|
2878 | விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப் பதனில் விமல ரருளாலே "குரும் பையாண் பனையீனு" மென்னும் வாய்மை குலவுதலால் நெருங்கு மேற்றுப் பனையெல்லா நிறைந்த குலைக ளாய்க்குரும்பை யரும்பு பெண்ணை யாகியிடக் கண்டோ ரெல்லா மதிசயித்தார். | |
| 980 |
| 2875. (இ-ள்) தொழுது...போந்து வைகி - முன்கூறியவாறு கைகள் கூப்பித் தொழுது நிலமுற விழுந்து வணங்கி எழுந்து திருப்பதிகங்களாற் றுதித்து எல்லாமாய் நின்ற இறைவரது திருவருள் பெற்றுப் புறம்போந்து எழுந்தருளியிருந்து; முதல்வர்தமை...அமர்வார் முன் - முதல்வரைக் காலங்கள் தோறும் புகுந்து வணங்கித் துதித்து அங்கே விரும்பி யிருப்பவராகிய பிள்ளையார் திருமுன்பு; அழுது...அறிவிப்பார் - ஒரு தொண்டர் அழுது வணங்கி நின்று அமணர்களது தன்மைபற்றி ஒரு செய்தியை அறிவிப்பாராய்; |
| 977 |
| 2876. (இ-ள்) அங்கை...காயாதாகக் கண்டு - அங்கையிலே நெருப்பினை ஏந்திய இறைவருக்காக அடியேன் பயிரிட்டு உளவாக்கிய பனைகள் எல்லாம் மேகமண்டலம் பொருந்த நீண்டு வளர்ந்தும் ஆண்பனைகளாகிக் காய்க்காதனவாதலைக் கண்டு; அமணர்... இழித்துரைத்தார் - அமணர்கள் "இங்கு நீவிர் வைத்து உண்டாக்கும் பனைகள் காய்ப்பதற்கு உபாயம் உண்டோ?" என்று மிகவும் எள்ளி நகைத்து அழிவுபடப் பேசுகின்றார்கள்; 'அருளவேண்டும்' எனப்புகல - தேவரீர் அவ்விழிபைப் போக்கப் பனைகள் காய்க்கும்படி அருள்புரிய வேண்டும் என்று சொல்ல; |
| 978 |
| 2877. (இ-ள்) பரமனார்தம்...பரிவெய்தி - இறைவரது திருத்தொண்டரது அடிமைத்திறத்தை நோக்கித் (பிள்ளையார்) திருவுள்ளத்தே இரக்கம் கொண்டு; விரவு...புக்கருளி - பொருந்திய பெருவிருப்பினோடு விரைந்து சென்று இறைவரது திருக்கோயிலில் புகுந்தருளி; அரவு மதியும்....அடிவணங்கி - பாம்பினையும் சந்திரனையும் பகைதீரும்படி தலையிற்சூடிய இறைவரை அடிவீழ்ந்து வணங்கி; இரவுபோற்றி.,... எடுத்தருளி - திருவருளை இரந்த துதித்துப் 'பூத்ே்தர்ந் தாயன' என்னும் திருப்பதிகத்தினைப் பண்ணிசையினாற் பெருகும்படி பாடியருளத் தொடங்கி; |
| 979 |
| 2878. (இ-ள்) விரும்பும்....குலவுதலால் - மேன்மை விரும்புகின்ற திருக்கடைக்காப்பிலே இறைவரது திருவருளினாலே "குரும்பைகளை ஆண்பனைகள் ஈனும்" என்னும் வாய்மையானது பொருந்தி விளங்குதலாலே; நெருங்கும்...ஆகியிட - நெருங்கிய அந்த ஆண்பனைகள் எல்லாம் நிறைந்த குலைகளையுடையனவாகிக் குரும்பை பொருந்தும் பெண்பனைகளாக மாறியிடவே; கண்டோர் எல்லாம் அதிசயித்தார் - கண்டவர்கள் எல்லாரும் அதிசயப்பட்டார்கள். |
| 980 |
| இந்நான்கு பாட்டுக்களும் ஒருமுடிபு கொண்டுரைக்க நின்றன. |
| 2875. (வி-ரை) தொழுது - முன்பாட்டிற் கூறியபடி கைதொழுது. |
| தொழுது...துதிசெய்து - வினையெச்சங்கள் வழிபாட்டின் பகுதிகளைத் தனித்தனி எடுத்துக்காட்டும் நயம் கண்டுகொள்க. |
| சொன்மாலைகளாற் றுதிசெய்து - இப்பதிகங்கள் கிடைத்தில. |
| அமர்வார் - விரும்பி வீற்றிருப்பவராகிய பிள்ளையார். |
| அழுது - சமணர் இழித்துரைக்கும் சிவநிந்தையைக் கேட்கமாட்டாத துயரத்தால் அழுது; ஆனந்தபாக்ஷ்பம் என்று உரைப்பாமுண்டு. |
| அமணர் திறத்து ஒன்று - அமணரது தீய தன்மையினால் நிகழ்ந்ததொரு செய்தி. திறத்து - திறத்தால் நிகழ்ந்த. |