|
| யினைத் திருமுடியில் அணிந்த இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் சென்று துதித்து; மங்கை பாகர்....போய் - உமைபங்கராகிய இறைவர் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் வயல்கள் சூழ்ந்த திருமாகறலைப் போற்றிச் சென்று; கொங்கு...குறுகினார் - மணம் பொருந்திய மலர்களையுடைய நீர் சூழ்ந்த திருக்குரங்கணின் முட்டத்தினருகு சென்று சார்ந்தருளினர். |
| (வி-ரை) பதிகள் பல - இவை புரிசைநாட்டுப் புரிசை, திருவன்பார்த்தான் பனங்காட்டூர், விலிவலம் முதலாயின என்பது கருதப்படும். |
| வயல்மாகறல் - "விங்கு விளைகழனி" (1), "மடைகொள் புனலோடு வயல்"(11) என்று பதிகத் தொடக்கத்தும் இறுதியிலும் வயலின் சிறப்புப்பற்றி வரும் குறிப்புப்படக் காட்டியவாறு; இவ்வயலின் சிறப்பு இன்றும் காணவுள்ளது. |
| கொங்கு மலர் நீர் - (முட்டம் என்னும்) காக்கை வழிபட்டு மூக்கினாற் கீறிய காக்கைமடு கோயிலைச் சுற்றியுள்ள நீர்ச்சிறப்பும் தலவிசேடமும் குறிப்புப் பெற இவ்வாற்றாற் கூறினார். கொங்கு - வாசம்; மணம். தலவிசேடம் பார்க்க. "கழுநீர் கொழுநீர்" என்ற பதிகமும் பார்க்க. |
| குறுகினார் - அணிமையிற் சென்றருளினார். |
| 984 |
| திருமாகறல் |
| திருச்சிற்றம்பலம் |
| திருவிராகம் | பண் - சாதாரி - 3-ம் திருமுறை | |
| விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம் மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான் கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான் செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்க டீவினைக டீருமுடனே. | |
| (1) |
| கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன் அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால் மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளானடியையே யுடையதமிழ் பத்துமுணர் வாரவர்க டொல்வினைக ளொல்குமுடனே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- செஞ்சடையினான் - செங்கண்விடை யண்ணல் - என்பன முதலிய தன்மைகளாற் போற்றப்படும் மாகறலுளாராகிய இறைவரது அடிசேர்பவர்களது தீவினைகள் உடனே தீரும். பதிக முழுதும் வினைத்தீர்வுக் குறிப்புக் காண்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) விங்கு - மஞ்சள் என்பர்; மங்குலொடு நீள் - மேகம்வரை நீண்ட; அரவம்மிகு கழனியும், கொடிகள் மலி மாடமும் நீடுபொழிலும் உடைய மாகறல் என்க;- (2) இலையின்மலி - இலைவடிவுள்ள;- (3) துந்துபிகள் முதலாயின காலையொடு மாலையிலும் முழக்கி வழிபாடு செய்து என்பதாம்; பாலை அன - பாலைப்போன்ற வெண்மை நிறமுடைய; - (4) இங்கு - தங்கும்; "இங்கு சுவையின்னமிர்தம்"(சிந்தா);- (5) துஞ்சு நறு தீலம் - இரவில் இதழ் விரியாத நீலமலர்; இருள் நீங்க - இரவுபோய் விடிய; ஒளி தோன்றும் - பகலில் மலர்ந்து தனது நிறம் விளங்கும்;- (6) படிமம் - உருவம்; ஒல்க - சுருங்க;- (7) வெய்ய வினை நெறிகள் செல - பிராரத்தம் அனுபவித்துக் கழிய; வந் |