| செத்ததுபின் னென்றுரைக்கிற் கதியிற் செல்லாத் தே ரனுரை நீர்பெருகிச் சென்றா றாகு மத்தினள வறியாதிக் கரையோர் தம்மை யக்கரைக்கே செல்லவிடு மாசை யாமே" | |
| 97 |
| எனவரும் சிவஞான சித்தியார்த் (பரபக்கம்) திருவிருத்தங்கள் இக்கருத்தை விளக்குவன. ஈதும் இல்லது - முத்தி பாழாயினது போல உரைத்ததும் இல்லை என்றபடி. உம்மை இறந்ததுதழுவிய எச்சவும்மை. |
| உரைப்பாயெனினும் - தக்க ஏதுக்களாற் பொருந்த உரைத்தல் இயலாது என்பது குறிப்பு. |
| இப்பாட்டால் புத்தன் அறநூல் உரைத்தானென்ற நிலைபற்றி வேறுமொருவகையால் வாதம் எடுத்தவாறு. |
| அமுதமுண்டவர் - என்பதும் பாடம். |
| 921 |
2820 | "உணர்வுபொதுச் சிறப்பென்ன விரண்டின் முன்ன துளவான மரப்பொதுமை யுணர்த லேனைப் புணர்சிறப்பு மரங்களில்வைத் தின்ன தென்ற லிப்படியால் வரம்பில்லாப் பொருள்களெல்லாங் கொணரும்விற கினைக்குவைசெய் திடினும் வேறு குறைத்தவற்றைத் தனித்தனியே யிடினும் வெந்தீத் துணர்கதுவிச் சுடவல்ல வாறு போலத் தொகுத்தும்விரித் துந்தெரிக்குந் தொல்லோ" னென்றான். | |
| (இ-ள்) உணர்வு....இரண்டில் - உணர்வானது பொதுவும் சிறப்பும் என்று இரண்டு வகைப்படும் அவற்றுள்; முன்னது....உணர்தல் முன்னையதாகிய பொதுவுணர்வானது ஒரு வனத்தில் உள்ளனவற்றை மரவகை என்று பொதுவாக வுணர்வது; ஏனை....என்றல் - மற்றைய சிறப்பு உணர்வாவது அவ்வனத்தினுள்ள மரங்களை இன்னவை இன்னவை என்று பிரித்து உணர்வது; இப்படியால்...எல்லாம் - இவ்வாறே எல்லாப் பொருள்களி னுணர்வும் ஆம்; கொணரும்.....போல - கொண்டுவரும் விறகுகளைக் கூட்டிக் குவித்துத் தீயிட்டாலும், அவ்வாறன்றி வெவ்வேறாக வெட்டித் தனித்தனியே தீயிட்டாலும் வெம்மையுடைய தீயின் கொழுந்து அதனைச் சுட்டு நாசமாக்க வல்லவாறுபோல்; தொகுத்தும்....என்றான் - தொகையாகக் கூட்டியும், தனித்தனியாக விரித்தும் பழையோனாகிய எம் இறைவன் தெரிவிப்பன் என்று கூறினான். |
| (வி-ரை) தொகுத்தும் விரித்துந் தெரிக்கும் தொல்லோன் - உணர்வு நிகழும் கந்தங்கள் அவிந்து முத்தியிற் போகுமுன்னரே எல்லாப் பொருளும் முழு தொருங்குணர்ந்து நூல் உரைத்தல் எவ்வாறென்றும், ஞானம் கணபங்கமாதலின் எல்லாம் உணர்ந்த தெவ்வாறென்றும் கேட்ட வினாவுக்குச் சாரிபுத்தன் விடை கூறியபடி. |
| இப்படியால் வரம்பில்லாப் பொருள்கள் எல்லாம் - ஒரு வனத்தில் உள்ள மரங்களைப் பிரித்துக் கூறாது தொகுதியாக வைத்துக் காடு என்றல் பொதுஉணர்வு; மரங்களைத் தனித்தனியாகக் காட்டித் தேக்கு - வேங்கை - சந்தனம் - மந்தாரம் என்று கூறி உணர்தல் சிறப்பு உணர்வு. இவ்வாறுதான் எல்லாப் பொருள்களையும் உணரும் உணர்வென்றது - என்றான். |