1178திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

உன் இறைவன்...முத்திபோல் ஆயிற்று - அறிந்தான் என்ற தன்மையும், முத்தி பாழாய் ஒழிந்தவாறே பாழாயிற்று; போல் ஆயிற்று - போலப் பாழ் எனப்பட்டு ஒழிந்ததாயிற்று; முத்தியெனு மதுவும் பாழாம்" (2819) என்று முத்திநிலை பாழாயின தன்மை முன் முடிக்கப்பட்டதாதலின் அதனை உவமை காட்டி அதுபோல் என்றார்.
இவ்வறிவால் உரைத்த நூலும் ஏதமாம் - நூல் - பிடகம்; அறிவு முற்றொருங் குணர்வின்றி முடிந்ததால் இவ்வறிவுகொண்டு உரைத்த நூலும் குறைபாடுடையது என்பது சொல்லாமலே அமையும்; தானே போதரும் என்று முடித்தபடி. முன்(2819) வினவிய இரண்டு தன்மைகளும் சாரிபுத்தனுக்குத் தோல்வியாய் ஒழிதலை முடித்துக் காட்டியவாறு; குற்றமாவன - நால்வகைப் பவுத்தர் மத மறுதலைபற்றிச் சிவஞான சித்தியார் (பரபக்கம்) பார்க்க.
ஏற்கும் ஆறு அருளிச் செய்ய - பவுத்த நூலுட் கூறப்படும் ஏனையவும் இவ்வாறே அவலமாய் ஒழிவன என்றும், சைவ உண்மைகள் வேத சிவாகமங்ளுட் கூறப்படுவனவே உண்மைநெறி காட்டுவன என்றும் பொதுப்படக் கூறித் தெளிவுறுத்த; மேல்வரும் பாட்டுப் பார்க்க. சிறப்பு வகையால் ஆட்கொண்டு தீக்கை செய்து உபதேசித்த நிலை அதன்மேல் வரும் பாட்டிற் கூறுதல் காண்க.
வென்றருளி - வாதத்தில் வென்று. அருளி - அவன் வலிந்து வந்து சினந்து வாதத்தினை முற்பட்டு அறைகூவி அழைத்தானாயினும், தாம் இகலினாலன்றி அருட்டன்மையால் வெற்றி கொண்டனர் என்பதாம்.
பணிந்தார் - "புகலி காவலர் பாதம் போற்றி அருளாற்" (2812) றொடங்கி அதன் துணையால் வென்றாராதலின் வெற்றிகொண்டபின் அதன் பொருட்டுப் "புகலி மன்னர் பாததாமரை பணிந்தார்" என்க, ஈரிடத்தும் புகலி காவலர் - புகலி மன்னர் என்ற தன்மையாற் கூறியது இக்குறிப்பு.
பான்மை - தாங்கள் மேற்கொண்ட சமயப் பண்பு; சமய நிலை.
பணிந்து வீழ்ந்தார் - தமது தோல்வியினைக் கண்டு ஒப்புக் கொண்டும், சைவர்களது வெற்றியினையும் உண்மையினையுங் கண்டும் பணிந்தனர்.

924

2823
புந்தியினா லவருரைத்த பொருளின் றன்மை
  பொருளன்றாம் படியன்பர் பொருந்தக் கூற;
மந்தவுணர் வுடையவரை நோக்கிச் "சைவ
  மல்லாது மற்றொன்று மில்லை" யென்றே
அந்தமில்சீர் மறைகளா கமங்க ளேனை
  யலகில்கலைப் பொருளுணர்ந்தா ரருளிச் செய்யச்,
சிந்தையினி லதுதெளிந்து புத்தர் சண்பைத்
  திருமறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்.

925

(இ-ள்) புந்தியினால்....கூற - புத்தியினையே பற்றுக்கோடாகக் கொண்டு அந்தப் புத்தர்கள் கூறிய பொருள்களின் தன்மைகள் உண்மைப்பொருள்க ளல்லவாகி முடியும் படியினை அன்பராகிய சம்பந்த சரணாலயர் பொருந்தும்படி எடுத்துச் சொல்ல; மந்தவுணர்வுடையவரை... என்றே - மந்தமாகிய உணர்வு உடைய அந்தப் புத்தர்களைப் பார்த்துச் சைவத்திறமேயல்லாது மற்றொன்றும் இல்லையாம் என்றே; அந்தமில்.... அருளிச் செய்ய - அழிவில்லாத சிறப்பையுடைய வேதங்களையும், ஆகமங்களையும், அவற்றின்