[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1173

"அழிந்திடி னைந்து கந்த முத்தியென் றுரைத்தா யைந்து, மழிந்திடின் முத்தி பெற்றாராரென வினவும் போதி, லழிந்திடு மைந்தி னுண்டா முணர்வென வுரைக்கி லைந்து, மழிந்தன விலையா முத்தி யாவது மில்லை யென்றார்"(திருவாத. புரா - 464) எனவும் வருவன இக்கருத்தை விளக்குதல் காண்க.*
குறிப்பு:- ஞானமுடைய ஆன்மா இல்லையாயின் முத்தியில் இன்பமும் பயனும் இல்லை என்பது முன்கூறிய வாதத்தின் குறிப்பாகும்.

920

நூல்வரு வகை
2819
அவ்வுரைகேட் டெதிர்மாற்ற மறைவ தின்றி
  யணைந்துளனம் முத்தியெனு மதுவும் பாழாங்
கவ்வையினின் றவனையெதிர் நோக்கி ஞானக்
  கடலமுத மனையவர்தங் காத லன்பர்
"பொய்வகையே முத்தியினிற் போனான் முன்பே
  பொருள்களெல்லா முணர்ந்துரைத்துப் போனா னென்றாய்;
எவ்வகையா லவனெல்லா முணர்ந்த தீதும்
  இல்லதுரைப் பாயெனினு மேற்போ"மென்றார்.

921


* இதுபற்றி மகாமகோபாத்தியாயர் திரு. சாமிநாதய்யர் அவர்கள் பதித்த மணிமேகலைப் பதிப்பில் (பக்கம் - 55 56 ) புத்த தருமம் என்ற பகுதியிற் கீழ்க்கண்டபடி வருவன இங்குக்கருதத் தக்கன. "....oldenburg - Page 278 - ஸம்யுக்த நிகாயம் என்ற பௌத்த நூலில் வத்ஸகோத்திரன் என்ற ஒரு துறவி கௌதம புத்தரிடம் சென்று "ஆன்மாவென்று ஒன்று உளதோ?" என்று கேட்டபொழுது புத்தர் மௌன முற்றிருந்தனரென்றும், ஆனால் அங்ஙனம் ஒன்று இல்லையோ என்று பின்னும் அவன் வினவிய பொழுது அதற்கும் புத்தர் ஒன்றும் பேசாமலே இருந்தனரென்றும் கூறியிருக்கிறார். கோசலதேசத் தரசனாகிய ப்ரஸேநஜித் என்பவன் ஸாகேத் நகரத்திற்கும் ஸ்ரீரவஸ்தி நகரத்திற்கும் நடுவிற் போய்க்கொண்டிருக்கையில் க்ஷேமை என்கிற ஒரு பிக்ஷீணியைச் சந்தித்துப் பணிந்து அவளிடத்தில் பௌத்த தருமத்தைப்பற்றித் தான் ஐயுற்ற பொருளைப் பின்வரும் வினா-விடைகளால் தெளிந்து கொண்டளனென்று மேற்கூறிய ஸம்யுக்த நிகாயத்தாலேயே தெரிகின்றது. அரசன்:- "பகவதி! ததாகதன் இறந்த பின்னரும் உளனோ?"; க்ஷேமை : "அரசர் தலைவ! ததாகதன் இறந்த பின்னரும் இருப்பதாக ஆசாரிய புத்தன் சொல்லவில்லை"; அரசன்: "பகவதி! ஆனால் இறந்த பின்பு ததாகதன் இல்லையோ?"; க்ஷேமை; "அரச சிங்கமே! ததாகதன் இறந்தபின்னர் இல்லை என்பதையுங்கூட ஆசாரிய புத்தன் சொல்லவில்லை"; அரசன்: "பகவதி! அங்ஙனமாயின், ததாகதன் இறந்தபின்னர் உளனுமாம், இலனுமாம் என்னலாமோ?"; "பகவதி! ததாகதன் இறந்தபின்னர் உளனுமல்லன், இலனுமல்லன் என்றும் கூறலாமோ?" - இவ்வினாக்களுக்கும் முன்போலவே அந்தப் பிக்ஷீணி "இவற்றைப்பற்றி ஆசாரிய புத்தன் ஒன்றும் சொல்லவில்லை" என்றனள். இவ்வினா விடைகளுங்கூட நிர்வாணமென்பது சூன்யாவஸ்தை யென்றும், ஆன்மாவென்று ஒன்றில்லையென்றும் கௌதம புத்தர் வற்புறுத்திக் கூறினாரென்று காட்டவில்லை" - குறிப்பு:- பகவதி - என்பது பௌத்தருட் பெண்துறவிகளாகிச் சங்கத்தைச் சார்ந்தபிட்சுணி களுக்கு வழங்கும் கௌரவ மரபுப் பெயர்; ததாகதன் - கௌதமருக்கு வழங்கும் பெயர்களுள் ஒன்று.