[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1149

The City of festivals என்பர் நவீனர்;- (10) நடுக்குற - அமணருடன் அனல்வாத நிகழ்ச்சிக் குறிப்பு. "நடுங்கி" நின்றிட்டார்(2685) என்றது காண்க. எடுக்கும் விழ - நிமித்தம்பற்றிச் செய்யப்படும் விழா; நைமித்திகம் என்ப. நன்னாள் விழா - நிமித்தம் பற்றாது செய்யப்படுவன; நிமித்தம் என்ப. பலி - இன்பு - பலியும், விழாவின் அங்கமான மகிழ்வுதரும் ஏனை அங்கங்களும். பலி - விழாவின் இன்றியமையாத பகுதி. "பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்"(மயிலை - தேவா); எத்திசையும் அடுக்கும் பெருமை - விழாக் கண்டு சேவிக்க நாற்றிசையினின்றும் மக்கள் போதருதல் இன்றும் காணத்தகும் சிறப்பு;- (11) அன்புடையானை....போற்றி நலங்குலவும் - பதிகக் கருத்தும் குறிப்புமாம்; அரனை - நள்ளாற்றானைக் கூடல் - மேவியதென்கொலென்று - போற்றி என்று கூட்டுக. நள்ளாறுடைய நம்பெருமான்! கூடல் ஆலவாயின்கணமர்ந்தவாறு இது என்கொல் சொல்லாய் என இப்பதிக ஏனைப் பாட்டுக்களைக் கூட்டி முடிக்க.
தலவிசேடம்:- முன்னர் III பக் - 407 பார்க்க. சுவாமி பெயர் நாடுடை நாயகர் என்பது பதிகம் 2-வது பாட்டிற் காண்க. அதனை ஆசிரியர் 2799-ல் வைத்துக் காட்டியருளினர்.
2801
"தென்னவர்கோன் முன்னமணர் செய்த வாதிற்
   றீயின்க ணிடுமேடு பச்சை யாக்கி
யென்னுள்ளத் துணையாகி யால வாயி
   லமர்ந்திருந்த வாறென்கொ லெந்தா!" யென்று
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவிப் போந்து
   பண்பினிய தொண்டருட னங்கு வைகி,
மன்னுபுகழ்ப் பதிபிறவும் வணங்கச் சண்பை
   வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்;

903

2802
சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து
   சிவபெருமான் றனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
   சார்தலுமற் றதுவறிந்த சைவ ரெல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை
   யளவிறந்த பல்லியங்கண் முழக்கி யார்த்துப்
பார்குலவு தளிக்காளஞ் சின்ன மெல்லாம்
   "பரசமய கோளரிவந் தா"னென் றூத.

904

2803
புல்லறிவிற் சாக்கியர்க ளறிந்தார் கூடிப்
   புகலியர்தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினி லெழுந்தருளும் பொழுது தொண்ட
   ரெடுத்தவார்ப் பொலியாலு மெதிர்முன் சென்று
மல்கியெழுந் திருச்சின்ன வொலிக ளாலு
   மனங்கொண்ட பொறாமையினான் மருண்ட தங்கள்
கல்வியினின் மேம்பட்ட புத்த நந்தி
   முதலான தேரர்க்குங் கனன்று சொன்னார்.

905