1158திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

அருமறைச்சொல் - என்பதும் பாடம்.

908

2807

ஏறுயர்த்தார் சைவநெறி யாணை யுய்க்க,
  வெதிர்விலக்கு மிடையூற்றை யெறிந்து நீக்கும்
மாறில்வலி மந்திரமா மசனி போல
  வாய்மையுரைத் திருத்தொண்டர் வாக்கி னாலே
வேறுமொழிப் போரேற்பான் வந்த புத்தன்
  மேனியையுந் தலையினையும் வெவ்வே றாகிக்
கூறுபட நூறியிடப் புத்தர் கூட்டங்
  குலைந்தோடி விழுந்துவெருக் கொண்ட தன்றே.

909

(இ-ள்) ஏறுயர்த்தார்....உய்க்க - இடத்தை உயர்த்த இறைவரது சைவநெறியின் வந்த திருவாணையினைச் செலுத்தியிட; எதிர்விலக்கும்...போல - சிவபூசையில் எதிர்ப்பட்டு அப்பூசையினை விலக்கவரும் இடையூற்றினை அழித்து நீக்குகின்ற தடுக்கலாகாத வலிமையுடைய சிவாத்திரமாகிய இடியினைப்போல; வாய்மை....வாக்கினாலே - வாய்மையுரையினை உட்கொண்டெழுந்த திருத்தொண்டர் வாக்கினாலே; வேறுமொழி...நூறியிட - வேறுபட்ட மொழிகளாற் செய்யும் போரினை மேற்கொண்டு வந்த புத்தநந்தியின் உடம்பையும் தலையையும் வெவ்வேறுபட இருகூறாக்கிச் சிதைவு படுத்த; புத்தர் கூட்டம் .....அன்றே - அப்போதே புத்தர்களது கூட்டம் சடுதியிற் பயந்து ஓடித் திடுக்கிட்டு நடுங்கியது.
(வி-ரை) சைவ நெறி ஆணை - இகல் முதலானவற்றாலன்றிச் சைவநெறியின் விதிப்படி இட்ட ஆணை; உய்த்தல் - செலுத்துதல்; முன்பாட்டிற் கூறியவை நினைவு கூர்க.
எதிர் விலக்கும் இடையூறு - சிவபூசை செய்யவொட்டாத மேலும் நடுவும் கீழுமாகிய மூவுலகங்களினின்றும் மூன்று வகையாலும் வரக்கடவனவாகிய இடையூறுகளை. "நல்ல காரியத்துக்கு நானூறு இடைஞ்சல்" என்ற பழமொழிப்படிச் சிவபூசைக்குப் பற்பலவாற்றானும் இடையூறுகள் வருதல் இவ்வுலகிற் கண்கூடாகக் காணப்படும் உண்மை. "பேரின்ப முத்தியிப் பூமியி லிருந்துகாண, வெத்தனை விகாதம் வருமென்றுசுகர் சென்றநெறி" (தாயுமா).
எறிந்து நீக்கும் - எறிதல் - எதிர்த் தழிவுபடுத்தல்.
மந்திரமாம் அசனி - சிவாத்திர மகா மந்திரமாகிய இடியேறு; மாறில் வலி - என்றார் எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் பிழைபடாத வலிமையுடைமை காட்டுதற்கு. சிவாத்திர வலிமை பற்றி கந்தபுராணம் - பாரதம் - இராமாயணம் முதலியவற்றின் வரலாறுகளும் பார்க்க.
எதிர் விலக்கும் - மந்திரமாம் அசனிபோல - ஆகமங்களில் வகுத்த சிவபூசைமுறையில் மேல்-நடு-கீழ் என்ற மூன்று பக்கங்களினின்றும் பூசைக்கு இடையூறாய் வரும் விக்கினங்களை இடியேறுபோலத் தவறாது விலக்கும் அத்திரமந்திரத்தாலே போக்கிப் பூசை தொடங்குக என்ற விதி இங்கு உவமிக்கப்பட்டது. மாறில்வலி மந்திரம் - சிவாத்திர மந்திரம். இதற்குரிய பாவனை கிரியை மந்திரங்களை அனுபவம்வல்ல தேசிகர்பால் கேட்டுணர்க. அசனி - இடியேறு.
வாய்மையுரைத் திருத்தொண்டர் வாக்கினாலே - வாய்மையுரை - பிள்ளையார் திருவாக்காகிய -"அத்திரமாவன" என்ற தேவாரம். திருத்தொண்டர் வாக்கு - அதனை