[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1213

2858
"தண்ட கத்திரு நாட்டினைச் சார்ந்துவந் தெம்பிரான் மகிழ்கோயில்
கண்டு போற்றிநாம் பணிவ"தென் றன்பருக் கருள்செய்வார் காலம்பெற்
றண்ட ருக்கறி வரும்பெருந் தோணியி லிருந்தவ ரருள்பெற்றுத்
தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத், தொடர்ந்தெழுந் தாதையார்க்

[குரைசெய்வார், 960

2859
"அப்பர்! நீரினி யிங்கொழிந் தருமறை யங்கிவேட் டன்போடுந்
துப்பு நேர்சடை யார்தமைப் பரவியே தொழுதிரு" மெனச்சொல்லி
மெய்ப்பெ ருந்தொண்டர் மீள்பவர் தமக்கெலாம்விடை கொடுத்தருளிப்
ஒப்பிலாதவர்தமைவழியிடைப்பணிந்துருகுமன்பொடுசெல்வார்;

[போய் 961

2860
செல்வ மல்கிய தில்லைமூ தூரினிற் றிருநடம் பணிந்தேத்திப்,
பல்பெ ருந்தொண்ட ரெதிர்கொளப் பரமர்தந் திருத்தினை நகர்பாடி,
யல்கு தொண்டர்க டம்முடன் றிருமாணி குழியினை யணைந்தேத்தி
மல்கு வார்சடை யார்திருப் பாதிரிப் புலியூரை வந்துற்றார்.

962

2858. (இ-ள்.) தண்டகத் திருநாட்டினை.....அருள் செய்வார் - "தண்டகத்திருநாடு" என்னப்படும் தொண்டைநாட்டினைச் சார்ந்து சென்று நமது பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருக்கோயில்களைக் கண்டு துதித்து நாம் வணங்குவோம் என்று அன்பர்களுக்கு அருளிச் செய்வாராய்; காலம் பெற்று....அருள் பெற்று - உரிய காலத்தில் நேர்பட்டுத் தேவர்களுக்கும் அறிவரிதாகிய பெருந் திருத்தோணியில் வீற்றிருந்தருளும் இறைவர்பால் அருள்விடை பெற்று; தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட திருத்தொண்டர்கள் தம்முடனே சூழ்ந்துவரப் புறப்பட; தொடர்ந்து........உரை செய்வார் - தாமும் உடன் வரும்பொருட்டுத் தொடர்ந்து எழுந்த தாதையாருக்கு உரை செய்வாராய்,

960

2859. (இ-ள்.) அப்பர்......எனச் சொல்லி - "அப்பரே! நீர் இனி எம்முடன் வருதலை ஒழிந்து இங்கு அருமறை விதிப்படி தீவளர்த்து வேள்வி செய்துகொண்டு அன்புடனேபவளம்போன்ற சடையினையுடைய இறைவரைத் துதித்துத தங்கியிருப்பீராக!" என்று சொல்லி; மெய்ப் பெருந்தொண்டர்....கொடுத்தருளிப் போய் - பெரிய மெய்த் தொண்டர்களுள் தம்முடன் வாராது மீண்டு தங்குபவர்க்கெல்லாம் விடை கொடுத்தருளிச் சென்று; ஒப்பிலாதவர்தமை...செல்வார் - தமக்கு ஒப்பற்றவராகிய இறைவரை வழியிடையே வணங்கிக்கொண்டு உருகும் அன்புடனே மேற்செல்வாராகி,

961

2860. (இ-ள்.) செல்வம்....ஏத்தி - செல்வம் நிறைந்த தில்லையாகிய தொல்பெரும்பதியினில் இறைவரது திருக்கூத்தினைப் பணிந்து துதித்து; பல்பெரும்.....பாடி - பெரிய தொண்டர்கள் பலரும் எதிர்கொள்ளச் சென்று இறைவரது திருத்தினை நகரினை இறைஞ்சிப் பாடிப் போய்; அங்கு....அணைந்தேத்தி - நிலைபெற்ற திருத்தொண்டர்களுடனே திருமாணிகுழியினை அணைந்து துதித்து; மல்கு....வந்துற்றார் - செறிந்து பொருந்திய நீண்ட சடையினையுடைய இறைவரது திருப்பாதிரிப்புலியூரினை வந்து சேர்ந்தனர்.

962

இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டுரைக்க நின்றன.