1220திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

அணைவுற்றார் - திருவதிகை நகரின்கண் சேர்ந்து திருக்கோயிலைச் சாரவும் சென்று அணைவாராயினர்

964

திருவக்கரை
திருச்சிற்றம்பலம்

பண்-பஞ்சமம்-3-ம் திருமுறை

கறையணி மாமிடற்றான் கரி காடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினா னொரு பாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் றன்றலைரயிற் பலி கொள்பவன் வக்கரையில்
உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழ லுள்குதுமே.

(1)

தண்புன லும்மரவுஞ் சடை மேலுடை யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகா ரிறை வன்னுறை வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- இறைவன் உறையும் இடம் வக்கரையே; வெண்தலையிற் பலிகொண்டுழல் உத்தமானகிய அவன் கழல் உள்குதும்.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) காரிகாடு - சுடுகாடு ;-(2) சந்திரசேகரன் - இப்பதியில் இறைவரது பெயர் ;-(3) வளைத்தான் - வில் வளைத்ததேயன்றி அம்பு எய்யப்படவில்லை என்பது குறிப்பு; இறைஞ்சியவுடன் மூவெயிலும் அனலாய் விழவில் வளைத்தான் - அருள் செய்யும் விரைவு குறித்தது. "கடைதூங்க மணியைக் கை யாலமரர், நாவா யசைத்த வொலியொலி மாறிய தில்லையப்பாற், றீயா யெரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே" (அரசு) ;-(4) வெண்பொடி - திருநீறு ;-(5) தலைமகன் - தலைவன் ;-(6) மதி - மதியும்; உம்மை விரிக்க ;-(7) கான்அணவும் - கானில் வாழும்; இருக்கும். தேன் அணவும் - தேன்வண்டு பொருந்தும். வான் அணவும் - வானத்தை அளாவும். ஊன் அணவும் தலை - ஊன் கமழும் ;-(8) அருள் போற்றலும் - அருளையிரந்து துதித்தலும் - சாமகான மிசைத்தலும்; நன்கு - நாளும் வாளுமீந்த வரம் ;-(9) காதலி - இரதி; சேமமே - கணவனைப் பெறுவாய்.வாமனன் - மால்;-(10) பிண்டியர் - சமணர்; தேடிய தேவர் - இவர் ஆதரித்த புத்தனும் அருகனும்.
தலவிசேடம் :- திருவக்கரை - தொண்டைநாட்டின் பாடல் பெற்ற 20-வது பதி. வக்கிராசுரன் பூசித்த பதி யென்பது பதியின் பெயர்க் காரணம். இவ்வசுரன் வாழ்ந்த இடமென்றற்குப் பல அறிகுறிகள் இன்றும் நோக்கிற் காணப்படும்; மூல இலிங்கமூர்த்தி முகலிங்கம். முதல் யுகத்திலிருந்து ஒவ்வோர் யுக முடிவில் ஒவ்வோர் முகமாய்த் தோன்றலின் இப்போது மூன்று முகங்களுடன் உள்ளதென்றும், இனி நான்காவதாகிய இந்த யுகத்தின் முடிவில் முற்றொரு முகம் தோன்றுமென்றும் சொல்வர். வக்கிரனை வதைத்த பழி போகும்படி காளி பூசித்த பதி என்றும் சொல்வர். காளி கோயில் தனியாய் விளக்கமாய் உள்ளது; மூலலிங்கம் முகலிங்கமாகிய உருவத்திருமேனி தாங்கி நிற்றலின் சிவமூர்த்தம் இருபத்தைந்தனுள் ஒன்றாகிய சந்திரசேகரர் என்ற பெயராற் போற்றப்படுவர்; சுவாமி பெயர் பதிகத்தில் 3-வது பாட்டிற் காண்க. சுவாமி - சந்திரசேகரர்; அம்மை - வடிவாம்பிகை; பதிகம் 1.