1204திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

காட்டுவது; குலச்சிறையார் பிள்ளையாரை எதிர் கொண்ட நிலையினையும் இங்கு நினைவு கூர்க.
அமணாசறுத்து -வேதமொழிந்தங்கு - என்பனவும் பாடங்கள்.

951

வேறு
2850
போத நீடுமா மறையவ ரெதிர்கொளப் புகலிகா வலருந்தம்
சீத முத்தணிச் சிவிகைநின் றிழிந்தெதிர் செல்பவர் திருத்தோணி
நாதர்கோயின்முன்றோன்றிட
நகைமலர்க் கரங்குவித் திறைஞ்சிப்போய்
ஓத நீரின்மே லோங்குகோ யிலின்மணிக் கோபுரஞ் செற்றுற்றார்.

952

(இ-ள்) போத... எதிர்கொள - ஞானமிக்க பெரிய வேதியர்கள் தம்மை எதிர் கொள்ளவர; புகலி.... செல்பவர் - சீகாழித் தலைவராகிய பிள்ளையாரும் குளிர்ந்த முத்துக்களாலியன்ற சிவிகையினின்றும் இறங்கி அவர்களெதிரே செல்பவராய்; திருத்தோணி...போய் - (அப்போது) இறைவர் திருத்தோணியில் எழுந்தருளிய திருக்கோயில் முன்னால் தோற்றப்படப் புதிதலர்ந்த தாமரை போன்ற கைகளைக் கூப்பி வணங்கிச் சென்று; ஓத நீரின்...உற்றார் -ஊழி வெள்ளத்தில் மேலே மிதந்த அத்திருக்கோயிலினது அழகிய கோபுரத்தைச் சென்று சேர்ந்தருளினர்.
(வி-ரை) போதம் - ஞானம்; இறையறிவு. மறையின் உள்ளுறையாவது சிவனையறிவிக்கும் தன்மை.
எதிர்கொள - எதிர் செல்பவர் - மாமறையவர் தம்மை எதிர்கொண்டுவரத் தாமும் அதனை ஏற்றுச் சிவிகையினின்றுமிழிந்து சென்றருள்பவர்.
செல்பவர் - கோயில் தோன்றிட - இறைஞ்சி - ழுகொன்றையா னடியலாற் பேணாழு நிலைமையினர் பிள்ளையாராதலின் மாமறையவர் வர எதிர் ஏற்றுச் சென்றவர் கோயில் தோன்றிட இறைஞ்சினர் என்பதாம். திருவாலவாயில் திருமடத்தினில் தாதையாரை எதிரே கண்ட பிள்ளையார் தோணியிற் றாதைதாள் மனங்கொள வணங்கினார் என்றதும், சீகாழியில் ஆளுடைய அரசுகளை எதிரேற்றுக் கண்டபோது ழுதொண்டர் திருவேட நேரே தோன்றிய தென்று தொழுழு தனர் என்றதும் ஈண்டு நினைவுகூர்ந்தற்பாலன. ஆலயமும் திருவேடமுமே அரனெனக் கண்டு தொழுதற்பாலன என்பது ஞானசாத்திரம்.
சீத ழத்து - குளிர்ந்த ஒளிவீசும் முத்துக்கள்.
நாதர் திருத்தோணிக் கோயில் - என்க. திருத்தோணிச் சிகரக்கோயில் நீண்டதூரத்திற் கட்புலப்பட விளங்குதல் குறிக்கக் கூறியவாறு.