| வென்றி....வேந்தன் - வென்றி என்றதனால் இவ்வாதத்தில் வெற்றி எங்களுடையது என்றும், மழஇளங்களிறு என்றதனால் அவ்வெற்றி இன்பந் தருவதாம் என்றும், சண்பை ஆளி - சமயப் பிணக்குடைய மதயானைகளை வெல்லும் தகுதியுடையவர் எனது தலைவர் என்றும், வேதபாரகன் என்றதனால் நீங்கள் உடன்படாது நிந்தனை செய்துழலும் வேத ஒழுக்கங்களையே தாங்கிய மேம்பாடுடையவர் என்றும், மும்மைத் தமிழின் வேந்தன் - அவ்வேதவுண்மைகளையே முத்தமிழில் நாட்டி உங்களை வெல்பவர் என்றும் குறிப்பித்தவாறு கண்டுகொள்க. |
| நன்று மகிழ்ந் தழைக்கின்றான் - நீங்கள் மனங் கொள்வதுபோலப் பொறாமை, இகல், அச்சம் முதலியவாற்றானன்றி மிக்க மகிழ்ச்சியுடன் உங்களை வரவழைக்கின்றான் என்பது; இதனால் நீங்களும் நன்மை பெற உள்ளீர்கள் என்பது குறிப்பு (2823). |
| ஈண்ட....நண்ணும் - ஈண்ட - என்பது விரைவுப் பொருள் தருவதோரிடைச் சொல்; "ஈண்ட நீ வருவாயோலம்"; இதுவரையும் புறச் சமயிகளாகச் சேய்மையில் ஒதுங்கி நின்ற நீங்கள், இங்கு, இனி, இதன் இறுதியில் அணியார்களாகப் பொருந்தச் சேருங்கள் (2823 - 2824) என்பதும் குறிப்பு. |
| நன்மை சாராப் புத்தருடன் - சாரவந்தான் - நன்மை சாரா - இதுவரை நற்சார்பு இல்லாத; சார - இனி நற்சார்பு பொருந்த(2824) என்பது குறிப்பு. சாரார் சாரிபுத்தன் சொல்லணி. |
| வேதபாலகன் - என்பதுவும் பாடம். |
| 913 |
2812 | அங்கணைந்து மண்டபத்துப் புத்த ரோடும் பிள்ளையா ரருகணைய நின்ற போதில், எங்குநிகழ் திருச்சின்னந் தடுத்த புத்த னிருஞ்சிரத்தைப் பொடியாக்கு மெதிரி லன்பர் பொங்குபுகழ்ப் புகலிகா வலர்தம் பாதம் போற்றியரு ளாற்சாரி புத்தன் றன்னை "யுங்கடலை வனும்பொருளு முரைக்க!" வென்ன, வுற்றவா தினைமேற்கொண் டுரைசெய் கின்றான், | |
| 914 |
| தலைவன் - கடவுள் |
2813 | கற்பங்க ளனைத்தினிலும் பிறந்து வீந்து கதிமாறுங் கணபங்க வியல்பு தன்னிற் பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்தநிலை யோகமே பொருந்தச் செய்ய வுற்பவிக்கு மொழிவின்றி யுரைத்த ஞானத் தொழியாத பேரின்ப முத்தி பெற்றான் பற்பலரும் பிழைத்துய்ய வறமுன் சொன்ன பான்மையான் யாங்கடொழும் பரம" னென்றான். | |
| 915 |
| பொருள் - முத்தி |
2814 | என்றுரைத்த சாரிபுத்த னெதிர்வந் தேற்ற விருந்தவத்துப் பெருந்தன்மை யன்பர் தாமும் "நன்றுமது தலைவன்றான் பெற்றா னென்று நாட்டுகின்ற முத்திதான் யாவ" தென்றார்; | |