| மதிநிலவு குலவேந்தன் - பாண்டியன். பாண்டியர்கள் சந்திரகுலத்தில் வந்தவர்கள் என்றும், சோழர்கள் சூரியகுலத்தில் வந்தவர்கள் என்றும் வரலாறு கூறப்படும்; சூரியனால் சந்திரன் ஒளிபெற்று விளங்கும். போற்றிச் செல்ல - சூரியகுலத்து வந்த மங்கையர்க்கரசியம்மையராலும், அவராணை பெற்ற மெய்ம்மை மந்திரியாராலுமேதான் உண்மை விளக்கமும் உய்தியும் பெற்றதென்பது கருதினான்போல இங்குப் "போற்றிச் செல்ல" என்றார். மதியுடைய அரசுக்கும் அமைச்சுக்கும் உள்ள ஒற்றுமை நலமுங் குறித்தபடி. மதிநிலவு என்ற குறிப்புமிது. |
| மணமேற்குடி - தலவிசேடம் (குலச்சிறை நாயனார் புராணம்) III - பக்.793 பார்க்க. இதன் வடக்கில் அணிமையில் உள்ள வெள்ளாறு அந்நாட் பாண்டிநாட்டெல்லை என்பர். |
| 892 |
2791 | அந்நகரி லினிதமர்வா ரருகு சூழ்ந்த பதிகளினீ டங்கணர்தங் கோயி றாழ்ந்து மன்னுதிருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனு மங்கையருக் கரசி யாருங் கொன்னவில்வேற் குலச்சிறையார் தாமுங் கூடிக் குரைகழல்கள் பணிந்துகுறை கொண்டு போற்றச் சென்னிவளர் மதியணிந்தார் பாதம் போற்றிச் சிரபுரத்துச் செல்வரினி திருந்த நாளில்; | |
| 893 |
2792 | பொங்குபுனற் காவிரிநா டதனின் மீண்டு போதுதற்குத் திருவுள்ள மாகப் பெற்று மங்கையருக் கரசியார் தாமுந் தென்னர் மன்னவனு மந்திரியார் தாமுங் கூட அங்கவர்தந் திருப்பாதம் பிரியலாற்றா துடன்போக வொருப்படுமவ் வளவு நோக்கி "இங்குநான் மொழிந்ததனுக் கிசைந்தீ ராகி லீசர்சிவ நெறி போற்றி யிருப்பீ" ரென்று, | |
| 894 |
2793 | சாலமிகத் தளர்வாரைத் தளரா வண்ணந் தகுவனமற் றவர்க்கருளிச் செய்த பின்பு, மேலவர்தம் பணிமறுக்க வவரு மஞ்சி மீள்வதனுக் கிசைந்துதிரு வடியில் வீழ்ந்து ஞாலமுய்ய வந்தருளும் பிள்ளை யாரைப் பிரியாத நண்பினொடுந் தொழுது நின்றார்; ஆலவிட முண்டவரை யடிகள் போற்றி யந்நாட்டை யகன்றுமீண் டணையச் செல்வார்; | |
| 895 |
2794 | பொன்னிவளந் தருநாடு புகுந்து மிக்க பொருவில்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும் பன்னகப்பூ ணணிந்தவர்தங் கோயி றோறும் பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று, | |