[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1203

சார்ந்தார் -சண்பையின் புறத்துச் சார எழுந்தருளினார்.

950

திருப்பழனம் -தலவிசேடம் III - பக்கம் 331 பார்க்க.
தேவாரமும் குறிப்புக்களும் 2197-ம் பாட்டின்கீழ்க் காண்க.
2849
தென்னாட் டண்மா சறுத்துத் திருநீறே
அந்நாடு போற்றுவித்தார் வந்தணையும் வார்த்தைகேட்
ழுடெந்நாள் பணிவ?ழு தென வேற்றெழுந்த மாமறையோர்
முன்னாக வேத முழங்க வெதிர்கொண்டார்.

951

(இ-ள்.) தென்னாட்டு... கேட்டு - தென்னாடு என்னும் பாண்டி நாட்டில் சமணமாகிய குற்றங்களை அழித்துத் திருநீற்றினை அந்நாடு முழுதும் அணியும்படி செய்தருளிய பிள்ளையார் வந்து அணைகின்ற வார்த்தையினைக் கேட்டு; எந்நாள்...மறையோர். எந்நாளில் அவரைப் பணியப் பெறுவோம் என்று ஆர்வங்கொண்டு எழுந்த பெருமறையவர்கள்; முன்னாக...எதிர்கொண்டார் . அவர் முன்சென்று வேதங்கள் முழங்க எதிர்கொண்டார்கள்.
(வி-ரை) தென்னாடு - பாண்டி நாடு. நாட்டு - நாட்டின்கண்; மாசு - குற்றம்.
அமண்மாசறுத்து - பரசமய நிராகரிப்பினால் தூய்மையாக்கி.
திருநீறே... போற்றுவித்தார் - ஏகாரம் தேற்றம்; பிரிநிலையுமாம். போற்றுவித்தல் -யாவரும் போற்றியணியும்படி செய்தல்.
ழுஎந்நாள் பணிவ ழுதென - பிள்ளையார் பிரிந்து சென்றருளி (பல காலங்கள்) இரண்டாண்டுகளின் மேலாயினமையாலும், முன்னர்ச் சீகாழி மறையவர்கள் திருவீழிமிழலையிற் சென்று அழைத்தபோது திருவருள் வினவிப் பின்னர் வருவதாக அவர்களைப் போக்கியமையானும் மறையோர் எக்காலத்திற் பிள்ளையாரை இங்குக் கண்டு பணியப் பெறுவோமென்று மிகவும் மேல்எழுந்த ஆர்வங் கொண்டிருந்தனர் என்க.
ழன்னாக - பிள்ளையாரின் முன்புசெல்ல; வேதம் முழங்க - வேதங்களை முழக்கிக் கொண்டு; ழுஆரணங்கள் மதுரவொலி யெழுந்து பொங்கழு (2156) என முன்னர் முத்துச்சிவிகை பெற்றபின் மீண்டருளியபோது வேத முழக்கி எதிர்கொண்டவாறே இப்போது அவரது அவதார உள்ளுறையினை நிறைவாக்கி வெற்றியுடன் சீகாழிக்குத் திரும்பும்போதும் வேத முழக்கி எதிர்கொண்டனர் என்க. இது சீகாழிக்குப் புறநகரில் நகர்க்குத் தென்புறம் திருத்தோணிபுரக் கோயில் கட்புலப்படாத அளவு தூரத்தில் (2850) நிகழ்ந்ததென்க. அத்துணை தூரமளவு வந்த மறையவர்கள் எதிர்கொண்டமை அவர்களது ஆர்வமிகுதியினைக்