| திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியே....களிப்புற வருவார் - என்பதும் பாடம். |
| 934 |
| 2833. (வி-ரை.) அப்பர்தாம்....அருள் செய்ய - தாம் சென்று காண நினைந்த பதியின் திருமடத்தினுள் அப்பொழுது அவர் இல்லை என்ற தோற்றம் ஞானநாட்டத்தில் விளைந்ததாதலின் இப்பொழுது எங்குற்றார் என்றருளினர். அப்பர் - முதலிற்கண்டபோது தாமே அழைத்த பெயர். |
|
| இப்பொழுது எங்குற்றார் - எனற்பாலது எங்குற்றார் இப்பொழுது - என மொழி வைப்புமுறை நிலை மாறியது புந்தியினில் வேறொன்று நிகழ்ந்ததன் காரணத்தாலாகிய விளைவு. ஆயின் வேறொன்று நிகழ்ந்ததனால் அப்பர் தாம் சென்று காண நினைந்த இடத்தினில்லாமை கண்டனரேயன்றி, அவர் இங்கே சிவிகை தாங்கி வருதலைக் கண்டிலர். அதனாலே எங்குற்றார் இப்பொழுது? என வினவியருள வேண்டியதாயிற்று. இஃதென்னையோ? எனின், தாம் நிலத்திற் பணிவதும், சிவிகை தாங்கப்பெற்று வருவதும் பிள்ளையார் காணாவகை நிகழ்தல் வேண்டுமென்று அப்பர் பெருமான் திருவுள்ளங் கொண்டனராதலின் இவை அவர் காணாவகையே நிகழ்ந்தன;இஃது அப்பர்பெருமானது "திருத்தொண்டினுறைப்" பின் வலிமை என்க. |
| செப்பரிய புகழ்த் திருநாவுக்கரசர் - செப்புவார் - செப்பரிய - செப்புவார் - சொற்பின் வருநிலை; செப்பிய இப்பொருளினாலும் அவர் புகழ் செப்பரியதாயிற்று என்பது; செப்பும் பொருளின் சிறப்பேயன்றி அதனைக் கூறும் சொல்லின் வளமும் வாய்க்கப் பெற்றவர் என்க. பிள்ளையாரது திருவடிகளை மனம் மொழி மெய் என்ற மூன்றானும் நேரே தாங்குதல் ஒப்பற்ற பெருந்தவப் பயன் என்ற உண்மையினை ஆதலினால் எனக் காரணகாரிய முறை புலப்பட வைத்துக் கூறிய வகையினால் சிவஞானபோதம் 2-8-9-10-11-12 சூத்திரங்களிற் போந்த உண்மைகளை யெல்லாம் ஒருங்கே பெறத் தேற்றிய திறம் செப்பரிய புகழ் எனப்பட்டது. |
| யான் உய்ந்தேன் - என்க. வினைமுற்று முன்வந்தது. விரைவுக் குறிப்பு. அடி சேர்தலே முத்தியாமென்பது ஞானநூன் முடிபாதலின் ஈண்டுத் திருவடிகள் தாங்கி வருதலினையே உய்தி என்றார். |
| ஆதலினும் மிணையடிகள் - என்பதும் பாடம். |
| 935 |
2834 | அவ்வார்த்தை கேட்டஞ்சி யவனியின்மே லிழிந்தருளி "யிவ்வாறு செய்தருளிற் றென்னா?"மென் றிறைஞ்சுதலுஞ் செவ்வாறு மொழிநாவர் "திருஞான சம்பந்தர்க் கெவ்வாறு செயத்தகுவ?" தென்றெதிரே யிறைஞ்சினார். | |
| 936 |
| (இ-ள்.) அவ்வார்த்தை...இழிந்தருளி - அவ்வாறு கூறியருளிய அப்பர்பெருமானது அத்திருமொழிகளைக் கேட்டு அஞ்சிப் பிள்ளையார் சிவிகையினின்றும் கீழே இறங்கியருளி; இவ்வாறு...இறைஞ்சுதலும் - இப்படித் தேவரீர் செய்தருளினால் என்னாவது? என்று பதைப்புடன் கூடி வணங்குதலும்; செவ்வாறு....இறைஞ்சினார் - செம்மையே மொழியும் திருநாவினையுடைய அரசுகள் "திருஞான சம்பந்தருக்கு வேறெவ்வாறு செய்தல் தக்கதாகும்" என்று வணங்கினார். |
| (வி-ரை.) அஞ்சி - இழிந்தருளி - அச்சமாவது அப்பர் எனத் தாம் கொண்ட பெரியார் சிவிகை தாங்கத் தாம் ஊர்ந்துவந்தது பிழை என்றதனால் ஆயது. பெரியார்பாற் பணிகொள்ளுதல் பிழை என்பதாம். |