1152திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பிணங்கி வினாவுதல் என்ன சால்பு என்பதும் சிந்திக்க. ஈண்டுச் சைவர் செய்த முழக்கம் நலமறியாப் புத்தரைத் தெருட்டி நல்வழிப்படுத்தும் உண்மைநூல் விதித்த நோக்கம் கொண்டது. இங்குப் பயனும் அவ்வாறே விளைவதனையும் கருதுக. புத்தர்கள் நற்சார்புணர்ந்து உய்யும்படி திருவருள் விளைவாமிது என்பதும் கருதத்தக்கது.

905

2803. (வி-ரை) புல்லறிவிற் சாக்கியர்கள் - முன் "சார்வறியாச் சாக்கியர் (2802) என்றார். அவர்கள் கொள்கைப்படி அறிவுதானும் கணபங்கமாயொழியு மாதலின் அக்குறிப்பும் பெற இவ்வாறு கூறியதும் கருதுக.
அறிந்தார் - பிள்ளையாரது எழுச்சியின் நிலையில் முன்கூறிய முழக்கங்களையும் பொருளையும் அறிந்தவர்.
எதிர்முன் சென்று - பிள்ளையார் எதிரே முன் அணியிற் சென்று; எதிர் என்றது சின்னம் காளம் முதலியவை ஒலிப்போர் தலைவர்க்குப் புறகு காட்டாது எதிர்முகமாக நின்று முழக்கும் மரபு குறித்தது; எதிர் - அவ்வாறு அறிந்தார் எதிரில் என்றுரைப்பாருமுண்டு.
திருச்சின்ன ஒலிகள் - திருச்சின்னம் எக்காளம் இவைகளில் பொருள் தரும் மொழிகளே தனித்தனி ஒலிக்கப்படுதலின் ஒலிகள் என்றார்; ஏனை இயங்களின் ஒலி அவ்வாறின்றிப் பொருளற்ற ஒலியாய்ச் சேர முழக்கப்படுதலின் அவற்றை ஒன்றாகத் திரட்டி ஆர்ப்பு ஒலியாலும் என ஒருமையிற் கூறினார். இது சாதியொருமை என்றலுமாம்.
மனங்கொண்ட பொறாமையினால் மருண்டு - மனங்கொண்ட - மனத்துள் எழுந்த. மருண்டு - மயக்கமடைந்து; பொறாமை - அழுக்காறு; "அழுக்காறெனவொரு பாலி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்"(குறள்) என்ற பாட்டின் படிப்பினையைக் கருதுக. மருளுதல் - ஒன்றைப் பிறிதொன்றாக மயங்குதல்; "பொருளல்லவற்றைப் பொருளென் றுணரும், மருள்"(குறள்).
தங்கள் கல்வி - தமது சமயக் கோட்பாடுகளின் கல்வி.
புத்தநந்தி - புத்தருட் சிறந்தோர் - துறந்தோர் - புனையும் பெயர் மரபு. "புத்தநந்தியும்...முதலதாகிய பெயர்கொளா"(தேவா - பண் - கொல்லி).
கனன்று சொன்னார் - சினமீக்கூர்தலினால் அமைதியாக நினைந்து உண்மையுணர மாட்டாதவராயினர் என்பது குறிப்பு. "உள்ளங் கவர்ந்தெழுந் தோங்குசினம்"; மேல் "வெகுண்டு சொன்னான்" என்பதும் காண்க.

905

திருத்தெளிச்சேரி
திருச்சிற்றம்பலம் பண் - இந்தளம் - 2-ந் திருமுறை
பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.

(1)

திக்கு லாம்பொழில் சூழ்தெளிச்சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல் லார்க டடமுடித்
தொக்க வானவர் சூழ விருப்பவர் சொல்லிலே.

(11)

திருச்சிற்றம்பலம்