2830 | "எதிர்சென்று பணிவ"னென வெழுகின்ற பெருவிருப்பால் நதிதங்கு சடைமுடியார் நற்பதங்க டொழுதந்தப் பதிநின்றும் புறப்பட்டுப் பரசமயஞ் சிதைத்தவர்பான் முதிர்கின்ற பெருந்தவத்தோர் முன்னெய்த வந்தணைந்தார். | |
| 932 |
| 2827. (இ-ள்.) அப்பரிசு அங்கு அவர் மொழிய - அத்தன்மைகளை அவ்வடியார்கள் கூற ஆண்ட அரசினை...ஓங்க - ஆளுடைய அரசுகளைக் காணவேண்டுமென்கின்ற ஒப்பற்ற பெருவிருப்பம் மிகுந்த மேன்மேலும் பெருக; ஒளிபெருகு...அருள் பெற்று - அருளொளி பெருகும் மேகம்போன்ற கரிய கண்டத்தையுடைய இறைவரது திருவடிகளை வணங்கி அருள்விடை பெற்றுக்கொண்டு; செப்பரிய...செல்கின்றார் - செல்லுதற்கரிய புகழினையுடைய சீகாழிப் பிள்ளையார் செல்கின்றாராகி. |
| 929 |
| 2828. (இ-ள்.) பூவிரியும்.....போய் - மலர்கள் விரிகின்ற பெரிய சோலைகள் பக்கங்களிற் பரந்து நிகழும்படி நீர் பரவி ஓடுகின்ற காவிரியினது தென்கரையின் வழியாகச் சென்று; கண்ணுதலார்....இறைஞ்சி - நுதற்கண்ணுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளிய பதிகளை அடைந்து இனிதாக விரும்பி வணங்கிக்கொண்டு போய்; விருப்புறும்...நண்ணுவார் - விருப்பம் பொருந்திய உண்மையடியார்களுடனே திருநாவுக்கரசரிடம் சீகாழிக்கரசராகிய பிள்ளையார் நண்ணுவாராகி; |
|
| 930 |
| 2829. (இ-ள்.) அந்தணர் சூளாமணியார்...வந்தருளும் - மறையவர்களின் சிகாமணியாராகிய பிள்ளையார் திருப்பூந்துருத்திக்கு அணிமையாக வந்தருளுகின்ற; பெருவார்த்தை...கேட்டருளி - பெருவார்த்தையினை வாகீசமாமுனிவர் கேட்டருளி; நந்தமை...என்று - "நம்மையாளுடைய பிள்ளையாரை நாம் எதிர்கொண்டு சென்று வணங்குவது நாம் முன் பிறவிகளிற் செய்த நல்வினையின் பயனாகப் பெறத்தக்கதாம்" என்று கொண்டு; முக மலர அக மலர்வார் - முகமலர்ச்சி கொள்ள மனமலர்வராய்; |
| 931 |
| 2830. (இ-ள்.) எதிர் சென்று....தொழுது - எதிர் சென்று வணங்குவேன் என்று திருவுள்ளத்தில் மேன்மேல் எழுகின்ற பெருவிருப்பத்தினாலே கங்கையாறு தங்குதற்கிடமாகிய சடைமுடியினை உடையவராகிய சிவபெருமானது நல்ல திருவடிகளைத் தொழுது; அந்தப் பதிநின்றும்...வந்தணைந்தார் - அந்தப் பதியினின்று புறப்பட்டுச் சென்று பரசமயங்களின் கேட்டினைச் சிதைத்த பிள்ளையாரிடத்து முதிர்கின்ற பெருந் தவத்தோர்களாகிய அடியார்களின் முன் பொருந்த வந்து அணைந்தருளினர். |
| 932 |
| இந்த நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபுகொண் டுரைக்க நின்றன. |
| 2827. (வி-ரை.) அப்பரிசு - "எழுந்தருளி...இருந்தபடி எல்லாம்" (2827) என முன்பாட்டிற் கூறியவை. இவை திருப்பழையாறை வடதளியில் சமணர் தூரறுத்து இறைவர் கோயிலை விளக்கங் கண்டதும், திருப்பைஞ்ஞீலியினருகில் இறைவர் அருளாற் றந்த பொதி சோறும் நீரும் உண்டதும், தொண்டை நன்னாட்டுப் பதிகளை வணங்கிக் கயிலை காணச்சென்றதும், அங்குநின்று மீண்டு திருவையாற்றிற் கயிலைக் காட்சி கண்டதும், அதன்பின் சோழநாட்டுப் பதிகளை வணங்கித் திருப்பூந்துருத்தியிற் சார்ந்து அங்குறையுந் தன்மை வேண்டித் திருமடம் செய்து எழுந்தருளியிருந்ததும் முதலாயின. இவை (1555 முதல் 1655வரை) அவர்தம் புராணத்துள் விரிக்கப்பட்டன. இவையனைத்தும் பெறவைத்து இருந்தபடி எல்லாம் என்ற தெய்வக் கவிநலம் கண்டுகொள்க. இவ்விரு பெருமக்களும் திருமறைக்காட்டிற் பிரிந்தபின் நிகழ்ந்த |