| தனைகு றிப்புப், பாவனை யுடன்விஞ் ஞானம் பஞ்சகந் தங்கள் கூடி, யோவில்பல் லுணர்வுண் டாகி யொழிவது பிறவித் துன்ப, மாவது பொன்றக் கேடா யொழிவது முத்தி யென்றான்" (திருவாத. புரா - 464 = புத். வாதில் சருக் - 50) என்றும் வருவனவும், பிறவும் காண்க; சௌத்திராந்தகன் முதலியநால்வகைப் புத்தர்களின் சமயக் கொள்கை விவரங்களும், அவற்றின் மறுப்புக்களும் சிவஞான சித்தியார் பரபக்கத்துள் விவரிக்கப்பட்டன; அவற்றைக் கற்றுணர்தல் ஈண்டு வரும் பௌத்த வாதத்தை நன்குணர்தற் குதவிசெய்யும்; கடைப்பிடிக்க. புத்த சரித்திரம், புத்த தருமம், புத்த சங்கம் என்பவை பற்றி மணிமேகலைப் பதிப்பில் மகாமகோபாத்தியாயர் - திரு - உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் விரிவாயப் பௌத்த நூல்களையும் அவைபற்றி மேனாட்டுப் புலவாணர் எழுதியவைகளையும் ஆய்ந்து தொகுத்து எழுதியுள்ளவையும் பார்க்க. |
| பிடகம் - பௌத்தர்களின் சமயநூல்; ஆதிபுத்தனுடன் இருபத்துநான்கு புத்தர்கள் மரபி லுபதேகக்கிரமத்தாற் சொல்லப்பட்ட நூல். அவை வினய பிடகம், சூத்திர பிடகம், அவிதன்ம பிடகம் என மூவகைப்படும். இவை திரிபிடகம் - பிடகத் திரயம் எனவும் வழங்கப்படும். பிடகம் - கூடை. புத்தம் - தருமம் - சங்கம் என்பன முத்திறமணி என்பது பௌத்த வழக்கு. புத்தம் சரணங்கச்சாமி - தருமம் சரணங்கச்சாமி - சங்கம் சரணங்கச்சாமி (நமோ புத்தாய; நமோ தர்மாய; நமஸ்ஸங்காய என்பது மந்திரம்.) என்னும் மும்மணியைக் கூடைபோன்று தாங்குதலால் இது பிடகம் எனப்படும் என்பர். இந்நூல்களைக் கூடையில் சேமித்துத் தாங்குதலால் போந்த பெயர் என்றும் கூறுவர். |
| உணர்வு - அறிவு; பயிற்சியால் வரும் ஞானம். |
| இப்பாட்டினால் உருவம் முதலியனவாய்க் கூறப்படும் ஐந்து கந்தங்களும் பொன்றிக் கெட்டழிதலே முத்தி என்று சாரிபுத்தன் தனது சமயக் கொள்கையிற் கூறுமாறு விடையிறுத்த முத்தியினிலக்கணம் கூறப்பட்டது. |
| 916 |
2815 | ஆங்கவன்றா னுரைத்தமொழி கேட்ட வன்ப ரதனையநு வாதஞ்செய் தவனை நோக்கித். "தாங்கியஞா னத்துடனாங் கந்த மைந்துந் தாம்வீந்து கெட்டனவேற் 'றலைவன் றானும் ஈங்குள'னென் றவனுக்கு விடய மாக யாவையுமுன் னியற்றுதற்கு விகார மேசெய் தோங்குவடி வமைத்துவிழ வெடுக்கும் பூசை கொள்வாரா? ருரைக்க!"வென, வுரைக்க லுற்றான், | |
| 917 |
2816 | "கந்தமாம் வினையுடம்பு நீங்கி யெங்கோன் கலந்துளன்முத் தியி"லென்றா; னென்னக், "காணும் இந்திரியங் கண்முதலாங் கரணந் தானு மில்லையே லவனுணர்ச்சி யில்லை" யென்றார்; "முந்தையறி விலனாகி யுறங்கி னானை நிந்தித்து மொழிந்துடன்மீ தாடி னார்க்கு வந்தவினைப் பயன்போல வழிபட் டார்க்கும் வருமன்றோ நன்மை?"யென மறுத்துச் சொன்னான். | |
| 918 |