[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1127

திட்ட அக்கூற்றுவனுக்கு என்றலுமாம்; விரிந்துயர்...பொழில் - இப்பொழில்களினீட்டம் இன்றும் காண நிகழ்வதாம்; -(8) எடுத்தவன் - கயிலையினைப் பெயர்த்து எடுக்க முயன்ற இராவணன்; ஆத்தம் - ஆப்தம்; அன்பு. விரலால் இழித்தவர் - என்க. இழித்தல் - ஆற்றலழித்தல்;- (9) அருவராது - வெறுக்காமல்; - (10) துன்று மொண்...உலவும் - முன் 6 - 7 பாட்டுக்கள் பார்க்க.
தல விசேடம் :- திருக்கோணமலை - ஈழநாட்டுத் தலம். இது "திருக்கணாமலை" என மருவி வழங்கப்படும். மாமேருவின் சிகரங்களை அசைக்காமற் காக்கவும் அசைக்கவும் முறையே சேடனும் வாயுவும் தம்முள் இகலிட்டுச் செய்த வாதத்தில், வாயுவின் பலத்தினால் மேருச்சிகரங்களுள் மூன்று பெயர்ந்து சென்று வீழ்ந்தன என்பதும், அவையே திருக்காளத்தி, திரிசிராப்பள்ளி, திரிகோணமலை என்ற மூன்றாவன என்பதும், ஆதலின் இவை தட்சிண கைலாயம் எனப்பெறுவன என்பதும் வரலாறு. இந்திரன் பூசித்த தலமாமென்ப. கோணம் - வளைவு; கூரிய நுனி - முனை; சிகரத்தைக் குறித்தது. ஆளுடைய பிள்ளையாரும் நம்பிகளும் இராமேச்சுரத்தினின்றபடியே இதனையும் திருக்கேதீச்சரத்தினையும் பாடியருளிய வரலாறு புராணத்துக் காண்க. சிலகாலத்துக்கு முன் அந்நிய நாட்டினர் படையெடுப்பில் இந்நகரைக் கைப்பற்றிய இடச்சுக்காரர்கள் புறச்சமயிகளாதலின் இத்திருக்கோயில் முழுமையும் அடி காணத் தகர்த்துக் கடலுள் வீழ்த்தி இந்நகரைத் தமது படைகள் தண்டு தங்குமிடமாக்கிக் கொண்டனர்; இதில் இருந்த சோமாஸ்கந்தர் - சந்திரசேகரர் முதலிய அரிய பெரிய மூர்த்திகளை மட்டும் அவர் கையிற் படாதபடி அந்நாளில் அன்பர்கள் எடுத்துக் காத்து, அடுத்து 10 நாழிகை அளவில் உள்ள தம்பலகம் என்ற ஊரில் போற்றி வைத்துள்ளார்கள்; உலக அதிசயங்களுள் ஒன்றாகிய "வெந்நீர்க் கிணறுகள் ஏழு" (Seven Hot Wells) இதன் அணிமையில் உள்ளன. இவ்வேழும் ஒரே இடத்தில் உள்ளனவாயினும் வெவ்வேறு அளவுபட்ட வெப்பநிலை யுள்ளன. இவை இராவணன் குளித்துத் தன் தாயின் கடனாற்ற உண்டாக்கினன் என்று கூறுப. இந்நகர் இப்போதும் தண்டு தங்குமிடமாக (Contonment) இருக்கிறது. ஆனால் திங்கள் - வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடைபெறுகிறது. அந்நாட்களில் அன்பர்கள் அதிகாரிகள் உத்தரவின்றியே சென்று வணங்கி வரலாம். ஏனை நாட்களில் அதிகாரிகள் உத்தரவு பெற்றுச் செல்ல வேண்டும். சுவாமி - கோணேசுரர்; அம்மை - மாதுமையாள்; பதிகம் - 1.
இத்தலம் இலங்கைத் தீவில் யாழ்ப்பாணத்துக்குத் தென்கிழக்கில் கீழ் கடற்கரையில் உள்ளது. இலங்கை இருப்புப்பாதை (Ceylon Government Railway) திருக்கோணமலை நிலையத்தினின்றும் 60 நாழிகையளவில் நல்ல கற்சாலைவழி அடையத்தக்கது. மோட்டார் பஸ் வசதி உண்டு.
திருக்கேதீச்சுரம்
திருச்சிற்றம்பலம் பண் - நட்டராகம் - 2-ம் திருமுறை
விருது குன்றமா மேருவி ணாணர வாவன லெரியம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளுங்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டங்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.

(1)

மாடெ லாமண முரசெனக் கடலென தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை யண்ணல்கே தீச்சரத் தடிகளை யணிகாழி