1224திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

மெய்யுணர்வுடன் - ஆடற் காட்சி கண்டு திளைத்து நின்ற மெய் உணர்வு மாறாது.
குண்டைக் குறட்பூதம் - சிவ பூதகணங்கள்; இது பதிகத் தொடக்கம். "கோடி கோடி குறட்சிறு பூதங்கள், பாடி யாடும் பரப்பது பாங்கெலாம் (16).
கோதிலாவிசை - ஆடல் கண்டு காட்டும் வகையால் கோது(மலம்) நீக்கும் தன்மை வாய்ந்த என்பதும் குறிப்பு.
வேதபாலகர் - மெய்யுருகியவன்புறு - எடுத்தேத்தி - என்பனவும் பாடங்கள்.

965

2864. (வி-ரை) பாடினாராகி - உறைபவராகிய - மறைச்சிறுவர் என்று விரித்துக் கூட்டி முடிக்க; பாடினார் - பாடினாராகி; முற்றெச்சம்.
அங்கு...உறைபவர் - திருவதிகை நகரில் சில நாள்கள் அன்புடன் தங்கியருளினார் என்பது. அரவம் - ஓசையினையுடைய என்றலுமாம்.
அங்கணர் - பசுக்களுக்கு அருள் புரிந்தவர் என்ற தல வரலாற்றுச் சிறப்புக் குறிப்பு. சிறுவர் - உருவமும் பருவமும் குறித்தது.
திருவதிகை வீரட்டானம்
திருச்சிற்றம்பலம்

பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை

குண்டைக் குறட்பூதங் குழும வனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.

(1)

எண்ணா ரெயிலெய்தா னிறைவ னனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடிப் பரம னதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே.
(4)
ஞாழல் கமழ்காழி யுண்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீ ரதிகைவீரட் டானத்துச்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பூதம் பாடநின் றாடுவார் திருநடம் புலப்படும்படி முன்னே காட்டக் கண்டு "ஆடும் வீரட்டானத்தே" என்று பாடியது.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) குண்டை - குறுகித் தடித்த; குண்டைக் குறள் - மிகக் குறிய. குழுமுதல் - கூட்டமாதல்; பூதங்கள் முன் வருதலால் அவற்றை முதலிற் கூறினார். மருள் - குறிஞ்சிப் பாடல் வகையுள் ஒன்று; பொன் விரி - பொன் போல விரிகின்ற;- (2) அலைத்தல் - கீழ்ப்படுத்துதல்; உவமப் பொருளில் கூறும் மரபு; கரும்பின் - இன் - உவமஉருபு; இனிய என்றலுமாம்;- (3) ஆடல் - நாகம் - அசைத்தாட - தன்னியல்பின் ஆடும் நாகம் நடனத்தால் அசைக்கப்பட்டு மேலும் மிகஆட; படுதம் - கூத்து வகை ;- (4) எண்ணார் - எண்ணாத பகைவர்; திரிபுரவாணர். எயில் எய்தான் - எரித்தான்; இத்தலத்தில் நிகழ்ந்த வீரம்;- (5) திருநின்று - செம்மைதர