[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1217

காப்பு - காவல் புரியும் இடம். "காப்புத் திருத்தாண்டகம்"; "கயிலாயமுன் கண்ணுதலான் றன்னுடைய காப்புக்களே" (தேவா).
முன்னம்...வண்ணமும் மொழிந்து - பிள்ளையார் பதிகம் "முன்ன நின்ற முடக்கான முயற்கருள் செய்து" (1) என்றது காண்க. பதிகப் பாட்டுக் குறிப்பும் தல விசேடமும் பார்க்க.
திருவடுகூர் - திருக்கரை - இவை பிள்ளையர் தொண்டைநாடு - காஞ்சிபுரம் -செல்லும் வழியிடை உள்ளன; அவர் சென்றருளிய வழியையும் குறிப்பன. வக்கரை - தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று. இது திருவடுகூரின் வடக்கில் உள்ளது. தில்லை முதலாக முன் கூறியனவும் இப்பாட்டிற் கூறியனவும், இனி வரும் பாட்டுக்களிற் கூறுவனவும் வழியிடை வரிசைபெற அமைந்தமை காண்க.

963

திருப்பாதிரிப்புலியூர்
திருச்சிற்றம்பலம்

பண்-செவ்வழி-2-ம் திருமுறை

முன்ன நின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள்
புன்னை நின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னை நின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னை நின்ற பிணியாக்கை யைப்பேறு வார்களே.

(1)

அந்த ணல்லா ரகன் காழியுண் ஞானசம்
பந்த னல்லார் பயில்பா திரிப்புலி யூர்தனுட்
சந்த மாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கண்மேல்
வந்து தீயவ் வடையாமை யால்வினை மாயுமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருப்பாதிரிப்புலியூர் இறைவரை வணங்கும் தவமில்லாதவர் பிறவியிற் புகுவர்; அவரை வணங்கவே வினைமெலிந்து அணுகாது; நுணுகும்; மேல் வந்து தீயவை அடையாமையால் முன்வினை மாயும்.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முன்ன நின்ற - முன்வந்து பூசித்த; முடக்கால் முயல் - முடங்கு காலுடன் முயலாகச் சபிக்கப்பெற்ற மங்கண முனிவன்; அருள் செய்து - சாப நீங்கச் செய்து. புன்னை - நெய்தற்கருப்பொருள். வணங்கும் தணைத் தவமில்லிகள் - வணங்குதற்கு ஓரளவேனும் தவமில்லாதவர்கள். தனை - அளவு; பின்னை நின்ற பிணியாக்கையைப் பெறுவார்கள் - மேல் எடுக்கவுள்ள பிறவியிற் பட்டுச் சுழல்வார்; பிணி யாக்கை - உயிரைக் கட்டுறுத்தும் உடல்; பிணியும் யாக்கையும் என்றலுமாம். "பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே" (தேவா). முயற்கருளியதுபோலத் தன்னை வணங்குவோ ரெவருக்கும் உடல் வரும் குற்றநீங்க அருளுவர் என்பது குறிப்பு ;-(2) கொள்ளி நக்க பகுவாய பேய் - எரிகொள்ளி போன்று தீயினை உமிழும் திறந்த வாயினையுடைய பேய்கள்; "சுழலு மழல்விழிக் கொள்ளிவாய்ப் பேய்" (அம்மை மூத்த திருப்பதிகம் - 7); முள்ளிலவம் - இலவின் வகை ;-(3) மருள் இல் நல்லார் - மயக்கமில்லாத நல்லோர்; வெறி - விளையாட்டு (தவங்காண் படலம் - கந்தபுராணம் பார்க்க) ;-(4) போது - மலர்; புகை - தூபம்; போதினாலே - உரிய காலங்களிலே. போது - பொழுது; காலம். நாலும் - நாலுதல்; தொங்குதல். நாலும் அவலம் - நான்காகிய துன்பம் என்றலுமாம் ;-(5) நல்