|
| கழியு லாங்கடற் கானல்சூழ் கழு மலமமர் தொல்பதிப் பழியி லாமறை ஞானசம் பந்த னல்லதோர் பண்பினார் மொழியி னாலறை யணிநல்லூர் முன்கண் மூர்த்திதன் றாடொழக் கெழுவி னாரவர் தம்மொடுங் கேடில் வாழ்பதி பெறுவரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- இறைவரது புகழ்களைப் பரவும் அடியார்களது அன்புறு மேன்மையாந் தன்மை விளங்கிட அருள்செய்தது; 2866-ல் ஆசிரியர் காட்டியருளிய படி கண்டுகொள்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :-(1) பீடு - பெருமை; "மேன்மையாந் தன்மை"(2866); பேதைமை - அறியாமை; ஆணவ மறைப்பு. தீதிலா வீடினால் - வீடு பெறுந் தன்மையால். வீடிலார் - இறப்பிலாதவர்; இறைவன் தொழுவார்களே - பெரியோர்களும், உயர்ந்தார்களும் ஆவர் என்று கூட்டுக. 3-வது பாட்டினையும் இவ்வாறே கூட்டுக;- (2) கால் உற - கால் வளைத்து;- (3) பின்பினால் - பின்புறம்; பின்னுதலினால்; மூவர் - அயனரியரன் என்ற குணமூர்த்திகள்; அன்பினால் - "அன்புறு மேன்மை"(2866);- (4) பரவுவார் - "பரவு சீர்" (2866);- (5) பாயினாய் - பாய்ந்து உதைத்தாய்;- (6) உரை - முன்னையது துதி; பின்னையது புகழ் என்ற பொருளில் வந்தன;- (7) வீரம் ஆகிய - வீரம் செய்ய எண்ணிய; இங்குக் குறித்தது யானையுரித்த வீரம்; வாரம் - அன்பு;- (9) தேறி யின்புறில் - நோயிலார் - தீதிலார்; பின் செலார் - என்று கூட்டுக. அலங்காரமாம் - தவமாம். "செய்தனவே தவமாக்கும்"(திருவா); "ஞானநிட்டை யுடையோருக்கு நன்மையொடு தீமையிலை"(சித்தி - 8-32); சைவனார் - சிவனார்; "ஐயாறதனிற் சைவனாகியும்"(திருவா);- (10) வாக்கியம் - வேதநூல் விதிகள்; குறையுடையீரேல் - குறைந்தடைந்தீராகில்; குறைசொல்லிப் புகலடைந்தால். |
| தலவிசேடம் :- திருவறையணி நல்லூர் - நடுநாட்டில் பாடல்பெற்ற பதிகளுள் 12-வது பதி; தம் வனவாசத்தின்போது பாண்டவர்கள் கண்ட ஐந்து அறைகளால் அலங்கரிக்கப்பட்ட நல்லூர் என்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது; அறைகண்ட நல்லூர் எனவும் வழங்குவது; இக்கோயில் திருக்கோவலூருக்கு எதிரில் பெண்ணையாற்றின் வடகரையில் மலைமேல் உள்ளது; மேற்குப் பார்த்த சந்நிதி; 1 சுவாமி - அறையணிநாதர்; அம்மை - அருணாயகி; தீர்த்தம் - பெண்ணையாறு; பதிகம் 1. |
| இது விழுப்புரம் - காட்பாடிக் கிளையில் திருக்கோவலூர் நிலையத்தினின்றும் வடக்கே ? நாழிகையளவில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. |
2867 | சீரின் மன்னிய பதிகமுன் பாடியத் திருவறை யணிநல்லூர் வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்தம் மலைமிசைவலங்கொள்வார் பாரின் மல்கிய தொண்டர்க ளிமையவர் நாடொறும் பணிந்தேத்தும் காரின் மல்கிய சோலையண் ணாமலை யன்பர்காட் டிடக்கண்டார். | |
| 969 |
| (இ-ள்) சீரின்...பாடி - சிறப்பினால் நிலைபெற்ற திருப்பதிகத்தினைப் பாடி; அத்திருவறையணிநல்லூர்...வலங்கொள்வார் - அந்தத் திருவறையணிநல்லூரில் வாரணிந்த
|
| 1 இம்மலையின் மேலிருந்து பார்த்தால் திருவண்ணாமலைச் சிகரம் தரிசிக்கலாம்; 2867 பார்க்க. |