1132 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
| ஒருங்கே இங்கெழுந்தருளியுள்ளார்கள். அம்மூர்த்திகளுக்குத் தனித்தனி கோயில்களும் கண்டு அவ்வப்பெயரும் தீட்டித் திருப்பணி செய்து வழிபட அமைத்தல் சாலச் சிறந்த சிவதருமமாகும். "பாண்டி நாடே பழம்பதி யாகவும்" என்றது திருவாசகக் குறிப்பு. "பொத்தி லாந்தைகள் பாட்டறாப் புனவாயிலே"(நம்பி) என்றபடி ஆந்தைகளின் கூவுதலும், "கார்க் கோழிபோய்ப் புற்றேறிக் கூகூ வெனவழைக்கும் புனவாயிலே" என்றபடி கோழிகள் புற்றேறிக் கூவுதலும், அப்பதிகத்திற் கூறும் வேடுவர் பூசலும், கற்குன்றுந், தூறுங், கடுவெளியும், கடற்கானமும், கள்ளிநீள் கவடும், பூசற்றுடியும் முதலாகிய பொருள்களும் ஒழுக்கமும் இன்றும் காணப்பெற்று எந்தம் பெருமக்களது திருவாக்கின் வாய்மையைக் காட்டி நிற்பன. மூலலிங்க மூர்த்தியும் ஆவுடையாரும் மிகப் பெரிய அளவுள்ளன; இவற்றுக்குப் பரிவட்டம் சாத்தும் நிலை பற்றி "மூன்று முழமும் ஒரு சுற்று (சிவலிங்கத்துக்கு); முப்பது முழமும் ஒரு சுற்று (ஆவுடையாருக்கு)" என்று பழமொழியாய் வழங்கும். விமானமும் பெரியதாய் மிகச் சிறந்த அழகிய அமைப்புடையது. இப்போது திருப்பணியிலும் பழைய அமைதி சிதைவுறாது அவ்வாறே அமைக்கப்பெற்றிருக்கும் சிறப்பும் காணத்தக்கது; பாண்டி நாட்டுப் பதிகளுள் மிகக் கடினமான வழிகளால் சிரமப்பட்டு அடையத்தக்க பதியாய் விளங்குதல் இதன் வழியாடு ஒன்றாலே பாண்டி நாட்டு எல்லாப் பதிகளையும் வழிபட்ட பயன்பெற உள்ள பரிசு போலும். இலக்குமியும் பிரமனும் பூசித்த தலமென்பது தீர்த்தங்களால் அறியப்படும். சுவாமி - பழம்பதி நாதர். அம்மை - கருணைநாயகி; மரம் - புன்னை; கொன்றையுமாம் (பிள்ளையார் பதிகம் - 8); தீர்த்தம் - இலக்குமி தீர்த்தம்; பிரம தீர்த்தம். "புண்டரீ கம்மலர்ப் பொய்கை சூழ்ந்தபுன வாயில்" (பிள்ளையார் பதிகம் - 2; தாமரை இவ்விருவர்க்கு முரித்தாதல் காண்க); பதிகம் 2. | | இது அறந்தாங்கி நிலையத்தினின்றும் தென்கிழக்கே கற்சாலைவழி 7 நாழிகையளவில் ஆவுடையார் கோயில் என வழங்கும் திருப்பெருந்துறை யினின்றும் தெற்கே மட்சாலைவழி மீமிசல் வழியாய் 14 நாழிகையளவில் அடையத்தக்கது; தேவகோட்டை ரோட் நிலையத்தினின்றும் கற்சாலைவழி 6 நாழிகையளவில், தேவகோட்டையை அடைந்து அங்குநின்றும் தென்கிழக்கில் அனுமந்தக்குடி வழியாயில் கற்சாலை மட்சாலை வழியாய் 12 நாழிகையளவிலும் அடையலாம். | 2790 | பதிநிலவு பாண்டிநா டதனின் முக்கட் பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி, விதிநிலவு வேதநூ னெறியே யாக்கி வெண்ணீற்றின் சார்வினான் மிக்கு யர்ந்த கதியருளிக், காழிநகர் வாழ வந்தார் கண்ணுதலான் றிருத்தொண்டர் பலருஞ் சூழ, மதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல, மந்திரியார் பதிமணமேற் குடியில் வந்தார். | | | 892 | | (இ-ள்) பதிநிலவு....போற்றி - பதிகள் பலவும் விளங்குகின்ற பாண்டிநாட்டிலே மூன்று கண்களையுடைய இறைவராகிய சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளிய இடங்கள் பலவற்றையும் துதித்து; விதிநிலவு...கதியருளி - விதிகள் பலவும் விளங்க உரைக்கின்ற வேதநூல்களின் நெறியினையே எங்கும் எவரும் பின்பற்றச் செய்து; வெண்ணீற்றின்...கதியருளி - வெள்ளிய திருநீற்றின் சார்பு பெற்றமையாலே மிகவும் |
|
|
|
|