[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1223

2863
ஆதி தேவரங் கமர்ந்தவீ. ரட்டானஞ் சென்றணை பவர்முன்னே
பூதம் பாடநின் றாடுவார் திருநடம் புலப்படும் படிகாட்ட
வேத பாரகர் பணிந்துமெய் யுணர்வுட னுருகிய விருப்போடும்
கோதி லாவிசை குலவு"குண் டைக்குறட் பூத"மென் றெடுத்தோதி;

965

2864
பரவி யேத்திய திருப்பதி கத்திசை பாடினார், பணிந்தங்கு
விரவு மன்பொடு மகிழ்ந்தினி துறைபவர், விமலரை வணங்கிப்போய்,
அரவ நீர்ச்சடை யங்கணர் தாமகிழ்ந் துறைதிரு வாமாத்தூர்
சிரபு ரத்துவந் தருளிய திருமறைச் சிகூறவர்சென் றணைவுற்றார்.

966

(இ-ள்.) ஆதி......அணைபவர் முன்னே - ஆதிதேவராகிய சிவபெருமான் அத் திருநகரினுள் விரும்பி வீற்றிருந்தருளிய திருவீரட்டானத்தினைச் சென்று அணைபவராகிய பிள்ளையார் முன்பு; பூதம்....காட்ட - பூதகணங்கள் பாடநின்றாடும் இறைவர் தமது திருநடனத்தினைக் கட்புலப்படும்படி காட்டவே; வேத பாரகர்.... விருப்போடும் - வேதம் வல்ல பிள்ளையார் வணங்கி மெய்யுணர்வினுடனே மனமுருகிய விருப்பத்தினோடு; கோதிலா.... ஏடுத்தேத்தி - குற்றமில்லாத இசையுடன் கூடிய "குண்டைக் குறட்பூதம்" என்று தொடங்கித் துதித்து;

965

2864. (இ-ள்.) பரவி......பாடினார் - போற்றித் துதித்த திருப்பதிகத்தின் இசையினைப் பாடியருளினாராகி; பணிந்தங்கு....உறைபவர் - வணங்கி அத் திருப்பதியில் பொருந்திய அன்புடனே மகிழ்ந்து இனிதாகத் தங்குபராகிய; சிரபுரத்து....சிறுவர் - சீகாழியில்வந் தவதரித்தருளிய திருமறைக்குலத்துப் பிள்ளையார்; அரவு.........திருவாமாத்தூர் - பாம்பும் நீரும் தாங்கிய சடையினையுடைய அங்கணராகிய இறைவர் மிக்க மகிழ்ச்சியுடன் எழுந்தருளிய திருவாமாத்தூரினை; சென்று அணைவுற்றார் - போய் அணைந்தருளினார்.

966

இந்த இரண்டு பாட்டுக்களும் ஒருமுடிபு கொண்டன.
2863. (வி-ரை.) அங்கு - அத்திருவதிகை நகரின்கண்.
வீரட்டானம் - திருக்கோயிலின் பெயர்.
அணைபவர் - முன்னே - நடம் - காட்ட - என்க. நடம் காட்ட - பிள்ளையார் திருக்கோயிலுட் சென்று காண்பதன் முன்னே அங்கணையும் வழியிடையே காணும்படி காட்ட; "எதிர்காட்சி கொடுத்தருள" (258); "சென்றவர் காணா முன்னே யங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்த" (753) முதலியவை காண்க.
முன்னே நடம் புலப்படும்படி காட்டினார் - என்பது "ஆடும் வீரட்டானத்தே" என்ற பதிகத்தின் மகுடத்தானும் கருதப்படும். "வீராட்டனத்தே" என்றதனால் அத்திருக்கோயிலுக்குப் புறத்தே இப்பதிகம் போற்றப்பட்டதென்பதும், "ஆடும்" என்றதனால் நடம் கண்ட காட்சி என்பதும் தெரிக்கப்படுதல் காண்க. இவ்வாறு முன்பே காட்டக் கண்டது பிள்ளையாரது திருவடி மறவாத உறைப்பினால் ஆயது என்க. முன்னே - முன்பு என்றும், அவர் வந்து காண்பதற்கு முன் என்றும் உரைக்க நின்றது.
வேத பாரகர் - பாரம் - கரை; கர் - அடைந்தவர்; வேதத்தின் கரையை அடைந்தவர்.