1250திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

வேதமோடு சைவநெறி விளங்க வந்த - "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க"(1899) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.
மாதொர்பாகர் தாம் மன்னும் - காஞ்சியாகிய இப்பதியில் அம்மை பூசித்துத் தழுவி வரம் பெற்ற வரலாற்றுக் குறிப்புப்படக் கூறியவாறு. "தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை"(நம்பி. தேவா); "தழுவிக் கொண்டனள்" (1140) முதலியவை காண்க.
மதில்சூழ் காஞ்சி - முத்தி தருவனவாகிய ஏழு பெரும்பதிகளுள் ஒன்றாதலும், சோழ மன்னர்களின் தலைநகராதலும் குறிப்பு. திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் பார்க்க. "தெய்வப் பதியென்று வைய முழுதும் தொழுதேத்தும் மதில்சூழ் காஞ்சி" (1581) என்றது காண்க.
நீதி வழுவா - என்பதும் பாடம்.

985

திருக்குரங்கணின் முட்டம்
திருச்சிற்றம்பலம்

பண் - தக்கராகம் - 1-ம் திருமுறை

விழுநீர் மழுவாட் படையண்ணல் விளங்குங்
கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயுங்
கொழுநீர் வயல்சூழ்ந்த குரங்கணின் முட்டந்
தொழுநீர் மையர்தீ துறுதுன்ப மிலரே.

(1)

கல்லார் மதிற்காழியுண் ஞானசம் பந்தன்
கொல்லார் மழுவேந்தி குரங்கணின் முட்டஞ்
சொல்லார் தமிழ்மாலை செவிக்கினி தாக
வல்லார்க் கெளிதாம் பிறவாவகை வீடே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- (1) விழுநீர் மழுவாட் படை - விழுநீர் - ஆகாயத்தினின்றும் இறைவரது சடையிற் பொருந்திச் சிறிதாக விழும் கங்கை. நீரும் மழுவும் வாட்படையும் உடைய; விழுநீர் - விழுத்தும் எனப் பிறவினையாகக் கொண்டும் நீர் - நீர்மை என்று கொண்டும் அழித்தற் றொழிற்றன்மையுடைய மழு என்றலுமாம்; படைகளானன்றி நினைப்பின் மாத்திரையானே (அழிவு) வீழ்த்தற்றொழில் நிகழ்வதாம் என்ற குறிப்புப்பட விழும் என்றார் என்றலுமாம்; "நினையாதார் புரமெரிய நினைந்த", "சூலமும் தண்டுஞ் சுமந்ததுண்டு" (ஏவப்பெறாமல் சுமந்தது) (தேவா); "கழுநீர்... கொழுநீர்" - "கொங்குமலர் நீர்" (2882) என்று ஆசிரியர் இதனை எடுத்துக் காட்டியருளினர்; 2 - 3-வது பாட்டுக்களும் பார்க்க; தீதுறு - தீமையால் வரும்; ஊழால் வருவனவும் துன்பஞ் செய்யாது உடலூழாய்க் கழியப் பெறுவர் என்பது;- (2) கடை - இடை - அயலே; அருகே; ஏழனுருபு; மென்குளத் தோங்கிய....புனல் - இது கோயிலைச் சுற்றியுள்ள காக்கைமடுவின் குறிப்பு; மென் - குளம் - மெல்லிய சிறிய பொய்கை; குடையார் - குடைதல் - நீராடல் - பொருந்திய;- (3) ஏலம் - வாசனைப் பொது; கொன்றை முதலிய மலர்களின் மணங் குறித்தது; ஒரு பாகம் சடையினுடன் விரவிய அம்மையாரது கூந்தலின் மலர்ச்சாந்தினது மணம் என்றலுமாம்;- (4) வாடாவிரி - வாடுதலின்றி எப்போதும் விரிந்துள்ள; கொன்றையான் - என்க. நலபாலன...செய்த - நன்மையான பக்குவம் நோக்கித் துன்பங்