| பொன்னி மண்ணின்மிசை வந்தணவு - இமயத்தினின்றும் அகத்தியரது குண்டிகையில் காவிரி வந்த வரலாறு கந்தபுராணத்துட் காண்க; ; - (5) நடமாடி - ஆடுபவர். ஆடி - பெயர்; (6) பாதழதல் - பாதமுதலாகப் பல அங்கங்களிலும்; - (7) சுளிவு - வருத்தம்; புலத்தல் - வெறுத்தல் என்றலுமாம். பின்னொரு தவம் - தாமும் வேறொரு தவம்; யோகம்;- அங்கே என்னசதி - உமை தவங்கண்ட நிலை; - (8) துரக்க - வலியுடைய;- (9) பருத்து - பருந்து என்பது பருத்த என வந்தது செய்யுள் விகாரம்; பருந்து - இங்குப் பறவைக்குப் பொதுப்பெயராய் அன்னம் என்ற பொருள் தந்து நின்றது; - (10) மாக்கம் - மாகம் என்பது எதுகை நோக்கி இடைஒற்று மிக்கு வந்தது. மாகம் - விண். |
2848 | செங்கண் விடையார் திருப்பழனஞ் சேர்ந்திறைஞ்சிப் பொங்கிய காதலின்முன் போற்றும் பதிபிறவுந் தங்கிப்போய்ச் சண்பைநகர் சார்ந்தார் தனிப்பொருப்பின் மங்கை திருமுலைப்பா லுண்டருளும் வள்ளலார். | |
| 950 |
| (இ-ள்.) செங்கண்... இறைஞ்சி - சிவந்த கண்ணையுடைய விடையினைக் கொண்ட இறைவரது திருப்பழனத்தைச் சேர்ந்து வணங்கி; பொங்கிய...போய் - மேலோங்கிய காதலினால் முன்னர்த் துதித்த பதிகள் பிறவற்றிலும் சென்று சேர்ந்து தங்கிப் போய்; தனிப் பொருப்பின்... வள்ளலார் - ஒப்பற்ற பொன்மலை வல்லியாகிய அம்மையாரது திருமுலைப்பாலுண்டருளும் வள்ளலாராகிய பிள்ளையார்; சண்பை நகர் சார்ந்தார் - சீகாழித் திருநகரைச் சார எழுந்தருளினார். |
| (வி-ரை) திருப்பழனம் - இப்பதியும் திருநெய்த்தானம், திருஐயாறுபோல பிள்ளையார் இரண்டாம் முறை இறைஞ்சிய பதியாம்; பிள்ளையார் இப்போது சென்றருளிய வழியினைக் காட்டுதற்பொருட்டும், திருப்பூந்துருத்தியுள்ளிட்ட ஏழு தலங்களுள் வரும் சிறப்புப் பற்றியும், இவற்றை எடுத்துக் கூறி, ஏனையவற்றை ழுழன் போற்றும் பதி பிறவும் தங்கிழு என்று சேர்த்துக் கூறியருளினார். |
| பொங்கிய காதலின் என்றது ழன் போற்றும் என்றும் பொங்கிய காதலிற்றங்கி என்றும் ஈரிடத்தும் கூட்டி உரைக்க நின்றது. ழன் - முன் முறையில். ழன் முறையிற் போற்றியது 2203 முதலிய பாட்டுக்களிற் காண்க. பொங்கிய காதலிற்றங்கி என்றதனால் முன்முறை சென்று போற்றியிருப்பினும் பின்னர் நேர்பட்டபோது அன்பு மேலும் ஓங்கிற்று என்பதாம். திருக்கோயில் வழிபாட்டின் பெருமையும் இன்றியமையாமையும் எடுத்துக்காட்டியருளியபடி. |
| பதி பிறவும் - இவை வடகுரங்காடுதுறை - திருப்புள்ளிருக்குவேளூர் - திருக்குடந்தை - திருப்பனந்தாள் முதலாயின என்பது கருதப்படும். இவையே குடந்தை வரையிலும் கிழக்கே வரும் சாலைவழி வந்து, அங்குநின்றும் பிரிந்து வடகிழக்குச் சீகாழியை நோக்கிச் செல்லும் பழய சாலைவழியில் யுள்ளன. |
| தனிப் பொருப்பின் மங்கை - உமையம்மையார்; தனிப்பொருப்பு - பொன்மலை. |