[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1201

நகராரேழு (1) என்ற பிள்ளையாரது தேவாரக்குறிப்புக் காண்க. இத்தலத் திருப்பதிகத்தினுள் ழுகாலனை... ... புறந்தாளா லெண்ணா துதைத்தழு (2), ழுபேயுறை மயான மிடமா மிடமா வுடையார்ழு (3), ழுமயானத்தி லிரவிற்பூதம் பாடவாடிழு (4), ழுமதின்மூன் றெரித்த கொல்லே றுடைடகலமுடையார்ழு (9) என நிரந்து இக்கருத்தே பற்றிப் பிள்ளையார் அருளுதலும், ழுபாவமே தீரநின்றார்ழு (2), ழுபண்டையென் வினைக டீர்ப்பார்ழு (3), ழுபாற்றினார் வினைகளெல்லாம்ழு (8) (நேரிசை), ழுஉறுநோய் சிறுபிணிக டீர்ப்பார் தாமேழு (2) (தாண்) என்று அரசுகள் அருளுதலும் ஈண்டு கருதத்தக்கன.
(திருப்பூந்திருத்தி) திருநெய்த்தானம், ஐயாறு, திருப்பழனம் - இவை இவ்வாறு ஒரே முறையில் சேர்ந்து வழிபட உள்ளன (ஏழு பதிகளுட் சேர்ந்தன) என்பது ழுபூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே, யுடைவே புனல்சூழை யாற்றார் தாமேழு (பழனம் - தாண்டகம்) என்ற திருவாக்கானுமறிக. இக்குறிப்புப்பட இவற்றை இவ்வொருபாட்டில் சேரவைத்துக் கூறிய தெய்வ வருட்குறிப்பும் காண்க.

949

திருநெய்த்தானம் : 2203 -ம் பாட்டின்கீழ்ப் பார்க்க.
III திருவையாறு : (இங்குப் பிள்ளையார் முன்முறை எழுந்தருளியபோது அருளிய இரண்டு பதிகங்கள் 2199-2201 பாட்டுக்களின் கீழ்த்தரப்பட்டன; கண்டுகொள்க.)
திருச்சிற்றம்பலம்

திருவிராகம்

பண் - இந்தளம்

திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திக ழெயிற்கயிலை வெற்பிலுறை தந்கே
விருப்புடைய வற்புத ரிருக்குமிட மேரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.

(1)

வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு: - இறைவரது இடம் திருவையாறே.
பதிகப்பாட்டுக்குறிப்பு : - (1) திருவையாறே அற்புதர் இருக்கும் இடம் என்று கூட்டுக. தேசர்-தேசு - ஒளி : - (2) இந்திரன் பூசித்தது தலவிசேடம் ; - (3) ழுகுடழழ நந்தீசன்ழு என்றபடி நந்தி முழவிரட்ட அதற்கேற்றவாறு நடஞ் செய்கின்ற பெருமான் என்பதும், இப்பதியில் நந்திவேர் அருள் பெற்றனர் என்பதும் குறிப்பு; - (4) வடம் - வடவாலமரம்; எண்ணிலா - அளவில்லாத;