| லார் - பெண்கள்; "மைப்பூசு மொண்கண் மடநல்லார்" (பிள் - மயிலை); நாகம் - அரையார்த்தவன் - என்க. போகம் - சிவபோகம் ;-(6) மதியம்....முத்தம் திகழ் - புதிய முத்துக்கள் வெண்மணற் பரப்பில் விளங்குதல் மதியைச் சூழ்ந்த கதிர்போல உள்ளது. புது முத்து - மதி; மணற் பரப்பு - மதிசூழ்ந்த கதிர். குதியுங் கொள்வார் விதியும் செய்வார் - குதி - ஆனந்தக் கூத்து; "இன்பமே எந்நாளும் துன்ப மில்லை" (தேவா). "விதியும் செய்தலாவது - வினைப் பயனையும் மாற்றித் தாம் எண்ணியபடி வேறு வகுத்தல் ;-(8) ஊக்கம் - "வீக்கமெழுந்து" இம்மலை பெயர்ப்பேன்" என்னும் முயற்சி. வினை மெலிந்து - அணுகா - நுணுகும் - வினை வலிகுன்றி மெலிந்துபடும்; ஆதலின் தாக்காது; தேய்ந்து செல்லும்; அணுகுதல் - வலிதாய்ப் பற்றுதல். நோக்குதல் - சிவானுபவத்தில் வழுவாது ஊன்றி நிற்றல்; நுணுகும் - மெலிவடையும்; "இறைபணி நிற்குந் தத்துவ ஞானிக்குப் பயிற்சி வயத்தான் ஒரோவழி நாடுமுளம் (உயிருணர்வு) உண்டாதலும் உண்மையின், அதுபற்றிப் பிராரத்த வினையும், அதற்கு வாயிலாகிய உடம்பு முதலிய மாயேயமும் மங்கிப்போய் வாசனை மாத்திரையாய் மெலிதாய் வந்து மூளுமாயினும், அம்மூட்சிபற்றி ஒருதலையானிகழ்வதாகிய ஆகாமியவினை மேலைக்கு வித்தாய் நிலைபெற்று முறுகுதலின்றித் தனக்கு வாயிலாகிய மாயேயத்தோடு கெட்டொழியும்" என்று 10-ம் சூத்திரம் "இறைபணி வழுவாது நிற்க" என்ற இரண்டாமதிகரணம் "இங்குளி வாங்கும் கலம்போல" என்னும் உதாரண வெண்பாவின் சிற்றுரையும் இங்குக் கருதத்தக்கது; அரசுகள் தேவாரக்குறிப்புக்களும் காண்க ;-(9) தன்னாந்தாள் உற்று - தமது சிறு முயற்சிகளால்; தவ - பெரிய ;-(11) வந்து தீயவ் வடையாமையால் - மேல் ஆகாமியவினை வந்து ஏறாமையால். வினை - முன்வினை; மாய்தல் - 8-ம் பாட்டில் காண்க. |
|
| தலவிசேடம் :- திருப்பாதிரிப்புலியூர் - III - பக். 177 பார்க்க. |
| திருவடுகூர் |
| திருச்சிற்றம்பலம் |
| பண்-குறிஞ்சி-1-ம் திருமுறை |
| சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர், கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார் வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே. | |
| (1) |
| படிநோன் பவையாவர் பழியில் புகழான கடிநா ணிகழ்சோலை கமழும் வடுகூரைப் படியா னசிந்தை மொழியார் சம்பந்தன் அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- வடுகூரில் ஆடும் அடிகளாகிய முதல்வர் சுடுகூ ரெரிமாலை யணிவர் என்பது முதலிய தன்மைகளா லறியப்படுபவர். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சுடுகூ ரெரிமாலை - எரியில் வெந்த எலும்பு மாலை. எரி - எரியில் வெந்த எலும்புக்காகி வந்தது. கொடு - கொடிய; வேல் - ஆயுதப் பொது; சூலம் குறித்தது. கடுகூர் - கடிதாய் மிகுகின்ற; பசி.....இல்லார் - பிறவியில் வாராதவர் :- (2) ஏலும் - பொருந்தும்; ஊழித் தீயில் |