[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1231

கொங்கையினையுடைய அம்மை பங்கராகிய இறைவரது திருமலையின்மேல் வலம் வருபவராகிய பிள்ளையார்; பாரின்...அண்ணாமலை - இந்த உலகில் மிகுந்த தொண்டர்களும் தேவர்களும் நாள்தோறும் பணிந்து துதிக்கின்ற மேகங்கள் தவழ்தற்கிடமாகிய சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலையினை; அன்பர் காட்டிக் கண்டார் - அன்பர்கள் காட்டியிடக் கண்டருளினர்.
(வி-ரை) மலைமிசை வலங்கொள்வார் - திருவறையணிநல்லூர்த் திருக்கோயில் மலையின்மேல் இருத்தலால் மலையின்மேல் வலங்கொண்டருளினர்; வலங்கொள்வார் - வினைப்பெயர். வலங்கொள்வார் - கண்டார் - என்று கூட்டுக.
தொண்டர்கள் இமையவர் - எண்ணும்மை விரிக்க. பாரின் மல்கிய என்றதனை இரண்டிடத்திலும் கூட்டுக. பாரிடந்தும் விண்பறந்தும் பெருந் தேவர்களாகிய அரியும் அயனும் காணமாட்டாது இளைத்து நிற்க, இறைவர் அவர்கள் கண்டு வழிபட இலிங்கவடிவுடன் அங்கு முளைத்து நிற்றலின் அவ்விருவரும் அவருள்ளிட்ட ஏனைத்தேவர்களும் வந்து இங்கே பாரின் மல்கி நாடோறும் வழிபட்டு நிற்கின்றனர் என்பது. தேவரறியாத தேவதேவர் மானிட ருய்யவேண்டி இங்கு முளைத்தெழுந்து காண எளியராய் நிற்றலின் பாரின் மல்கிய தொண்டர்களும் நாடொறும் அத்தேவருடன் தாமும் பணிந்தேத்துகின்றனர் என்பது; இக்கருத்தை "உரக ரருந்தவ ருவண நெடுங்கொடியோர், பரவி நெருங்கலி லுலகநி றைந்தவர் பணியு மிடங்கிடையா, தரகர வென்பது கடலின் முழக்கிய தருணை வளம்பதியே" என்று சுவைபடப் போற்றினர் அருணாசல புராணக்காரர்.
காரின் மல்கிய சோலை - சோலைகளின் வளத்தினால் மேகங்கள் வந்து தவழ்கின்றன என்றும், மேகமண்டலம் வரை சோலைகள் செழித்துயர்ந்து வளர்ந்து நின்றன என்றும் உரைக்க நின்றது. காரின் - கார்போல நிழல் செய்து என்றலுமாம்.
அன்பர் காட்டிடக் கண்டார் - இவ்வாறு இறைவரது தன்மை கூறிச் சுட்டிக் காட்டுதலே அன்பர் செய்கை என்க. இவ்வாறு முன்னர்ப் பிள்ளையார் திருநனிபள்ளி, திருவாலவாய் கண்டருளியதுவும், இனி திருக்காளத்தி காண்பதுவும் கண்டு கொள்க.

969

வேறு
2868
அண்ணா மலையங் கமரர்பிரான் வடிவு போன்று தோன்தலுங்
கண்ணாற் பருகிக் கைதொழுது கலந்து போற்றுங் காதலினால்
"உண்ணா முலை"யா ளெனும்பதிகம் பாடித் தொண்ட ருடன்போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா மலையைச் சென்று சேர்வுற்றார்.

970

(இ-ள்) அண்ணாமலை....தோன்றுதலும் - திருவண்ணாமலை அவ்விடத்தினின்று காணும் காட்சி தேவதேவராகிய சிவபெருமானது திருவடிவம்போலத் தோன்றுதலும்; கண்ணாற் பருகி...பாடி - கண்களால் ஆரக்கண்டு பருகுதல்போல நுகர்ந்து கைகளாற் றொழுது கலந்து, போற்றுகின்ற பெருவிருப்பினாலே "உண்ணாமுலை யுமையாள்" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளி; தொண்டருடன் போந்து.....சேர்வுற்றார் - தொண்டர்களுடனே போய்த் தெளிந்த நீரினைத் தலையிற் சூடியவராகிய இறைவரது திருவண்ணாமலையினைச் சென்று சேர்ந்தருளினர்.
(வி-ரை) அண்ணாமலை....தோன்றுதலும் - அரியும் அயனும் காணாவண்ணம் வானமும் நிலமுங் கடந்த பேரொளியுடைய அழற்றூணாகி நின்ற இறைவர் அத்திரு