[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1171

(இ-ள்) சொன்னவுரை.....என்றார் - முன் கூறியவாறு சொன்ன சாரிபுத்தனது மறுமொழியைக் கேட்டருளி அன்பராகிய சம்பந்த சரணாலயரும், "நீ தொடர்ந்த வழிபாட்டினை ஏற்றுக் கொள்கின்ற உனது தலைவனுக்கு (உணர்ந்து கோடற்குரிய கருவிகளில்லாமையால்) அவற்றில் விருப்பும் வெறுப்பும் இல்லை; அவ்வாறாயினபோது அவன் அவ்வழிபாட்டினை ஏற்றுக்கொள்ளுதலுமில்லை" என்று கூறியருளினார்; "முன்னவற்றில்....முடிந்ததன்றோ?" - தன் முன்புள்ள விடயங்களில் விருப்பும் வெறுப்புமின்றி முறுகிய துயிலினைப் பொருந்திய ஒருவனைக் கோபித்து ஒருவன் கொன்றால் அவ்வாறு கொல்லப்பட்டவனுக்கு உயிர் போவதும் கொன்றவனுக்குக் கொலைப்பாதகமும் வந்து கொலைப்பழி மூண்டுவந்து முடிந்ததல்லவா?; இப்படியால்....என்றான் - இவ்வாறே எமது இறைவனுக்கும் எம் வழிபாடு சென்று பொருந்தும் என்று கூறினான்.
(வி-ரை) தொடர்ந்த....பெறுதல் இல்லை - முன் அறிவின்றி உறங்கினவனை நிந்தித்து மிதித்த ஒருவனுக்கு வரும் வினைப்பயன் போல வழிபட்டார்க்கும் வரும் என்று கூறிய புத்தன் மொழியை மறுத்து, வழிபாட்டினை உடன்பாடாதல் அல்லது வெறுப்பாதல் வரும் உணர்வினுடன் அவன் கைக்கொண்டாலன்றிப் பயன்றருதல் சாலாது. உன் இறைவன் பஞ்சகந்தமும் அவிந்தநிலையாகிய முத்தியில் நின்றானெனப்படுதலால் அவன் வழிபாட்டினைக் கைக்கொள்ளுமாறில்லை; அதனால் பயன்றருமாறுமில்லை என்று அன்பர் கூறியபடி.
முன்னவற்றில்.....எய்தும் - இது புத்தன் அதற்குமேலும் தொடர்ந்து கூறிய மறுமொழி. பயன் வருதலுக்கு உடன்பாடும் எதிர்வும் ஆகிய உணர்வுடைய மனநிலை வேண்டற்பாலதன்று; முன் உணர்வின்றி உறங்கினவனுக்குப் புறநிகழ்ச்சிகளில் உடன்பாடும் எதிர்வுமில்லை; ஆனால் அவனைக் கொன்ற ஒருவனுக்குக் கொலைப்பாவம் வரும். அதுபோல எம் இறைவன் எமது வழிபாட்டில் உடன்பாடும் எதிர்வுமிலனாயிலும் வழிபாட்டின் பயனும் எமக்கு வரும் என்றபடி.
உடன்பாடு - விரும்புதல்; எதிர்வு - வெறுத்தல். இவ்விரண்டும் உணர்வாகிய மனநிலைகள். முறுகு துயில் - மிக்க துயில்.

919

2818
"இப்படியா லெய்து'மென விசைத்து நீயிங்
  கெடுத்துக்காட் டியதுயிலு மியல்பி னான்போன்
மெய்ப்படிய கரணங்க ளுயிர்தா மிங்கு
  வேண்டுதியா னும்மிறைவற்; கான போது
செப்பியவக் கந்தத்தின் விளைவின் றாகித்
  திரிவில்லா முத்தியிற்சென் றிலனு மானான்;
அப்படியக் கந்தத்து ளறிவுங் கெட்டா
  லம்முத்தி யுடனின்ப மணையா" தென்றார்.

920

(இ-ள்) இப்படியால்....போல் - இவ்வாறாக வழிபாட்டின் பயன்றருதல் எம் தலைவன்பாலும் பொருந்தும் என்று நீ இங்கு உதாரணமாக எடுத்துக்காட்டிய (உடன்பாடும் எதிர்வுமாகிய உணர்வின்றி) உறங்கு கின்றவனது தன்மைபோல; மெய்ப்படிய....இறைவற்கு - உடம்பில் உள்ள கரணங்களும் உயிரும் ஈண்டு இச்செயலுக்கு - வழிபாடு கொண்டு பயன்படும் நிலைமைக்கு - உன் இறைவனுக்குஉளவாக வேண்டுகின்றாயன்றோ?; ஆனபோது....சென்றிலனுமானான் - அவ்வாறு உடலும் கரணமும் உயிரும் அவன்