1226திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

கடைச்சங்கத்துப் புலவர் பெருமான் கபிலராற் பாடப்பட்டவனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய மலயமான் திருமுடிக்காரி என்னும் அரசன் மலையமானாட்டிற் பெண்ணையாற்றின் கரையிற் றிருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டான் எனவரும் பத்துப் பாட்டுப் பழைய வரலாறும் காண்க.
குலவிய இசை - இப்பதிகப் பண்ணாகிய சீகாமரப் பண்ணின் சிறப்பும் குறிப்பதென்பர்.

967

திருஆமாத்தூர்
திருச்சிற்றம்பலம்

பண் - சீகாமரம் - 2-ம் திருமுறை

குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடைபெறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை சூளி கைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையு மாமாத்தூ ரம்மானே.

(1)

வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநட
மாடன் மேயதென்னென் றாமாத்தூ ரம்மானைக்
கோட னாக மரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
பாடல்பத் தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆமாத்தூ ரம்மானே! நீ மும்மதில் வென்றவா றெங்ஙனே? கார்விடம் வெருவ வுண்டுகந்த வருளென்? என்றிவ்வாறு அவரது அருளிப்பாடுகள் பலவற்றையும் வினவிக் கேட்டுத் திளைத்தது.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) குன்ற வார்சிலை...எங்ஙனே - சிலையும் வாளியும் இத்தன்மையனவாக, வென்றவாறு எங்ஙனம் கூடிற்று? என்பது; சிலையும் வாளியும் வெற்றி தரும் நிலையில் அமைந்தில என்பது; குன்ற வார்சிலை - கல்லாதலின் வில்லாக வளைக்கலாகாது என்பது. குன்ற - என்பது குறைவுபட என்ற தொனியும் தர நின்றது; அரி - எரி. - காற்று மூன்று கூறாக அமைந்த அம்பு வலியிலது என்பது; இப்படைகளானன்றி உனது இச்சையினாலே வென்றனை என்பது துதியின் குறிப்பு. இவ்வாறே பின் வருவனவெல்லாம் கண்டுகொள்க. பெண்ணை - பனை; தென்றலார்...அணையும் - நகரத்தின் இயற்கை வருணனை - தன்மை நவிற்சி; இவ்வாறே மேல் வருவனவும் கண்டுகொள்க;- (2) வெருவ - வெருவும்படி; பம்பை - நதி; திருக்கோவலூரின் கிழக்கே அணிமையில் பெண்ணையாற்றின்றும் பிரியும் ஆறு;- (3) கேழல் மருப்பு - பன்றியின் கோடு; "ஏன முளைக்கொம்பு"(தேவா). மருப்பும் - அரவும் - கொன்றையும் - ஆமையு(ஓடு)ம் என்றிவற்றை; உம்மைகள் விரிக்க; வாள் வரி ஆமை - ஒளி பொருந்திய வரிகளையுடைய ஆமை முதுகோடு;- (4) பெண்ணைப் பாகம்வைத்து யோகமிருத்தல் என்னை என்பது; ஏல - பொருந்த;- (5) தொண்டர் உண்டியால் வருந்த விரங்காததென்? - தொண்டர்கள் விரதம்பூண்டிளைத்தல் நோக்கிக் கூறுதல்; வாண் முகம் - முகம் போல் விளங்கும்;- (6) "சோதியே சுடரே" (திருவா); நன்னெறி நீதி - ஞானநெறியின் முறைமை; "நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டி" என்றதும் காண்க;- (7) மான் - மான் போன்றவர்; ஊட - கங்கையா ளிருந்தமையால் ஊடல் கொள்ள; பங்கயம்....அதிர்க்கும் - உரு