|
| மலர்ந்த தமிழ்ப் பதிகத்தினாற் போற்றுவாராகிய பிள்ளையார்; பரவுசீர்...அருள் செய்தார் - இறைவரது புகழ்களையே பரவி வாழும் சிறப்புடைய அடியார்களது பொருந்திய அன்பினால் உளதாகும் மேம்பாடாகிய தன்மையினை உலகம் அறிந்துய்யும்படி அருளிச் செய்தார். |
| (வி-ரை) கோவல் நீடிய வீரட்டம் - கோவல் - ஊர்ப் பெயர்; வீரட்டம் - கோயிலின் பெயர். இறைவரது வீரங்கள் எட்டனுள் அந்தகாசுர வதம் நிகழ்ந்த பதி. "அந்தகன் கோவல்". |
| ஆவின் ஐந்து - பஞ்சகவ்வியம் எனப்படுவன ஐந்தும் இறைவர் விரும்பியாடும் திருமஞ்சனப் பொருள். ஆன் பெற்ற அஞ்சு (916) என்றவிடத் துரைத்தவை பார்க்க. |
| அறையணிநல்லூரை யணைந்து - பெண்ணையாற்றின் தென்கரையில் திருக்கோவலூரும் அதற் கெதிர்ப்புறம் வடகரையில் மலையின் மேல் திருவறையணிநல்லூரும் உள்ளன. மெய்ப்பொருணாயனார் புராணப் படம் பார்க்க. மலைமிசை வலங்கொள்வார் - என மேல்வரும் பாட்டிற் கூறுதல் காண்க. |
| பரவு சீரடியார்கள்...மேன்மையாம் தன்மை - பதிக மகுடமும் கருத்தும் காண்க. "அறையணி நல்லூ ரங்கையாற் றொழுவார்களே - பீடினாற் பெரியோர்கள் - வீடினா லுயர்ந்தார்கள்" என்பன முதலாக வருவன பதிகக் கருத்தாக எடுத்துக் காட்டப்பட்டவாறு. |
| விளங்கிட - உலகம் விளங்க அறிய. |
| 968 |
| திருக்கோவலூர் |
| திருச்சிற்றம்பலம் |
| திருவிராகம் பண் - நட்டராகம் - 2-ம் திருமுறை |
| படைகொள் கூற்றம் வந்து மெய்ப் பாசம் விட்ட போதின்கண் இடைகொள் வாரெ மக்கிலை யெழுக போது நெஞ்சமே குடைகொள் வேந்தன் மூதாதை குழகன் கோவ லூர்தனுள் விடைய தேறுங் கொடியினான் வீரட் டானஞ் சேர்துமே. | |
| (1) |
| கழியொ டுலவு கானல்சூழ் காழி ஞான சம்பந்தன் பழிக டீரச் சொன்ன சொற்பாவ நாச மாதலால் அழிவிலீர்கொண் டேத்துமி னந்தண் கோவ லூர்தனில் விழிகொள் பூதப் படையினான் வீரட் டானஞ் சேர்துமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- யாக்கை நிலையாமையினையும், நரை, திரை, மூப்புப், பிணி, சாக்காடு என்றிவை வந்து துன்புறுத்தும் நிலைகளையும் உலக முயற்சிகளில் மக்கள் பட்டுழலும் இழிபுகளையும் எடுத்து வற்புறுத்தி அவை தீரும் வழியாவது திருக்கோவலூரைச் சார்ந்து வழிபடுதலேயாம் என்று உபதேசித்தது. "பழிக டீரச் சொன்னசொற் பாவ நாச மாதலால்" என்ற பதிகத் திருக்கடைக்காப்புக் காண்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) காலன் உயிர்கொள்ள வருதல் உறுதி. அப்போது காலகாலரும், அந்தகாசுரனை வதைத்தவரும் ஆகிய வீரட்டரைத் தவிர வேறு துணையில்லை என்று உபதேசித்தது; 2 - 3-ம் பாட்டுக்களில் உலக முயற்சிகளின் இழிபும், 4 முதல் 8 வரை பாட்டுக்கள் பிணிகளின் துன்பமும் முதலியவற்றை எடுத் |