| விரித்து மேல்வரும் பாட்டில் ஆசிரியர் விளக்குதல் காண்க. "அன்புடையானை" (தேவா - 11). |
| 902 |
| III - திருநாள்ளாறும் திருவாலவாயும் (வினாவுரை) |
| திருச்சிற்றம்பலம் பண் - நட்டபாடை - 1-ம் திருமுறை |
| பாடக மெல்லடிப் பாவை யோடும் படுபிணக் காடிடம் பற்றி நின்று நாடக மாடுநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல் சொல்லாய்? சூடக முன்கை மடந்தை மார்க டுணைவரொ டுந்தொழு தேத்தி வாழ்த்த ஆடக மாட நெருங்கு கூட லாலவா யின்க ணமர்ந்த வாறே! | |
| (1) |
| அன்புடை யானை யரனைக் கூட லாலவாய் மேவிய தென்கொ?லென்று நன்பொனை நாதனை நள்ளாற் றானை நயம்பெறப் போற்றி நலங்கு லாவும் பொன்புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன் ஞானசம் பந்தன் சொன்ன இன்புடைப் பாடல்கள் பத்தும் வல்லா ரிமையவ ரேத்த விருப்பர் தாமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம். |
| பதிகக் குறிப்பு :-2801-ல் ஆசிரியர் காட்டியருளுதல் காண்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு: - (1) பாடகம் - காலணி; சூடகம் - கைவளையணி; துணைவர் - கணவர் - நாயகர்; ஆடகம் - பொன்; ஆடகமாடம் - பொன் அணிந்த மேனிலை மாடங்கள்; - (2) நங்கள் - நங்களை; நம்மை; நாங்கள் என்றலுமாம்; - (3) புண்ணியவாணர் - உலக இன்ப ஏதுவாகிய புண்ணியம் புரிந்தோர்; மாதவர் - சிவபுண்ணியமாகிய பூசை புரிந்தோர்; தவம் - சிவபூசை; அண்ணலின் பாடல் - இறைவனது தன்மை பாடும் பாடல் - கீதம் முதலாயின; எடுக்கும் - மேலோங்கப் பாடும்;-(4) பூவின் கண் வாசம் போலவும், புனலில் பொற்பும் போலவும், சாந்தின் நாற்றம் போலவும், நாவினில் பாடல் போலவும் பிரிப்பின்றி உயிர்களுடன் கலந்து நின்ற - நம்பெருமான் என்றது குறிப்பு. வாசமும், பொற்பும், நாற்றமும், பாடலும் உடைய நள்ளாறு எனக் கூட்டியுரைத்தலுமாம். இப்பொருளில் புனலிற் பொற்பாவது நீர்ச் சிறப்பாலாவது; தேவர் முதலாயினோர் வந்து திருவாலவா யிறைவரை வழிபடுதல் குறிப்பு; புராண வரலாறுகள் பார்க்க;- (5) மாலையும்...பாட்டும் - இவை பூசைக்குரிய அங்கங்கள்; நம்பும் பெருமை - நம்பி வந்து உலகம் வழிபடும் பெருமை. நால் அம்புதங்களால் - என்க. நான்மாடக்கூடலான திருவிளையாடல் குறித்தது;- (6) போகமும் புண்ணியர் நின்னை மனத்துவைத்து நண்ணும் புணர்வு பூண்ட ஆகமுடையவர் - போகங்களை நுகரும்போதும் அவற்றில் மூழ்கி மனமழிந்துபடாது உம்மையே மனத்துள் மறவாது வைத்து அவற்றுள் உடலளவாய்ச் சார்ந்து நிற்கும் பெரியோர்;- (7) பூவண மேனி இளையவர் - பூவின் வண்ணம் போன்ற மேனியினையுடைய பெண்கள்; ஆவண வீதி - கடைவீதி;-(8) புலன்களை...செய்யும் - பொறிவழி வரும் ஐம்புல வின்பங்களை நீக்கி உள்ளத்தை அந்தக்கரணங்களுள் புந்தியின் வழிச் செலுத்தி உண்முகமான தியானத்தில் உறைத்து நிற்கும்; அலங்கல் நல்லார் - பெண்கள்;- (9) மணியொலி சங்கொலியோடு - இவை நித்தியத்திலும், மாமுர சின்னொலி - இது நைமித்திகமாகிய திருவிழாச் சிறப்புக்களினும் நிகழ்வன. இவ்வேறுபாடு குறிக்க ஒடு உருபு கொடுத்துப் பிரித்தோதினார். இவ்விருவகை ஒலிகளும் என்றும் ஒவாது என்றது ஆண்டு முழுதினும் எல்லா மாதங்களினும் திருஆலவாயில் திருவிழா நிகழ்தல் ஒழியாதிருக்கும் தன்மை குறித்தது; மேல்வரும் பாட்டு பார்க்க. |