| என்ற வரலாற்று முறையாற் பிரித்து சென்ற முன்றொடர்ச்சியின் நினைவு கூர்தற் பொருட்டு இங்கு வாகீசர் என்ற இப்பெயராற் கூறிய நயம் கண்டுகொள்க. மாமுனிவர் - "வருஞானத் தவமுனிவர் வாகீசர்" (1266); "பரமுனிவன்" (1694) என்றவையும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
| முனிவர் - எழுந்தருளிற்று - இறைவரையும், அத்தன்மை சார்ந்த பெரியோரையும் கூறும் பரவு வழக்கு. |
| அடியார்தமை வினவ - பலதிறத்தினாலும் பல நாட்டினின்றும் அடியார்கள் அவ்வப்போது திருக்கூட்டத்தில் சார்ந்தமையானும், திருக்கடவூரின் அடியார் முன்னர்த் தாம் வாகீசமுனிவரைப் பிரிந்து சென்றருளிய திருமறைக்காட்டின் அணியராந்தன்மையாலும், அடியார்களுக்கு இத்தகைய பெரியார்களின் நிகழ்ச்சிகள் பற்றியே அறிவும் செயலும் தொடர்பும் செல்லுதல் முன்னைநாளின் இயல்பாதலாலும் அடியார்களை வினாவியருளினார். அடியார் - தமது திருக்கூட்டதிலிருந்தாரும், திருக்கடவூரிலிருந்தாரும் ஆகியவர்களுள் அறிந்தார். |
| 927 |
| 2826. (வி-ரை) ஆண்ட அரசு எழுந்தருளி...இருந்தபடி எல்லாம் - அரசுகள் புராணம் பார்க்க. எழுந்தருளி - தமது யாத்திரையில் போந்தருளி; தங்கு - அந்நகரில் தங்கித் திருமடம் சமைத்துப் பலநாள் எழுந்தருளி யிருக்கும். "தங்கித் திருத்தொண்டு செய்வார்....திருமடமங்கொன்று செய்தார்" (1654). |
|
| தொண்டு செயும் மகிழ்ச்சி - அந்நகரிலே தங்குதல் உடல் நலம், நீர்வளம் முதலிய வேறு எக்காரணங்களாலுமன்றித் திருத்தொண்டு செய்து தங்குதலிற் கண்ட மகிழ்ச்சியே என்பதாம். "அங்குறையுந் தன்மை வேண்டி" (1654). |
| எங்கு நிகழ்ந்திட இருந்த - அரசுகள் அங்குத் தங்கிய நலம் எங்கும் பெருகி நிகழ்ந்திட. நலம் உலகம் போற்ற. யாவரும் அறியும்படி. |
| இருந்தபடி எல்லாம் - படி - நிலை; தன்மை. எல்லாம் - முன் அரசுகள் புராணத்துள் இதுபற்றி விரித்த நிலைமைகளை எல்லாம். முன் வரலாறுகளை ஆண்டு விரித்துக் கூறியருளியமையால் இங்கு எங்கு நிகழ்ந்திட இருந்த என்று சுருக்கிச் சுட்டியமட்டிலமைந்தார். |
| 928 |
2827 | அப்பரிசங் கவர்மொழிய வாண்டவர சினைக்காணும் ஒப்பரிய பெருவிருப்பு மிக்கோங்க வொளிபெருகு மைப்பொருவு கறைக்கண்டர் கழல்வணங்கி யருள்பெற்றுச் செப்பரிய புகழ்ப்புகலிப் பிள்ளையார் செல்கின்றார், | |
| 929 |
2828 | பூவிரியுந் தடஞ்சோலை புடைபரப்பப் புனல்பரக்குங் காவிரியின் றென்கரைபோய்க் கண்ணுதலார் மகிழ்ந்தவிடம் மேவியினி தமர்ந்திறைஞ்சி விருப்புறுமெய்த் தொண்டரொடு நாவரச ருழைச்சண்பை நகரரசர் நண்ணுவார்; | |
| 930 |
2829 | அந்தணர்சூ ளாமணியார் பூந்துருத்திக் கணித்தாக வந்தருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டருளி "நந்தமையா ளுடையவரை நாமெதிர்சென் றிறைஞ்சுவது முந்தைவினைப் பய" னென்று முகமலர வகமலர்வார்; | |
| 931 |