|
| வகம்; நாடகச் சுவைபடக் கூறியவாறு; விண் முழவு அங்கையால் அதிர்க்கும் - விண் - முழவோன்; அங்கை - ஒலியலைகள்; முழவு - ஒலி; அதிர்த்தல் - முழக்குதல்;- (8) நின்றடர்த்திடும்...வென்று - ஐம்புலனும் வென்று என்று இறைவர்பாற் கூறுதல் உபசாரம்; "பொறிவாயி லைந்தவித்தான்" (குறள்);- (9) நிமிர்கின்ற வெற்றிமை தையலாளொடும் ஐயமேற் றுகத்தல் - பொருந்தாதென்பது;- (10) அலர்தூற்ற - பேணநின்ற பான்மை என்? - ஒருகாலத்தே ஒருவகையார் ஏசவும் ஒருவர் பேசவும் நிற்றல் ஒன்றோடொன்று ஒவ்வாத இருதன்மைகள் என்பது. |
| II திருவாமாத்தூர் |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - சீகாமரம் - 2-ம் திருமுறை |
| துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி யன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன் பொன்னங் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே. | |
| (1) |
| ஆட லரவசைத்த வாமாத்தூ ரம்மானைக் கோட லிரும்புறவிற் கொச்சை வயத்தலைவன் நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்றன் பாட லிவைவல்லாக் கில்லையாம் பாவமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- திருவாமாத்தூர் இறைவரது கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே; அவரைக்காணாத கண் முதலியவை தத்தம் பயன் பெறாதவையே; அவரடியவர் சார்பேயன்றி வேறு சார்பு இல்லோம். |
| பதிகப்பாட்டுக் குறிப்பு :- பொக்கம் - பொய்; "பொக்க மிக்கவர் பூவும்"(தேவா);- (2) பேயர் - பித்தர்; பேய் கோட்பட்டவர்;- (3) தேம்பல் - மெலிந்து வருந்துதலுடைய; சாம்பல் - திருநீறு; சாம்பலகலத்தார் - நீறு பூசிய மார்பினையுடைய அடியவர்;- (4) ஆணாகம் - ஆண் பாகமாகிய உடம்பு - மார்பு என்றலுமாம்;- (5) வேடநெறி - திருவேடமே மெய்ப்பொருள் என்றுகொண் டொழுதுதல்;- (7) வேறாக நில்லாத - பிரியாது உடனாய் நிற்கின்ற ;- (9) புள் - கருடக் கொடி - அள்ளல் - சேறு. |
| தலவிசேடம் :- திருஆமாத்தூர் - III - பக். 202 பார்க்க. |
2866 | கோவ னீடிய வீரட்ட மமர்ந்தவர் குரைகழல் பணிந்தேத்தி ஆவி னைந்துகந் தாடுவா ரறையணி நல்லூரை யணைந்தேத்திப் பாவ லர்ந்தசெந் தமிழ்கொடு பரவுவார் பரவுசீ ரடியார்கள் மேவு மன்புறு மேன்மையாந் தன்மையை விளங்கிட வருள்செய்தார். | |
| (இ-ள்) கோவல் நீடிய...ஏத்தி - திருக்கோவலூரின்கண் திருவீரட்டக் கோயிலில் விரும்பி எழுந்தருளிய இறைவரது சத்திக்கின்ற கழலணிந்த திருவடிகளை வணங்கித் துதித்து; ஆவின் ஐந்து....பரவுவார் - ஆனைந்தும் விரும்பியாடி யருள்வாராகிய இறைவரது திருவறையணி நல்லூரைச் சென்று அணைந்து துதித்துப் பாட்டுக்களாக |