[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1239

எல்லாக் கடவுளரைப்பற்றியும் எடுத்தோதிச் சிவனை உள்ளிடத்தில் வைத்துக் கூர்ந்து நோக்கி யறியுமாறு வைத்துக் கூறும் என்ற குறிப்புப்பெற வைப்பார் ஆரணத்தின் பொருளாய் என்னாது உட்பொருளாய் என்றார்; தேவர் முனிவர்க்கு வேதம் ஓதுவித்த பதியாதலும் குறிப்பு.
ஆரணத்தி னுட்பொருளாய் நின்றார் - சங்காரமும் சிருட்டியும் பெற வைத்தமையின் ஐந்தொழிலும் பெறுவித்தபடியாம். "கூத்தீர்" என்ற பதிகக் குறிப்புக் காண்க. அவ்வாறு வரும் உயிர்களுக்கேற்றவாறு இறைவர் மறைஞானமுணர்த்த உணர்ந்து அவை வழிபட்டு உய்தி பெறுகின்றன என்றது. "பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி, யேத்தா தாரிலை யெண்ணுங்கால்" எனும் பதிகத்தாற் பெறப்படுதலும் காண்க. இனி இப்பதியில் நிகழவுள்ள அற்புத அருட்செயலின்கண், அமணர் இழித்துரைத்த மாசறுத்து அறிவுறுத்தியருளி சங்காரநிலைக் குறிப்பும் (2876 - 2880), ஆண்பனைகள் குறும்பையினை அருளிய புனருற்பவநிலைக் குறிப்பும் (2881), பனைகளுக்கும் பாசநீக்கமும் சிவப்பேறும் அருளிச் சைவத்தின் உட்பொருளாகிய சிவனருட் குறிப்பும்(2879 - 2881) மறையாகிய திருப்பதிகத்தின் வாய்மையினால் விளைதல் காணவுள்ள குறிப்பும் இம்மூன்று தன்மைகளாற் பெறவைத்த நலமும் கண்டுகொள்க. "போக்கு வரவு புரிய" (2-ம் சூத். போதம்) என்றவிடத்து மாபாடியத்தில் உரைத்தவை இங்கு நினைவுகூர்தற்பாலன. "பந்தம்வீடு தரும் பரமன்"(300) என்றவிடத்துரைத்தவையும் பார்க்க. "அந்தமாதி"(1), "போக்கு வரவு" (2) என்னும் கருத்துக்கேற்ப ஈண்டும் "வார ணத்துரி போர்த்த மைந்தனார்" எனச் சங்காரக் குறிப்பை முற்கூறியதும் கருதத் தக்கது.
கழல்போற்றும் காரணத்தின் வரும் இன்பக்கண்ணீர் - மாயாகாரியங்களின் தொடர்ச்சிபற்றியே மக்களுக்கு உலகிற் பெரும்பான்மை இன்பக்கண்ணீர் வரும். அவ்வாறல்லாது இங்கு இறைவர் கழல்போற்றும் தொடர்புபற்றி வந்தது என்று வேறு பிரித்துக் கூறியபடி. அரியயனுக்கும் எட்டுதற்கரிய கழல் போற்றக்கிடைத்த எளிமையும் அருமையும்பற்றிக் கண்ணீர் வந்ததென்க. "வழுத்தியுங் காணா மலரடி யிணைகள், வழுத்துதற் கெளிதாய்"(திருவா - போற்றித் திருவகவல்); துன்பினாலும் கண்ணீர் வருமாதலின் அதனை நீக்க இன்பக் கண்ணீர் என்றார்.

976

2875
தொழுது விழுந்து பணிந்தெழுந்து சொன்மா லைகளாற் றுதிசெய்து
முழுது மானா ரருள்பெற்றுப் போந்து வைகி முதல்வர்தமைப்
பொழுது தோறும் புக்கிறைஞ்சிப் போற்றி செய்தங் கமர்வார்முன்
அழுது வணங்கி யொருதொண்ட ரமணர் திறத்தொன் றறிவிப்பார்;

977

2876
"அங்கை யனலேற் றவர்க்கடியே னாக்கும் பனைக ளானவெலாம்
மங்கு லுறநீண் டாண்பனையாய்க் காயா தாகக் கண்டமணர்
"இங்கு நீரிட் டாக்குவன காய்த்தற் கடைவுண் டோ?"வென்று
பொங்கு நகைசெய் திழித்துரைத்தா, ரருள வேண்டு" மெனப்புகல,

978

2877
பரம னார்தந் திருத்தொண்டர் பண்பு நோக்கிப் பரிவெய்தி
விரவு காத லொடும் விரைந்து விமலர் கோயில் புக்கருளி
அரவு மதியும் பகைதீர வணிந்தார் தம்மை யடிவணங்கி
யிரவு போற்றித் திருப்பதிக மிசையிற் பெருக வெடுத்தருளி,

979