2798 | நீணிலைக்கோ புரமதனை யிறைஞ்சிப் புக்கு நிகரிலாத் தொண்டருட னெருங்கச் சென்று வாணிலவு கோயிலினை வலங்கொண் டெய்தி மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று "தாணுவே! யாற்றின்க ணோட முய்க்குந் தன்மையா லருடந்த தலைவா! நாகப் பூணினாய்! களிற்றுரிவை போர்த்த முக்கட் புனிதனே!" யெனப்பணிந்து போற்றி செய்தார். | |
| 900 |
| (இ-ள்) வெளிப்படை நீண்ட நிலைகளையுடைய திருக்கோபுரத்தினை வணங்கித் திருவாயிலினுட் புகுந்து, ஒப்பற்ற திருத்தொண்டர்களுடன்கூட நெருங்கிப்போய், ஒளி பொருந்திய திருக்கோயிலினை வலங்கொண்டு சேர்ந்து, பிறையினைச் சூடிய சடையினையுடைய பெருமான் திருமுன்பு நின்று "தாணுவே! ஆற்றினிடையே ஓடத்தினைச் செலுத்தித் தந்தருளிய தன்மையினாலே அருள் தந்த தலைவரே! நாகங்களைப் பூணாகவுடையவரே! யானையினது உரிவையினைப் போர்த்த முக்கட் புனிதரே!" என்று பணிந்து துதித்தருளினார். |
| (வி-ரை) பதிகம் பாடி ஆற்றின் ஓடத்தினைச் செலுத்திக் கோயிலைச் சேர்ந்த பின்பு பிள்ளையார் அங்கு வழிபட்ட சிறப்புக் கூறுவது இத்திருப்பாட்டு. |
| தாணு - தாங்குபவர்; "வயிரத் தூணே" (தேவா); நிலைபெற்றவர் என்றலுமாம். |
| தலைவா - சார்வாக அடைந்தாரைக் காக்கும் தன்மை தலைவர்க்குரியது. "விலையிலாட்கொண்ட விகிர்தனை" (பதிகம் - 3). |
| நாகப்பூண் - களிற்றுரிவை - பெரிய இடையூற்றையும் விலக்கி ஒழித்தலும், தீமையினையே நன்மையாக்குதலுமாகிய ஆற்றல்களைக் குறித்தன. "ஆடல் பேணிய அடிகள்" (பதிகம் - 6). |
| களிறுரித்தல் முதலிய வீரச் செயல்கள் கருணைப் பெருக்காற் செய்யப்பட்டனவாதலின் இறைவரது தூய தன்மைக்குப் பங்கமில்லாமை கூறுவார் போர்த்த முக்கட் புனிதனே என்றார். |
| போற்றி செய்தார் - ஆற்றினிடையே தோன்றாத்துணையாய் நின்ற அற்புதராதலால் இவ்வாறு நினைந்து நினைந்து கோயிலில் திருமுன்பு போற்றி செய்தனர். கடலினிடையே பதிகம் பாடிக் கல்லே மிதப்பாக மிதந்து கரையேறிப் போந்த அரசுகள் திருப்பாதிரிப் புலியூரில் புகுந்து இறைவரது திருமுன் "ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாகி" என்றெடுத்துத் "தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே" எனப் போற்றிய நிலை ஈண்டுக் கருதத் தக்கது. |
| போற்றி செய்தார் - திருமுன் போற்றிய இப்பதிகம் கிடைத்திலது! |
| பரவிப் போற்றல் - என்பதும் பாடம். |
| 900 |
2799 | போற்றிசைத்துப் புறம்போந்தங் குறையு நாளிற் பூழியன்முன் புன்சமயத் தமணர் தம்மோ டேற்றபெரு வாதின்க ணெரியின் வேவாப் பதிகமுடை இறையவரை யிறைஞ்ச வேண்டி, | |