| காட்சியருளிய மூர்த்தி; பராசரர் - காளவர் முதலிய முனிவர்கள் வழிபட்ட பதி. சுப்பிரமணியர் சந்நிதி சிறப்பு. சுவாமி - களர்முளை நாதர்; அம்மை - இளங்கொம்பன்னாள்; தீர்த்தம் - தூர்வாச தீர்த்தம்; மரம் - பாரிசாதம்; பதிகம் 1. |
| இது திருத்தருப்பூண்டி நிலையத்தினின்றும் மேற்கே மட்சாலைவழிக் களப்பாள் போகும் பாதையில் 4 நாழிகையளவில் முத்துப்பேட்டைப்பாதை சந்திப்பினின்றும் வடக்கே மட்சாலைவழி 1 1/2 நாழிகையளவில் அடையத்தக்கது. |
| திருப்பாதாளேச்சுரம் |
| திருச்சிற்றம்பலம் பண் - வியாழக்குறிஞ்சி - 1-ம் திருமுறை |
| மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும் அன்ன மனநடையா ளொருபாகத் தமர்ந்தருளி நாளும் பன்னிய பாடலினா னுறைகோயில் பாதாளே. | |
| (1) |
| பன்பலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப் பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன் தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன இன்னிசை பத்தும்வல்லா ரெழில்வானத் திருப்பாரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- மின்னியல் செஞ்சடைமேல் மதிமத்தமொடு பொன்னியல் கொன்றையினான், வெள்ளைத் தோடமர் காதினல்ல குழையான் என்பன முதலாகப் பலவாற்றானும் அறியப்படும் இறைவன் உறைகோயில் பாதாளே. |
| பதிகப்பாட்டுக் குறிப்பு; -(1) மின்னியல் - மின் போன்ற; இயல் - உவம உருபு; "மின்வண்ண மெவ்வண்ணம் வீழ்சடை"(பொன்வ. அந் - 1); பாடல் - மறை; 2-4-7-8-9-10 பார்க்க; -(2) நீடலர் - மாலை போல நீண்டு அலர்கின்ற; நிரம்பா மதி - பிறை; சுடுநீறு - சுட்டதால் - சங்காரத்தில் அழித்தலால் - விளையும்நீறு; வெள்ளைத் தோடு - சங்குத் தோடு; தோடமர் காதினல்ல குழையான் - ஒரு காதில் தோடும் காதில் குழையும் உடையான்; - (3) சாமம் போக - இரவில்; தூமொழி - மொழியவராகிய அம்மை; செறுவில் - பங்கயம் நின்றலர்தல் - நீர்வளமும் நிலவளமும் காட்டும்; -(5) தேய்பிறை - தேய்ந்து வந்தடைந்தபிறை;- (9) தமது ஆள்வினை - தமது உயிர் முயற்சி;- (10) காலையில் உண்பவர் - கண்தான் கழுவாமுன் ஓடிக் காலையில் கலவைக்கஞ்சியை உண்ணும் புத்தர்;- (11) தன்னொளி - சிவவொளி; சிவஞான விளக்கம். |
| தலவிசேடம்:- திருப்பாதாளீச்சுரம் - காவிரித் தென்கரைத் தேவாரப்பாடல் பெற்ற 104-வது பதி; "பாமணி" - "பாம்பணி" என வழங்கப்படுகின்றது; "பாதாளே" என்பது பதிகத்துட் கண்ட பெயர். பாதாள உலகத்தினின்றும் ஆதிசேடனது தம்பியாகிய தனஞ்சயன் என்னும் அரவு பிலத்தின் வழியே வந்து பூசித்துப் பேறுபெற்ற பதியாதலின் அத்தொடர்புபற்றிப் பாதாள் எனப்பட்டது என்ப. "சர்ப்பபுரம் என்று மொழிபெயர்த்து வடமொழியில் வழங்குதல் காண்க. சுவாமி - சர்ப்பரேசர்; அம்மை - அமுதநாயகி; பதிகம் 1. |
| இது மன்னார்குடி நிலையத்தினின்றும் வடமேற்கே மட்சாலை வழி 1 1/2 நாழிகையளவில் அடையத்தக்கது; திருப்பூவனூரினின்றும் மன்னார்குடிக் கற்சாலை வழி |