[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1229

துக்காட்டி அவற்றினின்றும் நீங்கும் வழியை உபதேசித்தன; திருக்கடைக் காப்புப் பார்க்க. அதனுள் பழிகள் உடல்பற்றிய உலக வாதனைகளையும், பாவம் உயிரைப் பற்றிய மலவாதனைகளையும் குறித்தன. மெய்ப் பாசம் - உறுதி தவிராத காலபாசம். உடலைப் பிரிக்கும் பாசம் என்றலுமாம். இடைகொள்வார் - கூற்றனுக்கும் பாசம் பிணிக்கும் உயிருக்கும் இடையில் நின்று தடுக்கவல்லார்; வேந்தன் - உலகங் காவல் புரியும் மன்னரின் பொதுமை உணர்த்தியது போலும். "குடைகொள் வேந்தன்" - இது திருக்கோவலூர் புராணத்திற் கூறப்பட்ட தெய்விகராஜனைக் குறிக்கலாம். இவன் முற்பிறப்பில் பருவதராஜனா யிருந்தவன். இவன் வரலாற்றைத் தலபுராணத்திற் பரக்கக் காணலாம் (வ.சு.செ.);- (2) கரவலாளர் - செல்வத்தை வைத்திருக்கும் ஈயாது காக்கும் உலோபிகள். இரவல் - இரத்தல் செய்யற்க; அல்லீற்று எதிர்மறைவியங்கள். நெஞ்சமே இரவல் என்றது இரத்தலை மனத்தினும் கொள்ளாதே என்றதாம். ஆழி - வாழி என்பது ஆழி என நின்றது. "துயரயாழி" (5), "குறிகொளாழி" (10) என்பனவுமிக் கருத்து. யாழ் செய் - யாழ்போலப் பண்பாடும்;- (3) அள்ளற்சேறு - ஒருபொருட் பன்மொழி - மிகுதி குறித்தது. கொள்ள - ஆன்மாக்கள் உட்கொண்டு உய்யும்பொருட்டு;- (4) பனைகள் உலவு - இந்நாட்டுப் பக்கம் பனைகள் மிகுதியுமுண்டு; வினையை வென்ற வேடம் - சிவவேடம். வேடம் - வெல்லுதற்குத் துணையாய் நின்ற. "தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்துத் தன்னுணரத் தன்னு ளிருத்தலால்" (போதம் - 12 - 3 - வெண்பா);- (5) உளங்கொள் போகம் - மனம் கொள்ளத் தக்கதாய் விதிக்கப்பட்ட சிவபோகம்; உய்த்திடார் - உய்த்திடாராகி; வளம்....வயல்கள் - பெண்ணையாற்றின் நீர்ப்பெருக்கின் வளம் குறித்தது; விளங்கு - மறைப்பொருளாய் விளங்கும். "ஓங்குகோ வணப் பெருமை"(515) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க;- (6) ஆடு - குறியாடு; வீடுகாட்டு நெறி - சைவநெறி. "மிகுசைவத் துறை"(1899);- (7) விரைகொள் சீர் - திருநீற்றுப் பதிகம் பார்க்க;- (8) போது - அலரும் பருவமுள்ள அரும்பு; போது - அலர்தற்கு உரிய காலம் என்றலுமாம் ;- (9) நீறுபட்ட - நீறுபடிந்த; -(10) குறிகொள் - குறிக்கொள்வாயாக. அவத்தம் - பிழை; அபத்தம் என்பது வடமொழி; பயனற்றது என்றலுமாம்; -(11) கானல் - மணற்காடு; பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் - பதிகப் பயன்; அழிவு - பிறப்பு இறப்பாகிய துன்பம்.
தலவிசேடம் :- திருக்கோவலூர் - I - 467-ம் பாட்டின்கீழும் மெய்ப்பொருணாயனார் புராணத் திறுதியிலும், III - பக். 204-லும் உரைத்தவை பார்க்க. இப்பதி மேலூர் கீழுர் என இரண்டு பகுதியாயுள்ளது. மேலூரே திருக்கோவலூர் என வழங்கப்படுகின்றது. கோயில் கீழுரில் உள்ளது; அம்மை கோயில் தனியாயுள்ளது. மேலூரில் திரிவிக்ரமப் பெருமாள் என்னும் விட்டுணு கோயில் உள்ளது.
திருஅறையணிநல்லூர்
திருச்சிற்றம்பலம்

பண் - காந்தாரம் - 2-ம் திருமுறை

பீடி னாற்பெரி யோர்களும் பேதை மைகெடத் தீதிலா
வீடி னாலுயர்ந் தார்களும் வீடி லாரிள வெண்மதி
சூடி னார்மறை பாடினார் சுடலை நீறணிந் தாரழல்
ஆடி னாரறை யணிநல்லூ ரங்கை யாற்றொழு வார்களே.

(1)