| முகைமலர்க் குழலார்கள்....மருங்கெழ - பரசமய நிராகரிப்பும் திருநீற்றின் விளக்கமாகிய ஆக்கமும் கண்ட பேரருட் செய்கையை நிறைவாக்கிப் பிள்ளையார் மீண்டருளக் கண்ட பெண்கள் வீதியின் இருமருங்கும் நின்று மங்கலமொழிகளால் அவரை வாழ்த்தினார்கள். பிள்ளையாரது திருவவதாரத்தின்போது சீகாழிப் பதியவர் அனைவரும் தத்தமக்கு மங்கலம் நேர்ந்ததென்ற உணர்ச்சி பொருந்தப் பெற்றனர். முன்னர்ப் பிள்ளையார் அருண்ஞான அமுதுண்டு திருமாளிகைக்கு எழுந்தருளியகாலையிலும், முத்துச்சிவிகை பெற்று அந்த யாத்திரையினின்று மீண்டெழுந்தருளியபோதும் இவ்வாறே "மாடுநிறை மாடவர்கள் மங்கலமா மொழிகளால் வாழ்த்தினர்" (1993) எனவும், "தெய்வமறைக் கற்பின் மாதர் மங்கலவாழ்த் திசையிரண்டு மருங்கு மல்"கின (2158) என்றும் கூறிய நிகழ்ச்சிகளும் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. பிள்ளையாரது இளமை கருதியும் மாதர் தத்தம் இளங்குமாரர்க் கிசைக்குமாபோல் மங்கல வாழ்த்திசைத்தல் இயல்பாகும். முகைமலர்க் குழலார்கள் - மங்கல மாதர்கள். ஆதரித்தல் - அன்பினாற் சூழ்தல்; ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையும் காண்க (11-ம் திருமுறை). |
|
| அணிமறுகு - பிள்ளையாரது திருமாளிகையிருந்த திருவீதி. இது திருக்கோயிலின் மேற்கில் அடுத்துப் பின்புறமுள்ள திருவீதி என்று கொண்டு வழங்கப்படுகின்றது. மாளிகை - இஃதிருந்த இடம் அத்திருவீதியின் கீழைக்கோடியில் உள்ளதென்று கூறுகின்றனர். |
| காதலித்தவர் - முன் கூறியபடி மங்கல வாழ்த்திசைத்த பெண்களும், அன்புடன் கண்டு களிக்கக்கூடிய ஏனை மக்களும் ஆம். |
| அருள் செய்தல் - அருண்முகமளித்து விடைகொடுத்தல். |
| திருமாளிகைக்கடை - திருமாளிகையின் முன் கடை - முன் வாயில். |
| அங்கணைந்துடன் பணிந்திட - என்பதும் பாடம். |
| 956 |
| குறிப்பு - முன் யாத்திரையில் சிவிகை பெற்றுத் திரும்பியபோது கூறிய போலவே ஈண்டும் இத்திருப்பாட்டுக்களால் வழிபாட்டு நிலையினை எல்லாம் விரித்துக் கூறியது அவ்வவ் யாத்திரையின் நிகழ்ந்த அருட்பெருமையினை எண்ணித் திளைத்துத் தமது இறைவரை "இத்தனையு மெம்பரமோ வைய வையோ வெம்பெருமான் றிருக்கருணை யிருந்த வாறே" (தேவா). என்றவாறு நன்றியுடன் போற்றி மகிழ்ந்த நிலை குறித்தற்கு. மறையவர் எதிர்கொண்ட நிலைகளை விரித்தல் பலநாட் பிரிந்த அவர்களது ஆர்வமிகுதி குறித்தற்கு. |
| திருக்கழுமலம் |
| திருச்சிற்றம்பலம் |
| திருவியமகம் |
| உற்றுமை சேர்வது மெய்யினையே யுணர்வது நின்னருண் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே யற்ற முறைப்பது முன்பணியே யமரர்கள் செய்வது முன்பணியே பெற்று முகந்தது கந்தனையேபிரம புரத்தையு கந்தனையே. |
| (1) |
| பருமதின் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை வையெதிரே வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே கருதலி விசைமுர றருமருளே கழுமல மமரிறை தருமருளே மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே. |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |