[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1211

முன்னர்க் கோயிலின் வழிபாட்டினிறுதியில் திருவாயில் பணிந்த நிலையில் "தாதையாரும் அங்கு உடன்பணிந் தணைந்திட" (2854) என்றது காண்க.
மறைக்குலத் தாயர் - தோணியிற் றாயரை வேறுபிரித்துக் காட்டலின் மறைக்குலம் என்றது பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; முன் "மறைவியார்"(1940) என்ற கருத்தும் காண்க.
தாயர் - அடி வணங்கிட - சிவஞானமுதுண்டமையின் சிவத்துவம் விளங்கப் பெற்றமையால் பிள்ளையாரைத் தாயார் அடிவணங்குதல் அமைவுடைத்தேயாமென்க. தீக்கை முறையில் இவ்வமைதி நிலவுதல் காண்க. பிள்ளையார் ஞானகுருவாதலின் யாவராலும் வணங்கப்படத் தக்கவராதலும் காண்க; (2778).
தாமும்...தொழுவாராய் - பிள்ளையாரைத் தாயர் வணங்குதல் தகுமென்று மேல் அமைதிபடுத்திய அந்த நியாயமே, பிள்ளையார் அவரை எதிர்வணங்கத் தகாதென்பதனையும் அமைவுபடுத்தும். ஆதலின் தாயர் தம்மை அடிவணங்கக் கண்ட பிள்ளையார் அவரது சார்புபற்றித் தமது ஞான அம்மையாராகித் தோணியில் வீற்றிருந்த பெரியநாயகியம்மையாரை நினைந்துகொண்டு எதிர் தொழுதருளினர் என்க. திருவாலவாயில் தந்தையார் வணங்கக் கண்டபோதும் இவ்வாறே எதிர் தொழுவார் - அவர் சார்வு கண்டருளித் திருத்தோணி வீற்றிருந்தார் பாதங்கள் நினைவுற்றார் என்றது காண்க; (2778).
தங்கு காதல் - சிலகாலம் அப்பதியினிலே தங்கும் பெருவிருப்பம்.
திருப்பதிகம் பல - இவை இன்னவென்று கருதக்கூடவில்லை
வணங்கிடத் தாழ்ந்து - தமிழ்ப் பதிகம் - என்பனவும் பாடங்கள்.

958

2857
நீல மாவிடந் திருமிடற் றடங்கிய நிமலரை நேரெய்துங்
கால மானவை யனைத்தினும் பணிந்துடன் கலந்தவன் பார்களோடுஞ்
சால நாள்களங் குறைபவர் தையலா டழுவிடக் குழைகம்பர்
கோல மார்தரக் கும்பிடு மாசைகொண் டெழுங்குறிப் பினரானார்.

959

(இ-ள்.) நீல மாவிடம்...பணிந்து - கரிய பெரிய விடத்தினைத் திருக்கழுத்தில் அடக்கிய நிலமலராகிய தோணியப்பரை நேரே சென்று கும்பிடுதற்கு உரிய காலங்களில் எல்லாம் சென்று வணங்கி; உடன் கலந்த...உறைபவர் - உடன் கலந்தவர்களாகிய அன்பர்களோடுங் கூடிப் பல நாள்கள் அந்தச் சீகாழிப் பதியிலே தங்கியருளுபவராகிய பிள்ளையார்; தையலாள்.....குறிப்பினரானார் - காமாட்சிஅம்மையார் தழுவியிடத் திருமேனி குழைந்து காட்டிய, திருவேகம்ப நாதருடைய, திருக்கோலத்தைச் சென்று நிறைவுபெறக் கும்பிடவேண்டுமென்னும் ஆசை மேற்கொண்டு எழுகின்ற திருவுள்ளக் குறிப்பினைக் கொண்டவரானார்.
(வி-ரை.) நேரெய்தும் காலமானவை யனைத்தினும் - நேரே சென்று வழிபடுதற்குரிய காலங்கள் என்று சிவாகமங்களுள் விதித்த பூசைக் காலங்களிலெல்லாம் இவற்றின் விரிவு சிவாகமங்களுட் காண்க. இவை திருப்பள்ளி எழுச்சி முதலாகத் திருவந்த யாமம் ஈறாக வருவன. "திருப்பள்ளி யெழுச்சி" (1333); "காலை" (560); "உச்சம் போதால்" (தேவா); "மயங்கு மாலை" (3456 - ஏயர்கோ - பு - 302); "திருவத்த யாமம்" (3458 - மேற்படி -340). காலமானவை - ஆக்கச்சொல் விதித்தவாற்றால் உரியவையாதல் குறித்தது; காலமானவை அனைத்தினும் - பூசைக்