| வழியிடை - சீகாழியினின்று தில்லைக்குச் செல்லும் வழியிடையில் உள்ள பதிகளில், "ஆடுவா ருறைபதி நடுவுகண் டனபோற்றி" (2043). இவ்வழி சீகாழியினின்றும் மேற்கே 8 நாழிகையளவு சென்று கொள்ளிடத்தைக் கடந்து வடக்கில் திருநாரையூர் குமராட்சி வழியாய்த் தில்லை சேர்வது என்பதும், வழியிடைப் பணிந்து என்றது திருநாரையூர் முதலிய பதிகள் என்பதும் கருதப்படும். இவ்வழியே ஆளுடைய அரசுகள் தில்லையினின்றும் பிள்ளையாரைக் காணச் சீகாழிக்கு எழுந்தருளிய வழி என்பது முன் (1444) உரைக்கப்பட்டது. இது முன்னாளில் வழங்கிய பழைய வழி என்பர்.. |
|
| 961 |
| 2860. (வி-ரை.) செல்வ மல்கிய தில்லை மூதூர் - "செல்வ நெடுமாடம்" (பிள் - கோயில் - குறிஞ்சி); "உலகுக் கெல்லாம் திருவுடை யந்தணர்" (அரசு - திருவிருத்). |
| திருநடம் பணிந்தேத்தி - இது பிள்ளையார் தில்லையிற் பணிந்து வழிபட்ட இரண்டாவது முறை. முன்முறையில் வழிபாடு விரித்தோதினாராதலினாலும், முன்னர்த் தில்லை வணங்க எண்ணியே சென்றருளியதுபோலன்றி, இப்போது தொண்டை நாடு சென்று கும்பிடக் கருதிச் செல்லும் வழியிடை வணங்குகின்றாராதலினாலும் சுருங்கக் கூறினார். முன்முறை வழிபாட்டு நிலை 2041 - 2081 வரை பாட்டுக்களிலும், மூன்றாம் முறை வழிபட்ட நிலை பின்னர் 3033 = 1135 முதல் 3042 - 1144 வரை உள்ள பாட்டுக்களிலும் காண்க. |
| திருத் திணைநகர் - திருமாணிகுழி - திருப்பாதிரிப்புலியூர் - இவை திருத்தில்லையினின்றும் வடக்கு நோக்கித் தொண்டை நாட்டுக்குச் செல்லும் வழியிடை உள்ளன. இவை நடுநாட்டுப் பதிகள். இவ்வாறு தொண்டைநாடு சென்று கும்பிடக் கருதி வழிக்கொண்ட பிள்ளையார் வழி இடையே நடுநாட்டினில் உள்ள பதிகளையும் வணங்கிச் செல்கின்ற நிலை இது முதற் பத்துப்பாட்டுக்களாற் கூறியருளுகின்றார் (962 - 973); வழியிடை நேர்பட்ட வழிபாட்டினைச் சுருக்கிக் கூறிச் செல்லும் நயமும் காண்க. தொண்டைநாட்டுப் பதிகளாகிய திருவக்கரை - திருஇரும்பை மாகாளம் - என்னும் இரண்டும் இடையில் நேர்பட்டமையால் வழியில் வணங்கப்பெற்றன. |
| 962 |
| திருத் தினை நகர் - பிள்ளையா ரருளிய தேவாரப் பதிகம் கிடைத்திலது! |
| திருமாணிகுழி |
| திருச்சிற்றம்பலம் |
| பண் சாதாரி - 3-ம் திருமுறை |
| பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புன றங்குசடைமேல் வன்னியொடு மத்தமல் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடங் கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபட ரள்ளல்வயல்வாய் மன்னியின மேதிகள்ப டிந்துமனை சேருதவி மாணிகுழியே. | |
| (1) |
| நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவுஞ் சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம் கொத்தலர் மலர்ப்பொழிலி னீடுகுல மஞ்ஞைநட மாடலதுகண் டொத்தவரி வண்டுக ளுலாவியிசை பாடுதவி மாணிகுழியே. | |
| (2) |
| உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல் அந்திமதி சூடியவெம் மானையடி சேருமணி காழிநகரான் | |