1140திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

9 நாழிகையளவில் பாமணியாற்றின் வடகரை மட்சாலைவழி வடகிழக்கை 1 1/2 நாழிகையில் அடைவது மற்றொரு வழி.
2795
மலைவளர்சந் தனமகிலுந் தேக்கு முந்தி
மலர்ப்பிறங்கல் வண்டிரைப்பச் சுமந்து பொங்கி
யலைபெருகி யாளியங்கா வண்ண மாறு
பெருகுதலா லத்துறையி லணையு மோடம்
நிலைபுரியு மோடக்கோ னிலையி லாமை
நீர்வாழ்நர் கரையின்க ணிறுத்திப் போகக்
கலைபயிலுங் கவுணியர்கோ னதனைக் கண்டக்
கரையின்க ணெழுந்தருளி நின்ற காலை,

897

2796
தேவர்பிரா னமர்ந்ததிருக் கொள்ளம் பூதூ
ரெதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலா லோடங்கள் விடுவா ரின்றி
யொழிந்திடவு மிக்கதோர் விரைவாற் சண்பைக்
காவலனா ரோடத்தின் கட்ட விழ்த்துக்
கண்ணுதலான் றிருத்தொண்டர் தம்மை யேற்றி
நாவலமே கோலாக வதன்மே னின்று
நம்பர்தமைக் "கொட்ட"மென நவின்று பாட,

898

2797
உம்பருய்ய நஞ்சுண்டா ரருளா லோடம்
"செலச்செல்ல வுந்து"தலா லூடு சென்று
செம்பொனேர் சடையார்தங் கொள்ளம் பூதூர்
தனைச்சேர வக்கரையிற் சேர்ந்த பின்பு,
நம்பரவர் தமைவணங்க ஞான முண்ட
பிள்ளையார் நற்றொண்ட ருடனி ழிந்து
வம்பலரு நறுங்கொன்றை நயந்தார் கோயில்
வாயிலின்முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.

899

2795. (இ-ள்) மலைவளர்...அலைபெருகி - மலையில் வளர்கின்ற சந்தனம், அகில், தேக்கு முதலிய மரங்களை உந்தி அலைத்துக்கொண்டு, மலைபோன்ற மலர்க் குவியல்களை வண்டுகள் சத்திக்கச் சுமந்து பெருகி அலைகள் மிகுந்து; ஆள்...பெருகுதலால் - ஆள்கள் இயங்காதபடி ஆறு பெருகி வருதலால்; அத்துறையில்...நிலையிலாமை - அந்தத் துறையில் அணையும் ஓடத்தை நீரின் நிலைகண்டு செலுத்தும் ஓடக்கோல் நிலைக்கமாட்டாமையால்; நீர் வாழ்நர்...போக - நீர்வாழ் சாதிகளாகிய மக்கள் கரையினிடத்தே நிறுத்திச் சென்று விடவே; கலைபயிலும்....காலை - கலைகள் பயிலும் கவுணியர் தலைவராகிய பிள்ளையார் அதனைப் பார்த்து அந்தக் கரையின்கண்ணே எழுந்தருளி நின்றபோது;

897

2796. (இ-ள்) தேவர்பிரான்....தோன்ற - தேவர்பெருமானது திருக்கொள்ளம் பூதூர் எதிரிலே தோன்ற அதனைக் கண்டு; திருவுள்ளம் பணியச் சென்று மேவுதலால் - அதன்கட் சென்று பணிவதற்குத் திருவுள்ளம் பொருந்துதலினாலே; ஓடங்