகதிர் - இனிக் கதிர்விரிய நின்ற பிறை; -(2) நெறி - பாட்டுடன் வீணை முதலியவற்றைத் தடவுதல்; எறிகிளர் - வீசி மேலெறிந்து எழும்; -(3) மலைவளர் காதலி - தலஅம்மை பெயர்; தாயுமானார் பாடலில் அப்பெயர்பற்றிய பகுதி காண்க; மயக்கா - உயிர்களைத் தமது மறைப்பாகிய திரோதானசத்தியு ளகப்படுத்தி; இலைவளர் - நீண்ட இலைகள் மிகவுமுடைய தாழையின் இயல்பு குறித்தது; முன்பதிகம் (1) பார்க்க; தலைவளர் கோலநன் மாலை - முன்பதிகம்(1) பார்க்க;- (4) மாதனம் - பெருந்தனங்கள்; தேதெரி - தேசுடைய - ஒளியுடைய - எரி; தேது - தேசு; ஏதமிலார் - ஏதங்களை நீக்க வேண்டுபவர். இலார் - இல்லையாக விரும்புவோர்; போது - மாலைப்பொழுது; -(5) ஏலநறும் - ஏலம் - மணத்தின் பொதுமை குறித்தது; ஏல - பொருந்த என்றலுமாம்; இப்பொருளில் ஏல(ப்) - பாடும் என்று கூட்டுக; -(6) (கணை) பிணை - பிணைத்த; தொடுத்த; இணைபிணை - பிணை - மான்; இணை - ஒத்த இரண்டு; இணைமலர் - பொருந்திய மலர்; அணைபிணை - சேரப் பிணித்த; கட்டிய; -(7) நீர் - கங்கை; ஊரினார் துஞ்சிருள் - சங்காரகாலம்; "நடு நல் யாமம்"(திருவிசைப்பா); -(8) சுண்ணவெண் ணீறுபூசி - பொற்சுண்ணமாக வெண்ணீற்றினைப் பூசி. "சாந்தமென நீறணிந்த"(தேவா); பொன் திகழ் - பொன்போல விளங்கும்; பொன்னுடன் விளங்கும் என்றலுமாம்; குன்று - கயிலை; -(9) கோவலன் - திருமால்; மேவலன் - பொருந்த வல்லவன்; சே - இடபம்; வல - வல்லமையுடைய; -(10) தட்டை - தட்டுடை; பிரட்டு - பொய்; சீவரம் - துவருடை; இன் - (சோலை) இனிய; இன் - யாழ் என்று கூட்டியுரைப்பினுமமையும்; -(11) தேவி - சீதை; ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் - இராமன். முன்பதிகம் (2) பார்க்க. |
| குறிப்பு:- இப்பதிக முழுதும் எல்லி எரியேந்திக் காடிடமாக ஆடும் திறம் போற்றப்பட்டமையும், அம்மை யுடன்பாடக் கூடி யாடுகின்றமையும் கூறியருளிய குறிப்பினால் இஃது சேதுக் கரையில் அருளப்பட்டதென்று கருத இடமுண்டு; முன் பழிபோக்கிப் பின் னருள்செய்யும் குறிப்பும் கருதப்படும். |
2788 | அந்நகரி லமர்ந்தங்க ணினிது மேவி யாழிபுடை குழ்ந்தொலிக்கு மீழந் தன்னின் மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்து செங்கண் மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச் சென்னிமதி புனைமாட மாதோடத்திற் றிருக்கேதீச் சரத்தண்ணல் செய்ய பாதம் உன்னிமிகப் பணிந்தேத்தி யன்ப ரோடு முலவாத கிழிபெற்றா ருவகை யுற்றார். | |
| 890 |
| (இ-ள்) அந்நகரில்....மேவி - அத்திருநகரில் விரும்பி எழுந்தருளி அவ்விடத்தில் இனிதாகப் பொருந்தியிருந்தபடியே; ஆழி....பாடி - கடல் நாற்பக்கமும் சூழ்ந்து சத்திக்கும் தீவாகிய ஈழநாட்டில் நிலைபெற்ற திருக்கோணமலையில் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் செங்கண்ணையுடைய இளமையாகிய இடபத்தினை உடைய இறைவரைத் துதித்து வணங்கிப் பாடியருளி; சென்னி....ஏத்தி -உச்சியில் சந்திரனைச் சூடும்படி |
| |