1210திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

திருமாளிகையினுள்ளே எழுந்தருளும்போது கருமணல் போன்ற கூந்தலையுடைய பெண்கள் அழகிய விளக்குக்களை ஏந்தி எதிர்கொள்ள உள் அணைந்தனர்.
(வி-ரை.) புகலியில் நண்ணிய - சீகாழிப் பதியினில் சேர்தலையே குறித்து மீண்டு இவ்வளவும் போந்தெழுந்தருளினாராதலின் அது முற்றியநிலை குறிப்பார் புகலியில் நண்ணிய என்றார். "புகலியின்மே லேகும் பெருங்காதல்" (2845).
விறலியாருடன்......செல விடுத்து - தம்முடன் இதுவரை தொடர்ந்து வந்த இவ்விருவரையும் அவரது உறையுளாகிய திருமாளிகையிற் செல்ல விடுத்துப் பின்னரே தாம் தமது திருமாளிகையினுள் எழுந்தருளினார் என்க. இதுவே உலகியல் முறை. "காதலித்தவர்க் கருள்செய்து" என முன்பாட்டிற் கூறியது காண்க. அஃது அங்குத் திருமாளிகை வரை எதிர்கொண்டும் வாழ்த்தியும் வந்து கண்களித்த ஏனையோரைக் குறித்தது. அவரையெல்லாம் செல்ல விடுத்தபின் இறுதியாக இவ்விருவரையும் அருளியது இவர்பால் அன்பு மிகுதியுடைமை குறித்தது. அதன்மேலும் அவர்கள் அங்கு இருத்தலாம் நிலைமை சாலாமையின் அவர்க்காக முன் அமைத்திருந்த உறையுளாகிய திருமாளிகையுட் செல்ல விடுத்தலே சால்பும் தகுதியுமாம். இங்குப் பாணனார் தமது திருமாளிகையில் வரலாகாதென்று பிள்ளையார் அவரைச் செலவிடுத்தனர் என்றெல்லாம் பலவாறு தத்தமக் கேற்றவாறு பிதற்றுவோரும் உண்டு. அவை எல்லாம் ஒழுக்கம் வழக்கு நேர்மை முதலிய உண்மைநிலைக ளெவற்றையு மறியாதார் கூற்றுமென்றொதுக்கற்பாலன். 2029 - 2030 பாட்டுக்களும், 2035-ல் உரைத்தவையும் இங்கு நினைவு கூர்தற்பாலன.
அறலின் நேர் குழலார்......எதிர்கொள - பெண்கள் விளக்கெடுத்து எதிர் கொள்வது மரபு. அறல் - கருமணல்; அதன் ஒழுக்கும் குறிப்பது. உருப்பற்றிய உவமை.
அணைவுற்றார் - உள் எழுந்தருளுவாராயினார்.

957

2856
அங்க ணைந்தரு மறைக்குலத் தாயர்வந் தடிவணங் கிடத்தாமுந்
துங்க நீள்பெருந் தோணியிற் றாயர்தாண் மனங்கொளத்தொழுவாராய்த்
தங்கு காதலி னங்கமர்ந் தருளுநாட் டம்பிரான் கழல்போற்றிப்
பொங்கு மின்னிசைத் திருப்பதி கம்பல பாடினார் புகழ்ந்தேத்தி.

958

(இ-ள்.) அங்கணைந்து.....வணங்கிட - அவ்விடத்தில் அணைந்து அரிய வேதியர் குலத்து வந்த தாயாராகிய பகவதியார் எதிர்வந்து அடி வணங்க; தாமும்.......தொழுவாராய் - தாமும் தூய நீண்ட பெரிய திருத்தோணியில் எழுந்தருளிய தாயாராகிய பெரியநாயகியாரது திருவடிகளை மனத்திற்கொண்டு எதிர் தொழுவாராகி; தங்கு....நாள் - அங்குத் தங்கும் ஆசையினாலே விரும்பி எழுந்தருளியிருந்த நாட்களிலே; தம்பிரான்....புகழ்ந்தேத்தி - தமது பெருமானுடைய திருவடிகளைத் துதித்து மேன்மேற் பொங்கும் இன்னிசையுடன் கூடிய பல திருப்பதிகங்களையும் புகழ்ந்து ஏத்திப் பாடியருளினார்.
(வி-ரை.) அங்கணைந்து.....வணங்கிட - பிள்ளையார் திருமாளிகையினுள் அணைவுற அங்குப் பெண்கள் விளக்கேந்தி எதிர்கொள்ள மறைக்குலத் தாயாராகிய பகவதியார் அவ்விடத்து வந்து அணைந்து அடி வணங்கினர்; தாயார் திருமாளிகையி னெல்லை கடந்து வந்து வரவேற்றல் மரபன்றாதலின் அங்கணைந்து - வந்து என்றார். இவ்வாறே