| தீக்கை புரிந்து உபதேசித்துப் பிள்ளையார் அவர்களைச் சைவராக்கி உய்யச்செய்த நிலை மேல்வரும் பாட்டிற் கூறப்படும். |
| 925 |
2824 | அன்றவர்க்குக் காழியர்கோன் கருணை நோக்க மணைதலினா லறிவின்மை யகன்று நீங்கி முன்றொழுது விழுந்தெழுந்து சைவ ரானார்; முகைமலர்மா ரியின்வெள்ளம் பொழிந்த தெங்கும்; நின்றனவுஞ் சரிப்பனவுஞ் சைவ மேயாம் நிலைமையவர்க் கருள்செய்து, சண்பை வேந்தர் சென்றுசிவ னார்பதிகள் பணிய வேண்டித் திருக்கடவூ ரதன்மருங்கு சேர வந்தார். | |
| 926 |
| (இ-ள்) அன்று....அணைதலினால் - அன்று அந்தப் புத்தர்களுக்குச் சீகாழித் தலைவராகிய பரமாசாரியரது அருட்பார்வை அணைந்தபடியினாலே; அறிவின்மை அகன்று நீங்கி - அறிவை மறைக்கும் தன்மையுடைய பாசவீட்டம் தம்மைவிட்டு நீங்கியமையால்; (அப்புத்தர்கள்) முன்...ஆனார் - பிள்ளையார் திருமுன்பு தொழுது நிலமுற விழுந்து எழுந்து (அவரால் திருநீறு தரப்பெற்று அணிந்து) சைவர்களாயினர்; முகை மலர்....எங்கும் - தேவ மலர்மழை எங்கும் பொழிந்தது; நின்றனவும்...அருள் செய்து - நின்றன என்றும் வந்தியங்குவன என்றும் கூறப்படும் எல்லா உயிர்வகைகளும் சைவமேயாகும் என்ற நிலைமையினை அந்தப் புத்தர்கள் அறிந்துய்யும்படி அருளிச் செய்து: சண்பை வேந்தர்....வந்தார் - சீகாழித்தலைவராகிய பிள்ளையார் சிவபெருமான் எழுந்தருளிய பதிகளைச் சென்று பணியும்பொருட்டுத் திருக்கடவூரின் பக்கத்திற் சேரும்படி எழுந்தருளி வந்தனர். |
|
| (வி-ரை) அன்று - கருணை நோக்கம் - அணைதலினால் - முன்னர்ப் புல்லறிவினராய்ப் பெருமைகொண்டு கனன்று வலிந்த முறையில், திருச்சின்னம் ஊதித் தெருவிற் செல்வதைத் தடை செய்தனர்(2804); பின்னர் வாக்கின் போர் ஏற்று எதிர்ந்து வந்தனர்(2809); இவ்வாறு மந்த உணர்வுடையவர்கள் இப்போது புண்ணியப் பேறாகிய பக்குவம் வரப் பிள்ளையாரது கருணைநோக்கம் எய்தப்பெற்றனர்; அதனால் என்க. அன்று - அப்பொழுது. கருணை நோக்கம் - பக்குவம் வரும் நிலையில் ஆசாரியன் செய்யும் தீக்கைகளுள் ஒன்ற. சாட்சுஷி தீக்கை என்பர். "பார்த்த பார்வையாலிரும்புண்ட நீரெனப் பருகும் தீர்த்தன்" (திருவிளை. புரா); "வானோன் பவனி வரக்கண்டு வல்வினையேன், ஏனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப், பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லா, நீத்தான் நினைவுவே றாக்கினான்" (நெஞ்சுவிடு தூது - 89-90). |
| அறிவின்மை அகன்று நீங்கி - "சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்க" ளாதலின் "பக்குவநிலை வரப்பெற்றபோது ஆசாரியரது அருட்பார்வை அணையப் பெற்றனர்; பெறவே, முன்னிருந்த "மந்த வுணர்வு"(2823) நீங்கப்பெற்று அறிவின்மையாகிய ஆணவமலப் பிணிப்பும் சிறிது நீங்கலாயிற்று என்பார் அறிவின்மை அகன்று என்றார். அறிவின்மை - அறிவை மறைக்கும் ஆணவமலச் செயல். |
| முன் தொழுது விழுந்து எழுந்து - சம்பந்த சரணாலயர் வாதத்தில் தெருட்டிய வகையால் தமது பொருள் பொருளன்றாம்படி கண்டு தமது பான்மை |