| அமைத்தல் வழக்கம். இவை இலங்கையில் உள்ள புத்த விகாரங்களிற் சிறக்கக் காணலாம். வட இந்தியாவில் புத்த கோயில்களிலும் குகை களிலுமுண்டு. |
| ஓங்குதல் - பெரிதாய் அமைதல். |
| விகாரம் செய்தல் - வடிவமைத்தல் - விழாவெடுத்தல் - பூசைபுரிதல் - இவை புத்தர் இவ்வுலகத்தில் இங்கே இருந்து பூசை கொள்கின்றார் என்ற எண்ணத்தாற் செய்யப்படுவன என்பதாம். |
| கெட்டனவேல் - பூசை கொள்வாரார்? - பூசை புலப்பட விடயமாவதற்கு உணர்வு வேண்டும்; உணர்வு உண்டாதற்கு ஐந்து கந்தங்களின் சேர்க்கை வேண்டும்; முத்தியில் ஐந்து கந்தங்களும் அவிந்தழிகின்றன என்பாயாதலின் உனது தலைவனுக்கு அந்நிலையில் உணர்வும், பூசை விடயமாவதும் இல்லை. எனவே நீ "அவன் இங்கிருக்கின்றான்" என்று எடுக்கும் பூசை புலப்பட ஏற்றுக் கொள்பவர் யார்? என்றவாறு. |
| 917 |
| 2816. (வி-ரை) கந்தமாம்....என்றான் - இருவினை காரணமான கந்தவுடம்புகெட முத்தியில் எமது தலைவன் சேர்ந்திருக்கின்றான் (அதனால் விழா எடுத்துப் பூசை செய்தல் பொருந்தும்) என்று சாரிபுத்தன் மறுமொழி கூறினான்; என்ன - என்று கூற. |
| "காணும் இந்திரியம்.....இல்லை" என்றார் - முத்தியிற் சேர்ந்த தலைவனுக்குக் காணுதற்கிய கண் முதலிய கரணங்கள் இல்லையாதலின் உணர்வுதித்தலு மில்லையாம் என்று அவன் விடையினை மேலும் அன்பர் மறுத்தவாறு. |
| "முந்தை அறிவிலனாகி....நன்மை" என - அறிவுணர்தலின்றி உறங்குகின்ற ஒருவனை மற்றொருவன் நிந்தித்து மதிப்பானாயின் முன்னவன் அதனை உணராவிடினும் அத் தீவினைப் பயன் பின்னவனுக்கு வரும்; அதுபோல முதல்வன் முத்தியில் இதனை உணராவிடினும் அவனைப் பூசை முதலியன செய்தலின் பயன் அது செய்தாருக்கு வரும் என்றது. இஃது அன்பருடைய அத்தடையுரையினை மறுத்துப் புத்தன்மேலும் கூறிய விடையாம்; முந்தையறிவு - ஆலய விஞ்ஞானம் பிரவிருத்தி விஞ்ஞானம் என்னும் இரண்டனுள் முன்னதன் காரணமாக வரும் நனவுணர்வாகிய முன்அறிவு. |
| நிந்தித்து மொழிந்து உடல்மீது ஆடினார்க்கு - வைதலும் மிதித்தலும் செய்தோர்க்கு. வினைப்பயன் - அத்தீவினைப்பயன். |
| வினைப்பயன் வருதல் போல - நன்மையும் வருமன்றோ என்க; நன்மை - நல்வினைப்பயன்; தீவினைப்பயன் வருதல் கண்கூடாகப் பெறக் காண்டலின் அதனை உவமானமாக்கிக் காணாத நல்வினைப்பயனைப் பெறுவித்தான். இஃது அவன் எடுத்துக் காட்டிய உவமை; வினைபற்றி வந்தது. |
| 918 |
2817 | சொன்னவுரை கேட்டருளி யன்பர் தாமுந் "தொடர்ந்தவழி பாடுபல கொள்கின் றானுக் கன்னவற்றி னுடன்பாடு மெதிர்வு மில்லை யானபோ தவன்பெறுத லில்லை" யென்றார்; முன்னவற்றி னுடன்பாடு மெதிர்வு மின்றி முறுகுதுயி லுற்றானை முனிந்து கொன்றால் இன்னுயிர்போய்க் கொலையாகி முடிந்த தன்றோ? விப்படியா லெம்மிறைவற் கெய்து மென்றான். | |
| 919 |