1198திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

ஏகாம்பரம் - ஏகம்பத் திருக்கோயிலின் பெயர். ஆம்பரம் - மா. மாமரத்தின் கீழ் இறைவர் வெளிப்பட்டருளுகின்றமையால் இப்பெயர் பெற்றது.
செல்வர் - உலக முதலாக உயிரில்லாதவற்றை யெல்லாம் தமது உடைமையாகவும் உயிர்களையெல்லாம் அடிமையாகவும் உடையவராதலின் செல்வர் எனப்பட்டார். "செல்வன் கழலேத்தும் செல்வம்"; "செல்வ மல்கிய செல்வர்" முதலியவை காண்க. முத்தியாகிய பெருஞ்செல்வத்தை யுடையவர் என்றலுமாம்.
சென்றது எலாம் - தொண்டைநாட்டு யாத்திரையினை முடித்துத் திருக்கயிலை சென்று இங்கு மீண்டருளியிருக்கும் வரையில் உள்ள வரலாறுகளை எல்லாம்.
செப்புதலும் கேட்டருளியதனால் - உடன் மனங்கொண்டனர்; இவ்வாறே முன்னர்த் திருவாரூர் நிகழ் செல்வத்தினை வாகீசர் சொல்லக் கேட்டலும் பிள்ளையார் அங்குச் சென்றருளத் துணிந்ததையும் இங்கு நினைவுகூர்க. ஆரூரும் காஞ்சியுமாகிய இரண்டும் பிருதுவித் தலங்களாதலும், அதனால் இரண்டும் ஒப்ப அருளவா முளைத்தற்கிடமாதற் றகுதியுடையன வாதலும் கண்டுகொள்க. இரண்டும் ஒப்ப ஆளுடைய நம்பிகள் கண்பெற்ற பதிகளாவதும் இங்கு நினைவுகூர்தற்பாலது.
போற்றித் திறம் புரிந்தார் - என்பதும் பாடம்.

945

2844
அங்கணரைப் போற்றியெழுந் தாண்ட வரசமர்ந்த
பொங்கு திருமடத்திற் புக்கங் கினிதமர்ந்து,
திங்கட் பகவணியுஞ் சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு தாம்பரவிச் செல்லுநாள்;

946

2845
வாகீச மாமுனிவர் மன்னுதிரு வாலவாய்
நாக மரைக்கசைத்த நம்பர் கழல்வணங்கப்
போகும் பெருவிருப்புப் பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெருங்காதல் பிள்ளையா ரேற்றெழுவார்,

947

2846
பூந்துருத்தி மேவும் புனிதர்தமைப் புக்கிறைஞ்சிப்
போந்து திருவாயிற் புறத்தணைந்து நாவினுக்கு
வேந்தர் திருவுள்ள மேவவிடை கொண்டருளி
யேந்தலா ரெண்ணிறந்த தொண்டருட னேகினார்.

948

2844. (இ-ள்.) அங்கணரை...அமர்ந்து - (பிள்ளையார்) இறைவரைத் துதித்து எழுந்து ஆளுடைய அரசுகள் விரும்பி எழுந்தருளிய அன்பு பொங்கும் திருமடத்திற் சென்று சேர்ந்து அவ்விடத்திலே இனிதாக விரும்பி வீற்றிருந்தருளி; திங்கள்...செல்லுநாள் - திங்களின் பிளவுபோன்ற பிறையினைச் சூடிய தலையினையுடைய இறைவரது சேவடியின் கீழே தங்கும் திருவுள்ளத்துடனே தாமும் துதித்து எழுந்தருளியிருந்த காலத்திலே;

946

2845. (இ-ள்.) வாகீசமாமுனிவர்....பொங்க - வாகீசப்பெரு முனிவராகிய அரசுகளுக்கு நிலைபெற்ற திருவாலவாயில் எழுந்தருளிய பாம்பினை அரையிற் கட்டிய இறைவரது திருவடிகளை வணங்குதற்காகப் போகவேண்டும் என்றும் பெரிய விருப்பம் மேன்மேல் வரவும்; புகலியின்மேல்...ஏற்றெழுவார் - பிள்ளையார் சீகாழியின்கண் சென்று சேரும் பெருகிய காதலை மேற்கொண்டும் எழுவாராகி;

947