| இது முறையும் மரபுமாம். இவை திருப்பூவனூர், திருவெண்ணியூர், திருஇரும்பூளை முதலாயின என்பது கருதப்படும். |
| முள்ளிவாய்க்கரை - இஃது இப்போது ஓடம்போக்கியாறு எனவும், முள்ளியாறு எனவும் வழங்கும்; காவிரிக் கிளைநதி. கடுவாய்க்கரை, பழமண்ணிப்படிக் கரை முதலியவை காண்க. இப்பெயர் நதியின் கரையில் அமைந்த ஊர்ப்பெயராதலும் கூடும். இவ்வாற்றின் வடகரையில் அணிமையில் உள்ளது திருக்கொள்ளம் பூதூர். |
| முன்னணைந்து - என்பதும் பாடம். |
| 896 |
| திருக்களர் |
| திருச்சிற்றம்பலம் பண் - சீகாமரம் - 2-ம் திருமுறை |
| நீரு ளார்கயல் வாவி சூழ்பொழி னீண்ட மாவய லீண்டு மாமதில் தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள் ஊரு ளாரிடு பிச்சை பேணு மொருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி ஆரநின் றவனே யடைந்தார்க் கருளாயே. | |
| (1) |
| இந்து வந்தெழு மாட வீதி யெழில்கொள்கா ழிந்நகர்க் கவுணியன் செந்து நேர்மொழியா ரவர்சேருந் திருக்களருள் அந்தி யன்னதொர் மேனி யானை யமரர் தம்பெரு மானை ஞானசம் பந்தன் சொல்லிவை பத்தும் பாடத் தவமாமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- பொழிலும் வயலும் மதிலும் மறுகும் மாடமும் விழாவுமாக மல்கச் சிறந்த திருக்களருள் பிச்சை பேணுமொருவன் என்பது முதலாகப் போற்றப்படும் இறைவரே அடைந்தார்க்கருளீரே. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : -(1) ஈண்டு மாமதில் - "கனகமதில்" (2473); வாவியும் பொழிலும் வயலும் மதிலும் மறுகும் தேரும் விழாவும் கூட்டி எல்லாச் சிறப்பும் உடன் கூறிய நயம் காண்க; தேர் விழா - பிள்ளையார் எழுந்தருளியது வேனிற்காலம் என்ற குறிப்புத் தருவதாம். "நளிர்வேலைக் கரையினயந் திருந்தா ரன்றே"(2787) என்றதுமிக்குறிப்பு. ஊருளார் - உயிர்கள்; பிச்சை - பசுபோதம்; ஆர்தல் - நிறைதல். அடைந்தார்க்கருளாயே - பதிகக் கருத்தாகிய மகுடம்; "இடர்களையாய் நெடுங்கள மேயவனே" என்புழிப்போல; -(2) தாளினார் - சிவத்தவ முயற்சியுடையார்; தவம் - சிவபூசை; -(3) சேடர் - அறிவுடையவர்; -(4) அன்பு - அருள்; -(7) தாங்கும் மால்வரை - வில்லாகக் குனித்து ஏந்திய; -(11) செந்து நேர்மொழி - செந்து - பெரும் பண்களுள் ஒன்று; "பண்ணினேர் மொழியாளுமை"(தேவா). நேர் - உவம உருபு; அந்தி - செவ்வான ஒளி - அந்திப்பொழுது அதனிற்காணும் செவ்வொளிக் காயிற்று. தீ என்பது குறுகித் தி என நின்றதென்றுகொண்டு, அம்தி - அழகிய தீப்போன்ற என்றலுமாம். தீயினுக்கு அழகாவது நிறத்தால் ஒப்பாயினும் தன்மையால் மாறுபட்டு எரித்தலின்றி அருளுடைத்தாதல். "எரிபோல் மேனிப் பிரான்". |
| தலவிசேடம்:- திருக்களர் - சோழநாட்டில் காவிரித் தென்கரை 105-வது பதி; இது பாரிசாத வனம் என்றும் சொல்லப்படும். தூர்வாசருக்கு இறைவர் வெளிப்பட்டுத் திருக்கூத்துக் காட்சியருளிய பதி. இங்குள்ள நடராசர் அவருக்குக் |