| பதிகக் குறிப்பு :- திருக்கடைக்காப்பில் பிள்ளையார் அருளியபடி ஆசிரியர் முன் (2852) காட்டக் கண்டுகொள்க. |
|
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நின் அருள் மெய் - நினது அருளாகிய வாய்மையினையே; உணர்வது - நான் மறவாது உணர்ந்துகொண் டிருப்பது; கற்றவர் காய்வது காமனையே - மனமிறக்கக் கற்றுணர்ந்த பெரியோர்களால் வெறுத்துவிடப்பட்டது பசுத்துவம் பொருந்திய வீடாகிய உடம்பு முதலிய பிரபஞ்சமே; கா - பசுத்துவம்; மனை - வீடு - உடம்பு - பிரபஞ்சம்; அற்றம் - நிர்வாணம்; அதனை முன்பணி கறைப்பதாவது- முன்னால் தொங்கவிடப்பட்ட ஐந்தலைப் பாம்பின் படம்; பணி - பாம்பு; இங்கு அதன் படத்துக்கு வந்தது;- (2) சலந்தரன் - அசுரன்; சலம் தான் - நீரைச் சடையில் தரித்தவன்; கைச் சிலை - கையில் ஏந்திய வில்; கைச்சிலை - நீ வெறுக்க வில்லை;- (3) தோடினன் - தோட்டினை உடையவன்; கடிது ஓடினன்; அம்பு - தைத்தனன்; வினை அது அரித்தனனே; உரைப்பொருள் - உரையின் பொருளானவன்;- (4) மாசுணம் - பாம்பு; மாசு(ண்)ணமே - உடல் பூசுவர் என்க; மேன்மதியே - மேலாகிய அறிவைப் புகட்டி; மத்தம் - ஊமத்தம். மத்தம் - உன்மத்தம்;- (5) மாதவன் - திருமால்; மாதவன் - யோகு பயில்கின்றவன்; பகடு - யானை; அரைசு எய்தினனே - தலைமை தாங்கினன்; துயர்க்கு - ஒரு நஞ்சு - இவனே - நஞ்சு - அழிவு செய்யும் பொருள். துயர்க்கு நஞ்சு - துன்பத்தை அழிப்பது. நஞ்சு - நஞ்சுபோல்வன் ;-(6) புகை தங்கு அழலே கையது - என்க. தம் கழலே தொழுவது; அடையேமின் - மேகங்களின் அடையும் மின்னல்; அம் சடையே மின் நிகர்கின்றது; மேலே உதாரணமாகச் சிலமட்டும் குறிப்பிடப்பட்டன; -(7-11) கற்றறிபுலவாணர்பாற் கேட்டு அறியக்கடவன; -(12) இப்பாட்டுப் பதிகக் கருத்தும் குறிப்பும் உணர்த்துவது; பதிகம் அது எழுது இலை அவை - பதிகம் எழுதிய ஏடு; இலை - ஓலை; எதிர்வருகரனே - எதிரிட்டுச் செல்லும்படி துணைசெய்த அருட்கைகளையுடையவனே; வசை - (புறச் சமயிகள் கூறும்) வசைச் சொல்; அலர் - பழிச்சொல்; அருகு - அரனே - அருகு - அருகர் குலத்தை; அரனே - அரித்தவன்; அழித்தவன். கருதலில் - கேட்போரது கருத்தை அழிக்கத்தக்க; இசை முரல் - இசைக்குரியோரும்; தருமர் - தரும சீலரும் ஆகிய அந்தணர்; உள் - ஏ - வாழ்கின்ற இடமாகிய (உள் - இருப்பிடமாகிய). தரும் அருளே மருவும் - என்க. 1 - 12 பாட்டுக்களின் குறிப்புக்கள் வித்துவான் - காஞ்சிபுரம் - சபாபதி முதலியார் பதிப்பிற் கண்டவை. கருதல் இல் இசை தரும் மருளே - என்பதற்கு பகுத்து அறியும் அறிவில்லாத இசையைத் தரும் வண்டுகள் மருள் பாடுதற்கிடமாகிய என்றுரைத்தலும் ஆம். மருள் - குறிஞ்சிப் பண் வகையுள் ஒன்று. "வண்டு மருள் பாடும்". |
2855 | நறவ மார்பொழிற் புகலியி னண்ணிய திருஞான சம்பந்தர், விறலி யாருட னீலகண் டப்பெரும் பாணர்க்கு மிகநல்கி யுறையு ளாமவர் மாளிகை செலவிடுத், துள்ளணை தரும்போதில் அறலி னேர்குழ லார்மணி விளக்கெடுத் தெதிர்கொள வணைவுற்றார். | |
| (இ-ள்.) நறவம்ஆம்.....திருஞான சம்பந்தர் - தேன் பொருந்திய பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சீகாழியில் சேர்ந்தருளிய திருஞான சம்பந்தப் பிள்ளையார்; விறலியாருடன்....செலவிடுத்து - பாடினியாருடனே திருநீலகண்டப் பெரும்பாணனார்க்கு மிகவும் அருண்முகம் அளித்து அவர்தம் இருக்கையாகிய திருமாளிகையின்கண் போகும்படி விடைதந்து விடுத்து; உள் அணைதரும் போதில்...அணைவுற்றார் - தமது |